10/07/2024
நாகர்கூடல் கிராமத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கோயில் வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ ராமகிருஷ்ணா கோயில் வளாகம். இக்கோயில் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பவுண்டேஷன் மற்றும் சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரி சார்பில், 500 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடும் விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக அறங்காவலர் அம்மா வசந்தராணி தலைமை தாங்கினார். கல்லூரி அரங்கவளர் சபாநாயகம்,
பணி ஒய்வு BDO வடிவேல், வேளாண் துணை இயக்குனர்(பணி ஓய்வு )சுசிலா, வேளாண் இணை இயக்குனர் மதுபாலன்( பணி ஓய்வு )ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டிஎன்சி சிட் நிறுவன நிர்வாக அலுவலர் விவேகானந்தன், மருத்துவர்கள் மனோஜ், சிந்துஜாசுதா, ரங்கநாயகிகண்ணன், ஸ்வர்ணலதா ஆகியோர் பங்கேற்று, ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, தேக்கு, மகாகனி, நாவல், சொர்க்கம், ஆலமரம், அரசமரம், வேம்பு, கொய்யா, மா உள்ளிட்ட பல்வேறு வகையான 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்து தண்ணீர் ஊற்றினர். இதில்
பசுமை ஆர்வலர்கள் புஷ்பாலோகநாதன்,
தேசி, லோகநாதன், சந்திரமௌலி மற்றும் கல்லூரி முதல்வர் தங்கமணி, துணை முதல்வர் மணிமேகலை, உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.