Erodu Siragukal

Erodu Siragukal வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி 9 மணி வரை மரம் நடும் அமைப்பு இதுவரை 2,00,000 மேல் நடவு மரம் தான் மரம் தான் எல்லாம் மரம் தான்

வாரந்தோறும் மரம் நடும் பணி  ஞாயிற்றுக்கிழமை 14.6.26 காலை 6.30 மணிக்கு ஈரோடு ரயில்வே காலனி பகுதியில் மரங்கள் நடவு செய்ய உ...
14/06/2026

வாரந்தோறும் மரம் நடும் பணி

ஞாயிற்றுக்கிழமை 14.6.26 காலை 6.30 மணிக்கு ஈரோடு ரயில்வே காலனி பகுதியில் மரங்கள் நடவு செய்ய உள்ளோம்

இதுபோல வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 9 மணி வரை மரங்கள் நடும் பணி மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்க எப்ப வேணாலும் வந்து இணைந்து பணியாற்றலாம் எவ்வளவு மணி நேரம் வேணாலும் இணைந்து சேவை செய்யலாம் வாருங்கள் இணையுங்கள் ஈரோடு சிறகுகளுடன்

உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள் விருப்பமுள்ளவர்கள் அவர்களும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கும்

அழைக்கவும்

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள் தலைவர்
9786669999

ஈரோடு சிறகுகள்
9626289999

7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Bayling Machine சுற்றுச்சூழலுக்காக வழங்கிய சமூக சாதனையாளர்கள்  சக்தி மசாலா நிறுவனம்ஈரோட்டுக்க...
13/06/2026

7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Bayling Machine சுற்றுச்சூழலுக்காக வழங்கிய சமூக சாதனையாளர்கள் சக்தி மசாலா நிறுவனம்

ஈரோட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முதலில் வந்து நிற்கும் பெயர்களில் முக்கியமானது சக்தி மசாலா நிறுவனர் திரு.துரைசாமி அவர்கள் மற்றும் திருமதி.சாந்தி துரைசாமி அவர்கள்.

ஈரோட்டை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் Clean City Erode திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
குப்பைகள் சாலைகளுக்கு வரக்கூடாது… அனைத்தும் முழுமையாக மறுசுழற்சிக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

இந்த திட்டம் ஒரு நாள் செய்யும் வேலை அல்ல.
தொடர்ச்சியாக செயல்படும் ஒரு பெரிய சமூக இயக்கமாக உருவாக வேண்டும்.
அதற்காக அடிமட்ட சேகரிப்பிலிருந்து மறுசுழற்சி மையம் வரை நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் தேவைப்படுகிறது.

இந்த திட்டங்களை பற்றி கேட்டறிந்த சக்தி மசாலா நிறுவனத்தினர்,
நாங்களும் இந்த சமூக பணியின் முதல் கட்ட பங்காளிகளாக இருக்க விரும்புகிறோம் என்று அழைத்து ஆலோசித்து, சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Plastic Baling Machine ஒன்றை வழங்க உதவி செய்துள்ளனர்.

இந்த மெஷின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை அழுத்தி கட்டிகளாக மாற்றி முறையாக மறுசுழற்சிக்கு அனுப்ப முடியும்.
இது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும், சமூக நம்பிக்கையாகவும் உள்ளது.

சமூக பொறுப்புடன் எங்களின் சேவைக்கு தோள் கொடுத்த சக்தி மசாலா நிறுவனத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் பல நவீன மிஷின்கள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகிறது.
ஒருவர் தனியாக உதவலாம்…
பலர் இணைந்து உதவலாம்…
சங்கங்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்த பணியில் இணைந்து கொள்ளலாம்.

*எங்களால் மட்டும் முடியாது…அனைத்து அமைப்புகளும் இணைந்தால் தான் ஈரோட்டை முழுமையாக தூய்மைப்படுத்த முடியும்.*

உங்களிடம் ஆலோசனைகள் இருந்தாலும் வரவேற்கிறோம்.
இந்த சேவைக்கு ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

வாருங்கள்…
இணைந்து பணியாற்றலாம்…
ஈரோட்டை சுத்தமான, பொறுப்பான நகரமாக மாற்றலாம்

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9786669999

ஈரோடு சிறகுகள்
Waste management team

கார்த்தி
98652 90870

திவ்யா
97864 35383

பிலால்
யான் பவுண்டேஷன்
+917373065656

பெஸ்ட் சிவகுமார்
ஈரோடு சிறகுகள் செயலாளர்
9842729229

இலை தழை மக்கும் குப்பைகளை உரமாக மாற்ற கம்பி வலை கம்போஸ்ட் ட்ரம் கல்லூரி வளாகங்களில் அமைக்க திட்டம்Nano Bubble Technology...
12/06/2026

இலை தழை மக்கும் குப்பைகளை உரமாக மாற்ற கம்பி வலை கம்போஸ்ட் ட்ரம் கல்லூரி வளாகங்களில் அமைக்க திட்டம்

Nano Bubble Technology மூலம் ஏரி, குளங்களில் தண்ணீரை சுத்தப்படுத்த ஆலோசனை

தூய்மை பணியாளர்களுக்கு குப்பை பிரிப்பு மற்றும் மறுசுழற்சி பயிற்சி

ஈரோடு வேளாளர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுடன் கல்லூரி வளாகத்தில் Waste Management தொடர்பாக கலந்து ஆலோசனை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் விழும் மர இலைகள் மற்றும் இலைத் தழை குப்பைகளை இயற்கை உரமாக மாற்றுவதற்காக கம்பி வலை கம்போஸ்ட் ட்ரம்கள் ஆங்காங்கே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரம்களில் தூய்மை பணியாளர்கள் தினசரி இலைகளை சேர்த்துக் கொண்டே வந்தால், சுமார் 10 நாட்களில் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மக்கி இயற்கை உரமாக மாறும். பின்னர் ட்ரமின் கீழ்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கதவை திறந்து தயாரான உரங்களை எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், கோயம்புத்தூரை சேர்ந்த Anora Lites நிறுவன உரிமையாளர் திரு.செந்தில் அவர்களுடன் Nano Bubble Technology மூலம் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீரை சுத்தப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதிநவீன மறுசுழற்சி (Recycling) இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

வேளாளர் இன்ஜினியரிங் கல்லூரியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு:

மக்கும் குப்பைகள்

மக்காத குப்பைகள்

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள்

மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள்

ஆகியவற்றை எப்படி பிரிக்க வேண்டும், ட்ரம்களை எந்த இடங்களில் அமைக்கலாம் என்பதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

விரைவில் 30ஆவது வார்டு பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து Clean City Erode திட்டத்தை தொடங்க ஆலோசனை செய்யப்பட்டது.

தொடர்ந்து பலரும் அழைத்து தங்களது பகுதிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று கிழக்கு தொகுதியில் ஒரு வார்டு அல்லது வீதியை தேர்வு செய்து அங்கும் இந்த திட்டத்தை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9786669999

ஈரோடு சிறகுகள்
Waste management team

கார்த்தி
98652 90870

திவ்யா
97864 35383

பிலால்
யான் பவுண்டேஷன்
+917373065656

பெஸ்ட் சிவகுமார் ஈரோடு சிறகுகள் செயலாளர்
9842729229

ஆட்சியர் மற்றும் சத்தி மசாலா நிறுவனர் உடன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் ஆன ஆலோசனை நடந்ததுஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு...
10/06/2026

ஆட்சியர் மற்றும் சத்தி மசாலா நிறுவனர் உடன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் ஆன ஆலோசனை நடந்தது

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி சார் அவர்களுடன் திண்டல் பகுதியில் வார்டு 10, 19 ,30 ஆகிய பகுதியில் அனைத்து விதமான குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது பற்றி விழிப்புணர்வும் அதை சரியாக தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது திட்டத்தின் வடிவத்தை விரைவாக எடுத்துரைத்தோம்.

அவரிடம் சில ஆலோசனைகளை பெற்றோம்.. மாவட்ட ஆட்சியரும் எங்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தினார் மிக்க நன்றி ஐயா..

பின்னர் நமது திட்டத்தை பார்த்து சக்தி மசாலா நிறுவனர் திரு துரைசாமி ஐயா அவர்களும் திருமதி சாந்தி துரைசாமி அக்கா அவர்களும் நம்ம ஊரு சுத்தமா இருக்கோன்னு அதற்கு நீங்க
என்ன செய்றீங்க எப்படி எல்லாம் செய்யப் போறீங்க உங்களுக்கு என்ன உதவி வேணும் என்று சமுதாய பணிக்காக கேட்டார்கள் அவர்களும் அவர்களுடைய இத்தனை வருட சமுதாய சேவை செய்த அனுபவங்களையும் பகிர்ந்தார்கள் எங்களுடன் ஆலோசனையும் நடத்தினார்கள் இதற்காக அவர்கள் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேலிங் மெஷின் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.
அவர்களுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எங்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது...

விரைவில் இந்த மூன்று வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் அரசு அதிகாரிகள் கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என உதவி உடன் முன்மாதிரியான சுத்தமான வார்டு உருவாக்க இருக்கிறோம்.

இதற்கு பல்வேறு சேவை பணியாளர்கள் தேவை

மேலும் இதற்கு வாகன உதவிகள் அதிநவீன மிஷின்கள் தேவைப்படுகிறது இந்த சமூக பணி உணர்ந்து உதவ வாருங்கள் என அன்போடு அழைக்கிறோம்

கூடுதலாக இந்த பணிகளை செய்ய *சம்பளத்துக்கு வேலை ஆட்கள் தேவைப்படுகிறது விருப்பப்படுபவர்கள் அழைக்கலாம்*

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9786669999

ஈரோடு சிறகுகள்
Waste management team

கார்த்தி
98652 90870

திவ்யா
97864 35383

பிலால் யான் பவுண்டேஷன்
+917373065656

பெஸ்ட் சிவகுமார் ஈரோடு சிறகுகள் செயலாளர்
9842729229

மாண்புமிகு அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களை வாழ்த்தினோம் விரைவில் சுற்றுச்சூலுக்காக கலந்து ஆலோசனை செய்ய இருக்கிறோம்தமி...
09/06/2026

மாண்புமிகு அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களை வாழ்த்தினோம் விரைவில் சுற்றுச்சூலுக்காக கலந்து ஆலோசனை செய்ய இருக்கிறோம்

தமிழக அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு.விஜய் பாலாஜி அவர்களை சந்தித்து வாழ்த்தி பாராட்டினோம் ஈரோடு சிறகுகள் சார்பாக

அமைச்சர் அவர்கள் ஈரோடு முழுவதும் மரங்கள் நடுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கும் விரைவில் கலந்து ஆலோசிக்கலாம் என்று சொல்லி உள்ளார்..
மிக்க மகிழ்ச்சி அவருக்கு நன்றியும் வாழ்த்தியும் பாராட்டுகளையும் தெரிவித்து வந்தோம்.

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9786669999

பெஸ்ட் சிவகுமார் ஈரோடு சிறகுகள் செயலாளர்
9842729229

10, 19,30 வார்டு   தூய்மை பணி தொடங்கலாமா என ஆலோசனை zone 3 அதிகாரிகளுடன் ஈரோடு சிறகுகள் வார்டுக்கு 100 பேருக்கு மேல் பொறு...
08/06/2026

10, 19,30 வார்டு தூய்மை பணி தொடங்கலாமா என ஆலோசனை zone 3 அதிகாரிகளுடன் ஈரோடு சிறகுகள்

வார்டுக்கு 100 பேருக்கு மேல் பொறுப்பாளர்கள் வேண்டும்

*ராகி கூல் மூலிகை சூப்பு சிறுதானிய காலை இட்லி தோசை மதியம் உணவு தூய்மை பணியாளர்களுக்கும் சேவையாளர்களுக்கும்*

*Sponsors (ஆதரவாளர்) பல உதவிகள் தேவை*

ஈரோடு சிறகுகள் அடுத்த கட்ட சேவை பணியாக தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வார்டு அதில் ஒரு குறிப்பிட்ட வீதி என கொஞ்சம் கொஞ்சமாக ஈரம் இல்லாத அதாவது *மிகுந்த துர்நாற்றம் வீசக்கூடிய பொருளாக இல்லாமல்* சுத்தமான dry waste முதல் கட்டமாக அவைகளை வீட்டில் இருந்து பொதுமக்களிடம் தினமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒவ்வொன்றையும் எப்படி பிரிக்க வேண்டும் எது எது உடனடியாக மறுசுழற்சிக்கு செல்லும் பொருட்கள் பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் என முழுமையாக பிரித்துக் கொடுக்க ஏற்படுத்தி அதை தூய்மை பணியாளர்கள் மூலம் தனித்தனியாக கொண்டு வந்து மறுசுழற்சிக்கு அனுப்ப zone 3 ஈரோடு மாநகராட்சி மண்டல 3 அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தோம்..

மண்டல அனைத்து அதிகாரிகளுக்கும் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்...

பின்னர் ஈரோடு சிறகுகள் நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது

இதில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கிக் கொண்டு வருகிறோம்.

குறிப்பா சொல்லப்போனா இன்னும் பத்து வருடங்கள் கழித்து *தூய்மை பணிக்கு எவ்வாறு ஆட்கள் அமையும் என்பது கேள்விக்குறி..*

அதற்குள் பல்வேறு விதமான மாற்றங்கள் கொண்டு வந்தால் தான் தூய்மை பணியை செய்ய முடியும்..

எங்களுடைய ஆலோசனைகளும் திட்டங்களும்..

தற்பொழுது வார்டுக்குள் முதல் கட்டமாக *எங்களுடன் ஒத்துழைக்கும் பொதுமக்கள் வீதியில்* தினமும் 2 எலக்ட்ரிக் ஆட்டோவில் காலை 6.30 லிருந்து 8 மணிக்குள்

*ஒரு வண்டியில் இரண்டாகப் பிரித்து*

ஒரு பகுதியில் ஈரக் குப்பை (Wet Waste)
உணவு மீதிகள்
காய்கறி / பழ தோல்கள்
பூக்கள்
சமையல் கழிவுகள்
இலைகள்

இன்னொரு பகுதியில்

சிறப்பு கவனிப்பு / ஆபத்தான குப்பை (Special Care / Domestic Hazardous Waste)
பழைய battery
tube light / bulb
expired medicine
paint container

சுகாதாரக் குப்பை (Sanitary Waste)
பயன்படுத்திய sanitary napkin
diaper
tampon
சேகரிக்கலாம்

*பின் அடுத்து வரும் வண்டியில்*

உலர் குப்பை (Dry Waste)
பிளாஸ்டிக்
காகிதம்
கார்ட்போர்டு
கண்ணாடி
உலோகம்
ரப்பர்
சேகரிக்கலாமா என திட்டம்

இந்தப் திட்ட பணிக்கு
உதவிகள் தேவை என்ன என்றால்

முதல் கட்டமாக 4 எலக்ட்ரிக் ஆட்டோ

8 தூய்மை பணியாளர்கள்

ஒரு வார்டுக்கு 100 பேர் பொறுப்பாளர்கள் (சேவையாளர்கள்) விழிப்புணர்வுக்கு தேவைப்படுகிறது.

அதிநவீன இயந்திரங்கள் தேவைகள்
conveyor belt machines
hydraulic baling machine
மக்கும் குப்பை மக்காத குப்பைகள் அரைக்கும் இயந்திரங்கள்
முட்டை ஓடு அரைக்கும் இயந்திரம்
என பல்வேறு இயந்திரங்கள் தேவைப்படுகிறது.

நமக்காக சேவை செய்யும் நல்ல உள்ளங்கள் மற்றும்

நகரத்தை சுத்தமாக வைக்க உதவி கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நல்ல சம்பளத்துடன் காலையில் நேரத்தில் வந்தவுடன் ராகி கூல் பின் காலை உணவாக சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி , தோசை , பொங்கல் , உப்புமா இதில் ஏதாவது ஒன்று குழம்புடன் கொடுப்பதற்கும்

மற்றும் சுமார் 11 மணி அளவில் காய்கறி சூப்பு அல்லது மூலிகை சூடு ஏற்பாடு செய்யலாமா மற்றும் மதியம் சிறுதானியங்கள் ஆன உணவுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்

இதற்கான ஆதரவாளர்கள் sponsors தேவைப்படுகிறார்கள்..

இவையெல்லாம் *ஒரே நாளில் ஏற்பாடு செய்ய முடியுமா என்றால் அது உடனடியாக முடியாது*

கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த வேண்டும் அதற்கான பல்வேறு கட்ட ஆலோசனைகளும் திட்டங்களும் உதவி கொடுப்பவர்களையும் அணுகி அவரிடம் புரிய வைத்து உதவி பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்..

நம்ம ஊர நாம சுத்தமா வைக்காம வேற யார் உருவாக்க முடியும் *நமக்காக வெளியூரில் இருந்து தான் வருவார்களா?*

நாம்தான் உருவாக்க வேண்டும்..

இதற்கு முதல் கட்டமாக பொதுமக்கள் தான் விழிப்புணர்வாக இருந்து உதவ வேண்டும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் (residential welfare association) குடியிருப்பு நலச் சங்க பொறுப்பாளர்கள்
ஓய்வு பெற்றவர்கள் மூத்தோர்கள் இளம் சிங்கங்கள் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு தொழில் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கங்களும் என தனித்தனியாக தங்களுக்கான பொறுப்புகள் எடுத்து முன் வர வேண்டும்...

இதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோம் நீங்களும் வரவேண்டும் என ஈரோடு பசுமைக்காக அழைக்கிறோம் வாருங்கள்..

யான் பவுண்டேஷன் ஈரோடு சிறகுகள்
மற்றும் பல அமைப்புகள்

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9786669999

ஈரோடு சிறகுகள்
Waste management team

கார்த்தி
98652 90870

திவ்யா
97864 35383

பிலால்
யான் பவுண்டேஷன்
+917373065656

பெஸ்ட் சிவகுமார்
ஈரோடு சிறகுகள் செயலாளர்
9842729229

யான் பவுண்டேஷன் ஈரோடு சிறகுகள் இணைந்து dry waste management solutions ஈரோடு மாநகரில் ஈடுபட இருக்கிறோம்திரு.பிரதீப் அவர்க...
03/06/2026

யான் பவுண்டேஷன் ஈரோடு சிறகுகள் இணைந்து dry waste management solutions ஈரோடு மாநகரில் ஈடுபட இருக்கிறோம்

திரு.பிரதீப் அவர்கள் ஈரோட்டில் பிறந்து சென்னையில் ஒரு பெரிய ஐடி நிறுவனம் உருவாக்கி இன்று இந்திய அளவிலும் உலக அளவில் நடத்தி வருகிறார்...

அவர் யான் பவுண்டேஷன் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார் அதில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார்கள்
அவர்களுடன் ஈரோடு சிறகுகள் ஈரோட்டில் மக்காத பொருட்கள் (குப்பைகள்) dry waste யை அனைத்தும் ரோட்டுக்கு போகாதவாறும் குப்பை கிடங்குக்கு செல்லாதவாறும் சரியாக தனித்தனியாக பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று இணைந்துள்ளோம்.

அதற்காக குறிப்பிட்ட பகுதியில் தேர்ந்தெடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன்
தமிழக அரசு ஒத்துழைப்புடன் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்

அதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகள் செய்துள்ளோம்

குறிப்பு பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் பல நாள் நாம் அனைத்து குப்பைகளையும் ஒன்றிணைந்து குப்பையாக தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்துள்ளோம் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் மாற வேண்டும் அதேபோல குப்பைகளை நான்கு வகையாக பிரிக்க வேண்டும்

அந்த 4 வகை குப்பைகள்:

ஈரக் குப்பை (Wet Waste)
உணவு மீதிகள்
காய்கறி / பழ தோல்கள்
பூக்கள்
சமையல் கழிவுகள்
இலைகள்

இதை உரமாக (Compost) மாற்றலாம்.

உலர் குப்பை (Dry Waste)
பிளாஸ்டிக்
காகிதம்
கார்ட்போர்டு
கண்ணாடி
உலோகம்
ரப்பர்

மறுசுழற்சி (Recycling) செய்யப்படும்.

சுகாதாரக் குப்பை (Sanitary Waste)
பயன்படுத்திய sanitary napkin
diaper
tampon
தனியாக மடித்து கொடுக்க வேண்டும்.

சிறப்பு கவனிப்பு / ஆபத்தான குப்பை (Special Care / Domestic Hazardous Waste)
பழைய battery
tube light / bulb
expired medicine
paint container

chemical பொருட்கள்

இதை சாதாரண குப்பையுடன் கலக்கக் கூடாது.

பச்சை கலர் டப்பா – wet waste ஈரக் குப்பை

நீலம் கலர் டப்பா– dry waste உலர் குப்பை

சிகப்பு கலர் டப்பா (Sanitary Waste)– சுகாதாரக் குப்பை

கருப்பு கலர் டப்பா – (Hazardous Waste) ஆபத்தான குப்பை

பிரித்துக் கொடுத்தால் தான் அதெல்லாம் முறையாக அந்தந்த மறுசுழற்சிக்கும் செல்லும் அதே போல நம்ம நகரமும் சுத்தமாகும்

நம்ம ஊர நாம தான் சுத்தமாக வச்சுக்க வேண்டும் நீங்க இணைந்து பணியாற்ற வாருங்கள் விருப்பமுள்ளவர்கள்

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9786669999

ஈரோடு சிறகுகள்
Waste management team

கார்த்தி
98652 90870

திவ்யா
97864 35383

பிலால் யான் பவுண்டேஷன்
+917373065656

பெஸ்ட் சிவகுமார் ஈரோடு சிறகுகள் செயலாளர்
9842729229

சமையல் கலைஞர்கள் • மண்டப உரிமையாளர்கள் • தூய்மை பணியாளர்கள் • விசேஷ நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அன்பான வேண்டுகோள்தற்போது...
27/05/2026

சமையல் கலைஞர்கள் • மண்டப உரிமையாளர்கள் • தூய்மை பணியாளர்கள் • விசேஷ நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அன்பான வேண்டுகோள்

தற்போது திருமணங்கள், விசேஷ நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் இருந்து அதிகளவில் Bulk Waste (மொத்த குப்பைகள்) உருவாகின்றன.
இந்த குப்பைகளை குப்பைக்கிடங்குகளுக்கு அனுப்புவதற்கு முன்பே கீழ்க்கண்டவைகளை தனித்தனியாக பிரித்தால் மறுசுழற்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிகவும் உதவியாக இருக்கும்:

வாட்டர் பாட்டில்கள்

டீ கப் / தண்ணீர் கப் / பாயாசக் கப் / ஸ்வீட் கப்
வாழை இலைகள்

டேபிள் விரிப்புகள்

காய்கறி மற்றும் உணவு கழிவுகள்

இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் வாழை இலை மற்றும் உணவு கழிவுகளை ஆடு, மாடு, பன்றிகள் போன்றவற்றிற்கு உணவாக பயன்படுத்தலாம்.
மற்ற மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றவும் முடியும்.

இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சி.
அதற்காக கூடுதலாக ஆட்களை நியமித்து முறையாக குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியை செய்ய வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை சமையல் கலைஞர்களுக்கும் கேட்டரிங் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல கேட்டரிங் நிறுவனங்களும் மண்டப உரிமையாளர்களும் தற்போது ஈரோடு சிறகுகள் Waste Management Team உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்கிறோம்.

உங்களிடம் நல்ல ஆலோசனைகள் அல்லது நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்கள் இருந்தால் தயங்காமல் பகிருங்கள்.
முடிந்தவரை செயல்படுத்த முயற்சி செய்கிறோம்.
கல்லூரிகள், பெரிய நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஈரோடு சிறகுகள் சேவையில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் தொடர்புக்கு:
விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள் – தலைவர்

97866 69999

Waste Management Team (குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பும் குழு)

கார்த்திக்
98652 90870

திவ்யா
97864 35383

பெஸ்ட் சிவகுமார்
ஈரோடு சிறகுகள் –
செயலாளர்
98427 29229


23/05/2026

விடுமுறையில் குழந்தைகளுக்கு இதுபோல சொல்லிக் கொடுங்கள்

share to all

ஈரோடு சிறகுகள் உறுப்பினர் திருமதி திவ்யா ஜெயபிரகாஷ் அவர்களின் குழந்தைகளுக்கு உலர்ந்த குப்பைகள் dry waste எப்படி தரம் பிரிப்பது என அழகாக சொல்லிக் கொடுத்துள்ளார் தற்பொழுது பள்ளியில் விடுமுறை உங்கள் குழந்தைகளுக்கும் இதுபோல சொல்லிக் கொடுங்கள்....

இந்த வீடியோவை எல்லோருக்கும் பகிருங்கள் யாராவது குழந்தைகள் இதுபோல செய்ய ஆரம்பிக்கலாம்

மேலும் இதைப் பற்றி உங்களுக்கு விவரங்களாக தெரிய வேண்டும் என்றால் அழையுங்கள்

விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள்
தலைவர்
9796669999

கார்த்திக்
+919865290870

திவ்யா
+919786435383

பெஸ்ட் சிவக்குமார்
ஈரோடு சிறகுகள்
செயலாளர்
9842729229

#ஈரோடு

உங்கள் சிறப்பான  நாளில் சிலரின் பசியை போக்குங்கள்குழந்தைகள் புத்தகங்களில் மனிதநேயம் படிக்கலாம்…ஆனால் ஒரு பசியார்ந்தவருக்...
15/05/2026

உங்கள் சிறப்பான நாளில் சிலரின் பசியை போக்குங்கள்

குழந்தைகள் புத்தகங்களில் மனிதநேயம் படிக்கலாம்…
ஆனால் ஒரு பசியார்ந்தவருக்கு நேரடியாக அன்னதானம் வழங்கும்போது தான் படித்ததின் அர்த்தத்தை குழந்தைகள் நேரில் உணர்கிறார்கள்.

அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, சனி விரதம், பிறந்தநாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள், நிறுவனங்களின் ஆண்டு விழா, வேண்டுதல் நிறைவேற்றம், தலைவர்களின் பிறந்தநாள்
உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாளை அர்த்தமுள்ள நாளாக மாற்ற விரும்புகிறீர்களா?

அந்த நாளில்

ஈரோடு சிறகுகள் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதில் பசியாறுபவர்கள் யார் என்றால்

மலைவாழ் மக்கள்

கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் குடும்பங்கள் தினக்கூலி

தொழிலாளர்கள் பொருளாதார சிரமத்தில் இருக்கும் பொதுமக்கள்

1000 நாட்களுக்கு மேலாக அன்னவாசல் திட்டத்தின் மூலம் தொடர்ந்து உணவு தான சேவை நடைபெற்று வருகிறது.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் தங்களின் முக்கிய நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாட விரும்பினால், அவர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.உங்களால் மேலும் பலர் பசியாறலாம்.

விமல் கருப்பண்ணன்
தலைவர்
ஈரோடு சிறகுகள்
9786669999

பெஸ்ட் சிவகுமார்
செயலாளர்

ஈரோடு சிறகுகள்

9842729229

ஈரோடு சிறகுகள்

9626289999

Address

Vimal, Sri Gokulakkannan Stores, 132, New Majith Street
Erode
638003

Alerts

Be the first to know and let us send you an email when Erodu Siragukal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Erodu Siragukal:

Shortcuts

Share