Arram Charity Trust

Arram Charity Trust Welcome to the official page of Arram Charity Trust, Erode

இதுவரை 91 நபர்களுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை! 👁️✨  | 15.03.2026 அன்று நமது அறம் அறக்கட்டளை மற்றும் CK மருத்துவமனை ...
20/03/2026

இதுவரை 91 நபர்களுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை! 👁️✨

| 15.03.2026 அன்று நமது அறம் அறக்கட்டளை மற்றும் CK மருத்துவமனை இணைந்து, மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 60 வேலம்பாளையம் பகுதியில் நடந்திய இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. 🙏

150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில், 8 நபர்களுக்கு கண் புரை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

👉 இதுவரை நமது அறம் அறக்கட்டளை மூலம் மொத்தம் 91 நபர்களுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில்:
✔️ பொது மருத்துவ பரிசோதனை
✔️ கண் பரிசோதனை
✔️ சர்க்கரை & ரத்த அழுத்த பரிசோதனைகள்
✔️ மருத்துவர் ஆலோசனை மற்றும் மருந்துகள் — அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது ❤️

மக்கள் நலனே எங்கள் முன்னுரிமை!



.ra

19/02/2026

நமது அறம் அறக்கட்டளையின் கொடுமுடி மற்றும் கணபதி பாளையம் அறம் உணவகத்தில் இதுவரை 3,40,000 உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.

நமது உணவகத்தில் உணவு அருந்தியவர் தங்கள் கருத்தை பரிமாறிக் கொண்டார்.

.ra

07/02/2026

அறம் செய்வோம் - ஆரோக்கியம் பகிர்வோம்

நமது அறம் அறக்கட்டளை சார்பில், மொடக்குறிச்சி தொகுதியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ முகாமின் மூலம், இன்று வரை 52 பயனாளிகள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து பயனடைந்துள்ளனர். முகாமில் கலந்து கொண்டு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டவர்களுக்கு, தொடர்ந்து இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் பொதுமருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், கண் பரிசோதனைகள், இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியவை அனைவருக்கும் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச மருத்துவ முகாமிற்கான அலைபேசி எண் : 76674 66447




.ra

05/02/2026

அறம் அறக்கட்டளை மற்றும் C.K மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம்.

தேதி: 08.02.2026
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை
இடம்: சமுதாயக்கூடம் குமாரபாளையம் AD காலனி லக்காபுரம்

இம்முகாமில் கலந்துகொண்டு கண்புரை கண்டறியப்பட்டவர்களுக்கு இலவசமாக கண் குறை அறுவை சிகிச்சை செய்யப்படும்.

இம்முகாமில் பொது மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் கண் பரிசோதனைகள், இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் ஆகியவை இலவசமாக பார்க்கப்படும்.




.ra

05/02/2026

அறம் அறக்கட்டளை சார்பில் 25-01-2026 அன்று கொல்லங்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட சடையப்பபுரத்தில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் 4 நபர்களுக்கு கண்புரை கண்டறியப்பட்டு 03-02-2026 அன்று 2 நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள இருவருக்கும் இன்னும் சில வாரங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அதன் பின்னர், அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அனைவரையும் அவர்களது இல்லங்களுக்கு பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தேன். 🙏




.ra

02/02/2026

அறம் அறக்கட்டளையின் சார்பில் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக நமது இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அறம் அறக்கட்டளையின் சார்பாக நான் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று, அறுவை சிகிச்சை பெற்ற அனைவரையும் நலம் விசாரித்த பொழுது 🙏

.ra

27/01/2026

| நமது அறம் அறக்கட்டளை மற்றும் CK மருத்துவமனை சார்பில் மொடக்குறிச்சி தொகுதி கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட சடையப்பபுரத்தில் இலவச மருத்துவ முகாம்,சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும்‌ அச்சுதா கண் பரிசோதனை மையத்துடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

முகாமில் பொது மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் கண் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மேலும் முகாமில் இலவச சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு கண்டறியப்பட்டது. இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் செய்து கொண்டனர்.மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது..





.ra

15/01/2026

தை பிறந்தநாள் வழி பிறக்கும்…
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்! 🌾✨

இந்த தை மாதம் அனைவருக்கும் புது நம்பிக்கை, வளமான வாழ்வு, ஆரோக்கியம், அமைதி, செழிப்பு
எல்லாம் கொண்டு வரட்டும்.

.ra

14/01/2026

அறம் அறக்கட்டளையின் சார்பில் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இலவச கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அறம் அறக்கட்டளையின் சார்பாக நான் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று, அறுவை சிகிச்சை பெற்ற அனைவரையும் நலம் விசாரித்த பொழுது 🙏

.ra

12/01/2026

மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அறம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த புனித “அறம் யாத்திரை”யில் கலந்துகொண்டனர்.

🚩 பண்ணாரி அம்மன் கோயில்
💧 பவானிசாகர் அணை
⛰️ பவளமலை

என மூன்று இடங்களுக்கும் அழைத்துச் சென்றோம்.

ஆன்மீகப் பயணம் மேற்கொண்டோரை வழி அனுப்பி வைத்தபோது.



ra

29/12/2025

அறம் உணவகம் – கொடுமுடி மற்றும் கணபதிபாளையம் பகுதிகளில் மதிய நேரத்தில் அளவில்லா முழு உணவு ₹20க்கு வழங்குகிறோம்! உணவு அருந்தியவர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுதல்.



ra

24/12/2025

| நமது அறம் அறக்கட்டளை மற்றும் CK மருத்துவமனை சார்பில் முகாசி அனுமன்பள்ளியில் இலவச நுரையீரல் மருத்துவ முகாம்,சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும்‌ அச்சுதா கண் பரிசோதனை மையத்துடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

முகாமில் நுரையீரல் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் கண் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மேலும் முகாமில் இலவச சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு கண்டறியப்பட்டது. இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் செய்து கொண்டனர்.மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது..





.ra

Address

New No: H-72 Periyar Nagar
Erode
638001

Telephone

+917667466447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arram Charity Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arram Charity Trust:

Share