28/09/2026
🔹 குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு | சோரனூர், கேரளா
28.09.2026 திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு, கேரளா மாநிலம் சோரனூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் RPF அதிகாரிகள், காவல்துறை அலுவலர்கள், NITI Aayog பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ரயில்வே துறை அலுவலர்கள் மற்றும் Childline பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் கடத்தலை எவ்வாறு அடையாளம் காண்பது, தடுப்பது, கடத்தல் சம்பவங்கள் குறித்து எவ்வாறு தகவல் அளிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், குழந்தைகளை பாதுகாப்பதில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் Peace Trust தலைவர் திரு. Ruba Balan அவர்கள், திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
#குழந்தைகள்கடத்தல்தடுப்பு