02/03/2026
Greetings to all..!
Our *OASIS TRUST FOR THE HANDICAPPED* was started in 02.03.1988 to serve the people and today we are stepping into the 39th year. We dedicate this success to our beloved Founder Dr. K. V. Thavaraj (Late) one who dedicated & sacrificed his life for the welfare of differently abled & OASIS.We are happy to be the first NGO in Cuddalore district in the field of differently abled and we are recipient of *NATIONAL AWARD, STATE AWARD* and many for its excellence. In the past 38years OASIS lights in the life of thousands s of Differently abled people.Our heartly thanks and gratitude to all Officials, sponsors, donors, wellwishers and all for your valuable support. We request you to extend the same. Thanks for your Love ❤🙏🏼🙏🏼🙏🏼
With Love & Gratitude
Ms.Hephzibah Thavaraj
Chairman
OASIS
அன்புடையீர்,
நமது ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்காக தொண்டு நிறுவனம் கடந்த02.03.1988 துவங்கப்பட்டு இன்று (02.03.2026) 38ஆண்டுகள் நிறைவு பெற்று 39ஆம் ஆண்டில் அடி எடுத்துஉள்ளது. கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிய துவங்கபட்ட முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பதோடு சிறந்த சேவைக்கு மணிமகுடமாக சிறந்த சேவைக்கான தேசிய விருது, மாநில விருது, மற்றும் பல விருதுகளை குவித்து தனது தனித்துவத்தை என்றும் நிரூபித்து வருகிறது நமது ஒயாசிஸ். 38ஆண்டுகளில் பல்லாயிரகணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு விடிவெள்ளியாக திகழ்கின்ற ஒயாசிஸ் நிறுவனம் பல சாதனைகளையும் வெற்றி சுவடுகளையும் பதிக்க கடந்துவந்த பாதைகளில் பல முட்களும் உண்டு பல பூக்களும் உண்டு, அனைத்து தருணங்களிலும் எங்களோடு கைகோர்த்து உதவிய முதலாவதாக எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்நாள்வரை அனைத்து வகையிலும் நல்லாதரவை அளித்துவரும் அரசு பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள், தன்னார்வாலர்க்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள், மேலும் தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்குமாறு பணிந்து கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஒயாசிஸ் குடும்பத்தினர் (நிர்வாகிகள்,ஆசிரியர்(ம) பணியாளர்கள் )
ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிககளுக்காக தொண்டு நிறுவனம்