SR Naidu Memorial Welfare CBE Association

SR Naidu Memorial Welfare CBE Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR Naidu Memorial Welfare CBE Association, Community Center, 14-15 Krishnamma Naidu Street, Peelamedu Puthur, Coimbatore.

12/01/2026
12/01/2026

ஸ்ரீ மதே ராமானுஜாய நமக🙏🙏🙏

திருப்பாவை பாசுரம் 28

"அறிவொன்றும் மில்லாத" என்றால் பகவானைத் தவிர மற்ற விஷயங்களில் அறிவு ஒன்றும் இல்லாத என்று அர்த்தம் .

பசு மாட்டுக்கு பின்னால் போவோம். காட்டிற்கு போய் அணைவரும் சேர்ந்து உண்போம். பகவானை நன்கு தெரியும். பகவத் விஷயத்தில் அறிவு பெற்று உள்ளார்கள். மற்றைய விஷயங்கள் தெரியாது .

ஒவ்வொரு அவதாரத்திலும் பகவானுக்கு ஒவ்வொரு குறை உண்டு .
இராமா அவதாரத்தில் மைத்துனன் இல்லை என்ற குறை .

கிருஷ்ணா அவதாரத்தில் ஒரு குறை

ஹே கிருஷ்ணா என்று திரௌபதி கூப்பிட்ட போது "நான் சென்று ரட்சிக்கவில்லையே" என்றான் பரமாத்மா .

"அவளுக்குத்தான் ஆடை ,வஸ்திரம் சுரந்ததே "என்று கேட்டார்கள் .

நான் ரச்சிக்கவில்லை என் கோவிந்த நாமம் இரட்சித்தது என்றான் பரமாத்மா .

அதனால் தான் ஆண்டாள் சொல்கிறாள் அப்பா! கிருஷ்ணா!! உனக்கு குறையே இல்லை! கோவிந்தா நாமம் இருக்கும் போது உனக்கு என்ன குறை ?என்றாள். அதனால் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்றாள்.

உன்னோடு நெருங்கி பழகிய விதத்தில் ஏ கிருஷ்ணா !ஏ யாதவனே !!ஏ நண்பனே!! என்று வாய் விஞ்சி அழைத்து விட்டோம்! அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் பறை* கொடுக்க வேண்டும் !என்று பிரார்த்திக்கிறார்கள்.

பகவானின் விஸ்வ ரூப தரிசனம் கண்ட பின் அர்ஜுனன் பயந்து போய் நண்பனே! யாதவனே! என்று சாதாரணமாக அழைத்து விட்டேன். அதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டாம் என்று பிரார்த்தித்தான்.

அதே போன்றுதான் கோபிகா ஸ்திரிகள் இங்கே பிரார்த்திக்கிறார்கள் .

"என் அருள் வேண்டி வந்துள்ளீர்களே!" எதற்கும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா! உங்கள் தகுதிகளைக் கூறுங்கள்!! என்று பகவான் கூறுகிறார் .

பெரிய ஞானிகளின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உண்டா ?

போகட்டும்! கர்மயோகம், ஞான யோகம், பக்தி யோகம், போன்ற பணிகளை செய்து இருக்கிறீர்களா?

எந்த தகுதியும் இல்லாத உங்களுக்கு எப்படி நான் அருள் செய்ய முடியும்?

எந்த தைரியத்தில் வந்தீர்கள்?! என்று பகவான் கேட்கிறார் .

இந்தத் தகுதி இன்மையே எங்கள் தகுதி ஆகும் . எல்லாவற்றிற்கும் மேற்பட்ட தகுதி ஒன்று எங்களிடம் உள்ளது .

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்ணும் எங்களது காடு வாழ் குலத்தில் தான் நீ வந்திருக்கிறாய்!

இந்த ஆயர் குடியில் நீயும் ஒருவன் என்பதை மறந்து விட்டாயா ..

கர்மயோகம், ஞான யோகம் ,பக்தி யோகம் செய்து எந்த பரம்பொருளை அடைய வேண்டி ஞானிகள் தவம் செய்கிறார்களோ அந்தப் பரம் பொருளாகிய தருமத்தின் மனித வடிவமான உனக்கு , நாங்கள் பாலும் சோறும் கொடுத்து வளர்த்து வருகிறோம்!

" இதை விட என்ன தகுதி வேண்டும்?" என்று கோபிகா ஸ்த்திரிகள் கேட்கிறார்கள் .

பகவானால் ஒன்றும் பேச முடியவில்லை!!

"அவனைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்ற உயர்ந்த அர்த்தம் இப் பாசுரத்தில் காட்டித் தரப்படுகிறது

சூடிக் கொடுத்த சுடர் கொடியால் ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

அன்பன் K.M. கோபால்சாமி

12/01/2026

ஸ்ரீ மதே ராமானுஜாய நமக

திருப்பாவை பாசுரம் 27

இந்தப் பாசுரம் திருப்பாவையின் சர்க்கரைப் பொங்கல் பாசுரம் என்று அழைக்கப்படும் .

"கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா"

எதிர்த்து போராடுபவர்களை ஜெயிக்க கூடியவன் பரமாத்மா.

கோவிந்தா என்னும் நாமம் பரம பவித்திரமானது. புண்ணியமானது. மங்களரமானது. நல்ல குணம் படைத்த கோவிந்தா !

நாடு புகழும் பரிசு

நாடு புகழும் பரிசை பெற்றவர் யார்?

*ஆஞ்சநேய சுவாமிகள்

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஊரே திரண்டு நிற்கிறது. தேவலோகம் எல்லாம் இறங்கி வந்துள்ளது.

பேரரசர்கள், சிற்றரசர்கள் எல்லாம் அவரவர் தகுதிக்கு ஏற்ற பரிசினை பெற்று சென்று விட்டார்கள். ஆஞ்சநேயருக்கு தகுதியான பரிசினை கொடுக்க முடியவில்லை? சீதா பிராட்டியார் தன் கழுத்தில் உள்ள முத்து மாலையை இராமனிடம் கொடுத்து போடச் சொன்னார்.

அது நாடு புகழும் பரிசு அல்லவா ?!

லட்சுமி நம் கழுத்தில் மாலை போட்டால் எப்படி இருக்கும்?

அப்பேர்ப்பட்ட பரிசு பெற்றவர் ஆஞ்சநேய சுவாமிகள் .

அதேபோல் ஊரே மெச்சும் படியான பரிசினை தர வேண்டும்! என்கிறார்கள்.

"கூடியிருந்து குளிர்ந்தேலோர் ரென்பாவாய் "

குளிர்ந்து என்றால் எல்லோரும் அன்யோன்யமாக அபசாரப் படாமல் ஒற்றுமை என்ற உணர்வோடு கைங்கரியம் பண்ணுகின்ற நிலையைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

அன்பன் K.M. கோபால்சாமி

12/01/2026

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

திருப்பாவை பாசுரம் 26

பகவானைப் பிரார்த்திக்கிறார்கள் இங்கே !
பறை என்று இதுவரை சொன்னதற்கு என்ன பொருள்? என்று தெளிவாக எடுத்துக் கூறும் படியான பாசுரம் இது .

"மாலே" என்று அழைக்கிறார்கள். கண்ணன் என்னும் கருந் தெய்வம் . பெருமை மிக்கவன் அவன். அதனாலே மாலே என்று அழைக்கிறார்கள்.

"மணிவண்ணா" மணியைப் போன்றவன். விலை நிர்ணயிக்க முடியாத அளவுக்கு பெருமை மிக்கவன் பரமாத்மா .

மார்கழி நீராட்டத்திற்கான உபகரணங்களை பிரார்த்திக்கிறார்கள்.

பறை ,வாத்திய கோஷங்கள், வேத பாராயணம் செய்யும் மகான்கள்.

"கோல விளக்கே, கொடியே, விதானமே" எங்கும் விளக்குகள், பூரணப் பந்தல் போடப் பட்டிருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நீ அருள வேண்டும்! என்கிறார்கள் .

நீங்கள் கேட்டது எல்லாம் ஓரளவுக்கு தர முடியும் !என்றாலும் பாஞ்ச சானியத்தை போன்று சங்கங்கள் வேண்டும் என்றால் எங்கே போவது !?(அதைப் போன்று ஒன்றே ஒன்றுதான் உண்டு)என்று கேட்கிறான் பரமாத்மா .

ஆலமரத்தின் இலை மேலே ஒரு பாலகனாக படுத்திருந்த வட பத்ர சாயி அல்லவா நீ?! இங்கே ஸ்ரீவில்லிபுத்தூர் வட பத்ர சாயியை சொல்கிறார்கள் .

உங்களால் முடியாதது உண்டோ? என்கிறார்கள்.

இந்த பாசுரத்தில் ஆண்டாள் ஒரு பிராமணத்தை காட்டுகிறாள்.

"மேலையார் செய்வனைகள் வேண்டுவன கேட்டியேல் "

முன்னோர்கள் செய்ததை நாம் செய்ய வேண்டும்.

அந்தந்த குடும்பத்தில் எது வழக்கமோ? அதைச் செய்ய வேண்டும்.
அதற்கு புறம்பாக செய்யக்கூடாது! என்கிறாள்.

இப்பாடலில் "மாலே" "ஆலின் இலையாய்" என்ற இரண்டு தொடர்களும் உயிரானவை.

"மாலே "என்பது அவனது எளிய தன்மையை குறிப்பது .

"ஆலின் இலையாய்" என்பது அவனது எல்லையற்ற சக்தியை, பெருமையை, அருமையை வெளிப்படுத்துவது.
பகவானை சிம்மாசனத்தில் வரச் சொன்னார்கள்.

அடுத்தது என்ன?

திரு வீதி புறப்பாடு !

சூடிக் கொடுத்த சுடர் கொடியால் ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

அன்பன் K.M. கோபால்சாமி

09/01/2026

**கோயம்புத்தூரில் பாதுகாப்பான தங்குமிடம் தேடுகிறீர்களா?**

உங்கள் குடும்பத்துடன் **பாதுகாப்பாக, சுத்தமாக, அமைதியாக** தங்க ஒரு நம்பகமான இடம் வேண்டுமா?
அப்படியானால் **பீளமேடு – புதூர் பகுதியில் அமைந்துள்ள
**தட்சின் பவண்**
உங்களுக்கான சரியான தேர்வு.

** சிறந்த இடம் – எளிதான அணுகல்**

* கோயம்புத்தூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான **பீளமேடு – புதூர்**
* பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றிற்கு எளிதில் செல்லக்கூடிய இடம்
* சத்தமில்லாத, அமைதியான சூழல் – குடும்பத்துடன் தங்க ஏற்றது

** தங்கும் வசதிகள்**

* சுத்தமாக பராமரிக்கப்படும் அறைகள்
* பாதுகாப்பான, நிம்மதியான சூழல்
* நீண்ட நாட்கள் தங்கும் விருந்தினர்களுக்கும் ஏற்ற வசதி
* பணிநிமித்தமாக வருபவர்கள், மாணவர்கள், அனைவருக்கும் பொருத்தமானது

** சமூக நல நோக்குடன்**

**வசதி • சேவை • அமைதி** –
இந்த மூன்றையும் ஒரே இடத்தில் அனுபவிக்க

** முகவரி**

**எண்: 14–15, கிருஷ்ணம்மா நாயுடு தெரு,
பீளமேடு, புதூர்,
கோயம்புத்தூர்**
**📞 தொடர்புக்கு**

**செல் : 73730 64233**

09/01/2026

ஸ்ரீ மதே ராமானுஜாய நமக

திருப்பாவை பாசுரம் 25

திருப்பாவையிலேயே கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த பாசுரம் இது.

கிருஷ்ண விருத்தத்தை சொல்லுகின்ற பாசுரம் இது.

ஒருத்தி மகனாய் பிறந்து ........... யொழித்து வளர

எங்கே பிறந்தானோ அங்கே இல்லை. உடனே வேறு இடத்துக்கு வந்து விட்டான்.

ஓர் இரவில்

அந்தத் தாய் ஒப்பற்றவள். அவள் பிள்ளை பெற்ற அந்த இரவும் ஒப்பற்றது. அது போன்ற ஒர் இரவு முன்பும் இல்லை. பின்பும் இல்லை.

நான்கு திருக்கரங்கள். அவற்றில் சங்கு, சக்கரம் ,கதை, தாமரை இப்படிப் பிறந்தான் கண்ணன் .

கண்ணனை ஓர் இரவு கூட வைத்துக்கொள்ள கம்சன் தலைநகர் பேறு பெறவில்லை. இரவோடு இரவாக அவனை நந்த குலத்திற்கு எடுத்துச் சென்றார் வசுதேவர்.

யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசு தேவருக்கு பாதை அமைத்தது. மழையில் இருந்து கண்ணனைக் காக்க ஆதிசேடன் குடை பிடித்தான்.

குழந்தை பிறந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். உறவில் சிறந்தது தாய்மாமன் உறவு. ஆசையுடன் குழந்தையை பார்க்க வரவேண்டியவனோ ஆயுதத்துடன் வந்தான்.

இத்தனையும் நிகழ்ந்த அந்த இரவு ஒப்பற்ற இரவு தானே!

ஒளித்து வளர என்றால் தன்னுடைய பிரபாவத்தை மறைத்துக் கொண்டு பரம சாமானியமானவனாக இருந்தானாம்.

கம்ஸனுக்கு ஒரே பயம். உட்கார்ந்தால் கிருஷ்ணன் வந்து விடுவானோ..! படுத்தால் வந்து விடுவானோ...! என்று ஒரே பயம்.

பயத்தினால் கம்ஸன் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டிருந்தானாம்.

கம்ஸனுக்கு கிருஷ்ணன் என்றால் அடிவயிற்றில் நெருப்பை கட்டிய மாதிரி பயம்

பறை தருதி யாகில்

கைங்கரியத்தை கேட்டு வந்தோம். வேறு எதையும் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை
!

எதையும் அவரிடத்தில் கேட்கக் கூடாது. அவனையே கேட்க வேண்டும்.

அதனால் உன்னை அருந்தித்து வந்தோம் என்றார்கள் கோபிஸ்திரிகள்.

இந்த பாசுரத்தின் உயிர்நாடி எதுவென்றால்

" வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து "

பகவானே அடைவதே பரிபூரண மகிழ்ச்சி. அதனால் வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து என்கிறாள் ஆண்டாள்.

உன் ஒருவனையே பெற்றால் போதும்! எல்லா பொருள்களையும் பெற்றது போலத்தான் என்கிறாள் ஆண்டாள்.

சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏

அன்பன் K.M. கோபால்சாமி

Address

14-15 Krishnamma Naidu Street, Peelamedu Puthur
Coimbatore
641004

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Naidu Memorial Welfare CBE Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share