நமது நிலம் நமதே விவசாயிகள் நலச் சங்கம்

  • Home
  • India
  • Coimbatore
  • நமது நிலம் நமதே விவசாயிகள் நலச் சங்கம்

நமது நிலம் நமதே  விவசாயிகள் நலச் சங்கம் விவசாயமே நமது அடையாளம்!

20/06/2026

ஈகிர் நாள் — பெருமநல்லூர் விவசாய தியாகிகள் நினைவஞ்சலி 🌾
மண்ணுக்காக... உரிமைக்காக... உயிரையே ஈந்த எங்கள் விவசாய வீரர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வீர வணக்கம்! 🙏
இன்று, நமது நிலம் நமது விவசாயிகள் சங்கம் சார்பில், பெருமநல்லூர் தியாகிகளின் நினைவாக நடைபெற்ற அஞ்சலி ஊர்வலம். அவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும், இரத்தமும் இந்த மண்ணின் வரலாற்றில் என்றும் வாழும்.
🚩 அவர்கள் கண்ட கனவு — விவசாயி நிமிர்ந்து நிற்கும் நாடு.
🚩 அவர்கள் தந்த பாடம் — ஒற்றுமையே நமது பலம்.
அந்த வழியில், அந்த உறுதியில், நாங்கள் தொடர்ந்து நடப்போம். விவசாயியின் குரல் வானம் வரை எதிரொலிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.
"நமது நிலம்! நமது உரிமை!" — இது வெறும் வார்த்தை அல்ல; இது எங்கள் சபதம்.
பங்கேற்ற அனைத்து விவசாய உறவுகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றி. 🤝
#பெருமநல்லூர் #ஈகிர்நாள் #விவசாயதியாகிகள் #நமதுநிலம்நமதுஉரிமை #விவசாயிகள்சங்கம் #கொங்குநாடு #விவசாயம்

19/06/2026

🌾 வீர வணக்கம் | ஈகிர் நாள் நினைவஞ்சலி — பெருமாநல்லூர் 🌾

ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், 1970 ஜூன் 19 அன்று, வேளாண் மின் உரிமைக்காகப் போராடி உயிர் நீத்த மூன்று உழவர் வீரர்களுக்கு — இராமசாமி, மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் — இந்த ஆண்டும் வீர வணக்கம் செலுத்தினோம்.
இந்த மண்ணுக்காக ரத்தம் சிந்திய அந்த தியாகிகளை நினைவுகூரும் வகையில், நமது நிலம் நமது விவசாயிகள் சங்கம் சார்பாக பெருமாநல்லூர் நினைவுத் தூபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்றிய உரை இதோ.
உழவன் கேட்டது நியாயம்; அவன் பெற்றது துப்பாக்கி. ஆனால் அந்தத் தியாகம்தான் இன்று தமிழக வயல்களுக்கு இலவச மின்சாரம் என்ற உரிமைக்கு அடித்தளம். அந்த ரத்தக் கடனை மறக்க மாட்டோம். 🚜
தியாகிகளை நினைப்போம். உழவை உயர்த்துவோம். உரிமைக்காகக் குரல் கொடுப்போம்.
— குமார ரவிக்குமார்
நமது நிலம் நமதே விவசாயிகள் நலச் சங்கம்
#வீரவணக்கம் #பெருமாநல்லூர் #ஈகிர்நாள் #விவசாயிகள்போராட்டம் #நமதுநிலம்நமதுவிவசாயிகள் #உழவர்உரிமை

14/06/2026

🌾 வீர வணக்கம் | ஜூன் 19 — ஈகிர் நாள் நினைவஞ்சலி 🌾
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், 1970 ஜூன் 19 அன்று, பெருமாநல்லூர் மண் மூன்று உழவர் வீரர்களின் ரத்தத்தால் சிவந்தது.
வேளாண் மின் கட்டணத்தை யூனிட் 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்திய அநீதிக்கு எதிராக, கலப்பையை ஏந்திய கைகளால் அமைதியாகப் போராடிய நம் விவசாயிகள் மீது அன்று துப்பாக்கி முழங்கியது.
🕯️ புதுப்பாளையம் இராமசாமி (25)
🕯️ வாரணாசிபாளையம் மாரப்பகவுண்டர் (37)
🕯️ ஈச்சம்பாளையம் ஆயிக்கவுண்டர் (33)
இம்மூவரின் தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் தொடங்கிய போராட்டம்தான், இன்று தமிழக வயல்களுக்கு இலவச மின்சாரம் என்ற உரிமைக்கு அடித்தளமாக அமைந்தது. ஒவ்வொரு மோட்டார் சுழலும்போதும், ஒவ்வொரு நாற்று வளரும்போதும் அந்த வீரர்களின் ரத்தத்தின் கதை மீண்டும் சொல்லப்படுகிறது.
இந்த வீர மண்ணின் கடமையாக, நமது நிலம் நமது விவசாயிகள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வீர வணக்க நிகழ்ச்சியில் இந்த ஆண்டும் வீர வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து உழவர் உள்ளங்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
📅 நாள்: ஜூன் 19 (வியாழன்)
🕗 நேரம்: காலை 8 மணி
📍 இடம்: பெருமாநல்லூர் பேருந்து நிலையம்
📞 தொடர்புக்கு: பழனிச்சாமி — +91 98655 55052
தியாகிகளை நினைப்போம். உழவை உயர்த்துவோம். உரிமைக்காகக் குரல் கொடுப்போம். 🚜🌾
— குமார ரவிக்குமார்
நமது நிலம் நமது விவசாயிகள் நல சங்கம்
#வீரவணக்கம் #பெருமாநல்லூர் #விவசாயிகள்போராட்டம் #ஈகிர்நாள் #நமதுநிலம்நமதுவிவசாயிகள் #உழவர்உரிமை

30/05/2026

அதிகாரிகளை நம்பி விவசாய பிரச்சினைகளை
தீர்க்க முடியாது.
நேரடியாக விவசாயிகளோடு நில்லுங்கள்.
களத்துக்கு வாருங்கள்.
மக்களின் குரலைக் கேளுங்கள்.
வாக்குறுதி கொடுத்தீர்கள் —
நிறைவேற்றுங்கள்! 🌾✊
— குமார ரவிக்குமார்

09/03/2026

*ஓசூர் விவசாயிகள் கைது !*

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில். சர்வதேச விமான நிலையம் (INTERNATIONAL AIRPORT), அறிவு சார் வழித்தடம் (Knowledge Corridor), சிப்காட் மற்றும் சிறப்பு ஏற்றுமதி மண்டலம் (SIPCOT and SEZ) போன்றவற்றை ஏற்படுத்த, விவசாய நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (9 மார்ச் 2026) காலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஓசூர் விவசாயிகள் மனு கொடுக்கச் சென்றனர். அங்கு அவர்களை காவல்துறை கைது செய்து டி.எம்.எஸ். வளாகத்தில் தற்போது தங்க வைத்துள்ளது.

Media contact : Mr Nagaraju, Member, Namadhu Nilam Namadhe Farmers' Welfare Assn, +919945569336

13/11/2025

சேலம் மாவட்டம் வெள்ளைக்கல்பட்டி பகுதியில்
மிகப்பெரிய அளவில் ரசாயன சாயப்பட்டறை கம்பெனி அமைப்பதற்கு
விவசாய மக்கள் உறுதியான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

12/11/2025 முதல் இப்போராட்டத்தில்
“நமது நிலம் நமதே – விவசாயிகள் சங்கம்” தலைவர்
குமார ரவிக்குமார் அவர்கள் இணைந்துள்ளார்.

தனியார் கார்ப்பரேட் நிறுவனம் பின்வாங்கும் வரை,
குமார ரவிக்குமார் தலைமையில்
வெள்ளைக்கல்பட்டி விவசாயிகளின் போராட்டம்
மிகப்பெரிய மக்கள் இயக்கமாகத் தொடரும் என்று அறிவிக்கிறோம்.






“விவசாயியின் உயிருக்கு மதிப்பு வேண்டும் — மின்னல் தாக்கி உயிரிழந்தோர்க்கு ₹10 லட்சம் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும...
01/11/2025

“விவசாயியின் உயிருக்கு மதிப்பு வேண்டும் — மின்னல் தாக்கி உயிரிழந்தோர்க்கு ₹10 லட்சம் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!”

நேற்று (31.10.2025) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ₹5 லட்சம் இழப்பீட்டை ₹10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அரசு பணியாளர்கள் விவசாயிகளின் உணர்வை உணர வேண்டும் —
இது ஒரு கோரிக்கை அல்ல, விவசாயி உயிரின் மதிப்புக்கான உரிமைக் கோரிக்கை!

நாம் ஒன்றுபட்டால் மாற்றம் சாத்தியம்.
இயற்கை பேரிடர் உயிரிழப்புக்கான நியாயமான இழப்பீடு கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் 💪🌾

#விவசாயி_உயிருக்கு_மதிப்பு #10லட்சம்இழப்பீடு #விவசாயி_உரிமை

26/10/2025

அன்பு விவசாய
உறவுகளே
மேலே காணும் இந்த
புகைப்படம் காணொளி என்னவென்றால்
கடந்த வாரம் கடலூர் மாவட்டத்தில் உள்ள
வேப்பூர் அருகேகழுதூர்என்ற
கிராமத்தில் உள்ள
விவசாய நிலத்தில் வேலை செய்யும் போது மின்னல் தாக்கி 4பெண்கள்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் ஒரு பெண்
மிகப்பெரிய அளவில்
பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில்
அந்த குடும்பத்திற்கு
ஆறுதல் தெரிவிக்க
நமது அன்னூர் பகுதியில் உள்ள
நமது நிலம் நமதே
விவசாய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர்
குமார. ரவிக்குமார்
தலைமையில்
கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர்கள் மற்றும்
நமது நிலம் நமதே
விவசாய சங்க
உறுப்பினர்கள் என
20பேர்கொண்ட
குழு24/10/25அன்று
இரவு 11மணியளவில்
அன்னூரில் இருந்து
சென்று 25/10/25
காலை 8மணியளவில்
வேப்பூர் அருகேகழுதூர்என்ற கிராமத்தில் உள்ள
நான்கு குடும்ப உறுப்பினர்கள் அவர்களை சந்தித்து
ஆறுதல் தெரிவித்து
சம்பவத்தின் போது
நடந்த நிகழ்வு பற்றி
கேட்டறிந்தோம்
ஒவ்வொரு குடும்பம்
பெண்களை இழந்து
தவிக்கும் நிலை
நெஞ்சம் பதைக்கின்றது
பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்
தாயை இழந்தும்
கணவர் மனைவியை இழந்த நிலையில்
இதேபோல்
தந்தை இன்றி
தாயையும் இழந்த
குழந்தைகள்
திருமணம் ஆகாத
குழந்தைகள் என
நான்கு குடும்ப உறுப்பினர்கள்
மிகவும் கவலையில்
கண்ணீரில்
தத்தளித்துக் கொண்டு உள்ளது
மிகவும் வேதனை

இந்த வேதனை தரும்
சம்பவம் நடந்த பின்னர்
அரசு சார்பில் அவர்களுக்கு கிடைத்த உதவி பற்றி
கேட்டறிந்தோம்
முதற்கட்டமாக
அந்த பகுதியில்
சட்டமன்ற உறுப்பினர்
மூலம் 50ஆயிரம்ரூபாய்
ஒவ்வொரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டது
என்ற தகவல் கிடைத்தது
மேலும் அரசு சார்பில்
ஒவ்வொரு குடும்பத்திற்கு
தலா. 5லட்சம்ரூபாய்
நிவாரணம் வழங்க
உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் தகவல் கிடைத்தது
அந்த பகுதியில் உள்ள சட்டமன்ற
உறுப்பினர் மற்றும்
தமிழ்நாடு அரசு
ஆகியவற்றுக்கு
அனைத்து விவசாயிகள் சார்பில்
நன்றி தெரிவிக்கிறோம்

ஆனால்
இந்த சம்பவம் குறித்து விவசாய பணியில் ஈடுபட்டு
உயிர் இழந்த நிலையில் உள்ள போது அவர்களுக்கு
அளிக்க கூடிய
இந்த நிவாரண
தொகை 5லட்சம்என்பது
மிகவும் வேதனையை தருகிறது
அன்பு விவசாய
சொந்தங்களே
விவசாய பணி செய்யும் மக்களே
ஒரு கணம்
சிந்தியுங்கள்
இது எந்த வித விதமான நியாயம் என்று
ஒரு அரசியல் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து
எதிர்பாராத விதமாக
உயிர் இழந்த மக்கள்
குழந்தைகள் என
பாதிப்பு ஏற்பட்டபோது
மாநில அரசு சார்பில்
10லட்சம்ரூபாய்
நிவாரணம் வழங்கப்பட்டது
இதேபோல் கடந்த ஆண்டு கள்ள குறிச்சி மாவட்டத்தில்
கள்ள சாராயம் குடித்து இறந்து போன 50க்குமேற்பட்ட
குடும்பத்திற்கு 10லட்சம்நிவாரணதொகையாக
வழங்கப்பட்டது
இதேபோல் கடந்த
இரண்டு வாரங்களுக்கு முன்பு
எண்ணூர் அனல் மின் நிலையம்
கட்டிட பணியில்
சாரம் இடிந்து விழுந்ததில் 10பேரில்
9நபர்வடமாநில
தொழிலாளர் உயிர் இழந்த நிலையில்
அவர்களுக்கு 10லட்சம்நிவாரண
தொகை வழங்கப்பட்டது
அது அரசு முடிவு
மகிழ்ச்சி அளிக்கிறது
இதில் இரண்டு சம்பவம் அரசியல் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் ஒன்று
இன்னொரு சம்பவம்
கள்ள சாராயம் குடித்து வந்தால்
நடந்த சம்பவம்
இது போன்ற நாட்டின்
தேவையற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயிர் இழந்த குடும்பத்திற்கு
10லட்சம்நிவாரணம்
வழங்கும் அரசு
இந்த நாட்டின்
மக்கள் வாழ்வதற்கு
அத்தியாவசியமான
உண்ணும் உணவு
தேவைக்கு உழைக்கும் மக்களுக்கு
விவசாயிகளுக்கு
கிள்ளி கொடுப்பது போல் 5லட்சம்நிவாரண
தொகை வழங்குவது
எந்த விதமான நியாயம் என்று
சிந்தியுங்கள்

இது குறித்து
அந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள்
சார்பில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள
40க்கும்மேற்பட்ட
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
சில முக்கிய முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல
முடிவு செய்யப்பட்டது

முதலாவதாக
தற்போது இந்த உயிரிழந்த குடும்பத்திற்கு
தற்போது வழங்கப்பட்ட
5லட்சம்ரூபாய்
நிவாரணம் போதாது என்றும் இன்னும்
கூடுதலாக 5லட்சரூபாய்
வழங்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்துஅதனை
அந்த குடும்பத்திற்கு
பெற்று தர
அனைத்து விவசாயிகள் உறுதி செய்து முடிவு மேற்கொள்ளப்பட்டும்
மேலும் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள
கல்வி பயிலும் குழந்தைகள்
கல்வி செலவு அனைத்தும்
அரசு ஏற்கவேண்டும்
என்றும்
கல்வி பயின்று பின்னர்
அந்த கல்விக் ஏற்ப
ஏதாவது ஒரு அரசு பணி வழங்க வேண்டும் என்றும்
கோரிக்கை வைப்பது
என்றும்
இது தவிர
வரும் காலங்களில்
இது போன்ற துயர சம்பவம் நடைபெறும் போது விவசாயிகள் மற்றும் விவசாய பணியாளர்கள் என
யாராக இருந்தாலும்
ஏதாவது ஒரு வகையில் உயிர் இழப்பு நடக்கும் போது அந்த குடும்பத்திற்கு
மேலே குறிப்பிட்ட நிவாரண தொகையை விட
கூடுதலாக வழங்க வேண்டும் என்று
கோரிக்கை வைத்து
வரும் நாட்களில்
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து இந்த கோரிக்கை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள்
விவசாய பணியாளர்கள் என
அனைவரும் ஒன்றினைந்து
செயல்பட உறுதியேற்போம்
இது தவிர
பாதிக்கப்படும்
விவசாய பணியாளர்கள்
விவசாயிகள் என
யாராக இருந்தாலும்
வழங்கும் நிவாரண நிதி தவிர
அந்த குடும்பத்திற்கு
அரசு வேலை மற்றும்
ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா
மாதம் ஒருமுறை
10ஆயிரம்ரூபாய்
நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்
கோரிக்கை வைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது
விவசாய சொந்தங்களே
விவசாய பணியாளர்களே
வரும் நாட்களில் இது குறித்து மிக விரைவாக
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடக்கும் கூட்டத்தில் கலந்து இது குறித்து
நமது உரிமைக்கு
போராடி கோரிக்கை
வைத்து இந்த
உரிமைகளை
பெறுவோம் என்று
ஒவ்வொருவரும்
உறுதி கொள்ள வேண்டும்

எதிர்வரும் காலங்களில்
இந்த விவசாயிகள்
விவசாய பணியாளர்கள் என
அனைவரும்
எந்த பகுதியில் இருந்தாலும்
இந்த உரிமைகளை
பெற அயராது உழைக்க வேண்டும்

25/10/2025

நமது நிலம் நமதே விவசாய நல சங்கத்தின் தலைவருமான திரு . குமார. இரவிக்குமார் அவர்கள் கடலூர் அருகே வேப்பூர் அருகில் கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளை கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர்களுடன் இன்று 25 10 2025 சனிக்கிழமை சென்று அந்தக் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மற்றும் அந்த குடும்பங்களுக்கு அரசால் நிதி கிடைக்க அப்பகுதி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்

Address

Annur
Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when நமது நிலம் நமதே விவசாயிகள் நலச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share