15/06/2026
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவைஜூன்
மாதம் 15-ம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு
விழிப்புணர்வு தினமாக
(World Elderly Abuse Awareness Day) அனுசரிக்க
முடிவு செய்தது.
நமது முதியோர்களில் சிலரை அவமதித்துத் துன்பத்துக்கு
உள்ளாக்குவதற்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள மக்கள்
குரல் கொடுப்பதற்கான விழிப்புணர்வூட்டும் விதமாக
இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
நம்பிக்கை தேவைப்படும் ஓர் உறவுக்குள் ஒரு தனிசெயலாலோ,
தொடர் செயலாலோ அல்லது போதுமான நடவடிக்கை
இன்மையாலோ முதியோருக்கு ஏற்படும் துன்பமே முதியோர்
அவமதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது.
உடலியல், பாலியல், உளவியல் மற்றும் உணர்வியல் அவமதிப்பு,
பொருளியல், பொருள் சார் வஞ்சனை, கைவிட்டுவிடுதல்,
புறக்கணிப்பு, கடுமையான கண்ணியம் மற்றும் மரியாதைக்
குறைவு போன்றவை முதியோர் அவமதிப்பில் அடங்கும்.
இத்தகைய அவமதிப்புகள் யாவும் மனித உரிமை மீறல்களாக
உள்ளன. முதியோரைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதைப்
புரிந்துகொண்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும்.உலக அளவில்
முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு
அவர்களை அவமதிப்பதும் அதிகரித்து வருகிறது.
முதியோரஅவமதிப்பும் ஒரு பொது சுகாதாரப் பிரச்னை
என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட 15.7 % பேர் அவமதிக்கப்படுவதாக,
2017-ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு முந்தைய ஆண்டில் 6-ல் ஒரு முதியவர் உலகளவில்
அவமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தியாவில் 1.04 கோடியாக உள்ள முதியோரின்
எண்ணிக்கையானது 2026-ம் ஆண்டில் 17.3 கோடியாக
உயரும் என்கிறது இந்த ஆய்வு.
முதியோரைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதைப்
புரிந்துகொண்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும்.
இதுபோன்று பொருளாதார ரீதியாகவும், மேற்சொன்ன
பல விதங்களிலும் ஒரு முதியவர் வஞ்சிக்கப்படுவது
அவர்களின் மனித உரிமை சார்ந்த பிரச்னை.
வறுமை, பட்டினி, வீடிழப்பு, சுகாதார இழப்பு, நலவாழ்க்கை
இழப்பு மற்றும் அகால மரணம் அடைய வழிகோலும்
பொருளாதார மற்றும் பொருள் வஞ்சனையை உள்ளடக்கிய
அனைத்து வகையான அவமதிப்புகளும் இல்லாமல்,
தங்கள் முதுமைப் பருவத்தில் கண்ணியமான வாழ்க்கை
வாழ்வது முதியோரின் உரிமை என்பதை அனைவரும்
புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.