நம்ம நவக்கரை

நம்ம நவக்கரை Letz clean and make more green 'நம்ம நவக்கரை'

நம்ம நவக்கரை களபணிகளை twitter ல் பாராட்டிய சின்ன கலைவானர் திரு விவேக் அவர்கள் மறைந்த அடுத்த தினம்,நம்ம நவக்கரை அமைப்பு உ...
02/08/2026

நம்ம நவக்கரை களபணிகளை twitter ல் பாராட்டிய சின்ன கலைவானர் திரு விவேக் அவர்கள் மறைந்த அடுத்த தினம்,நம்ம நவக்கரை அமைப்பு உருவாக்கிய “நாவல் கரை வனத்தில்”அவர் நினைவாக நடபட்ட ஆலமர செடி இன்று ஓங்கி வளர்ந்த மரமாக…..விவேகாலம் அதன் பெயர்

*நம்ம நவக்கரை குழுமம் மற்றும் விவசாய பெருங்குடி மக்களுடன்* *தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் மாண்புமிகு.திரு...
22/07/2026

*நம்ம நவக்கரை குழுமம் மற்றும் விவசாய பெருங்குடி மக்களுடன்*

*தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் மாண்புமிகு.திரு.K.விக்னேஷ்* அவர்களை இன்று மாலை(22.07.2026) கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து பல்லாண்டு கோரிக்கைகளான வாளையார் அணையில் வண்டல் மண் விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதி,மாவுத்தம்பதியில் புதிய நீர் தேக்கம் ( கூச்சிமலை நீர் திட்டம்), வனவிலங்குகளால் கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும்,அன்மை நாட்களில் மாவுத்தம்பதி சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை தாக்கியதில் சேதமான மற்றும் உயிரிழப்பு குறித்தும், யானை தாக்கியதில் விவசாயிகள் உயிரிகள் பரிபோவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நவக்கரை அடுத்த மாவுமில் சர்வீஸ் ரோடு சேதமடைந்து பல இன்னல்கள் ஏற்படுவதை தடுக்கவும் சாலை சீரமைக்க கோரிக்கைகள் மனுவாக வழங்கப்பட்டது. இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு அழைத்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு ஆணையிட்டார். இது மிகப்பெரிய ஒரு நம்பிக்கையான நகர்வாகவே இருந்தது. பெரும் மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு..!!

இதில் மாவுத்தம்பதி மற்றும் பிச்சனூர் பகுதி விவசாயிகள் மற்றும் நம்ம நவக்கரை குழுமம் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

05/06/2026
இன்றைய களப்பணி..!!நமக்காக பழ கன்றுகளும் மரங்கள் சுற்றிய தூய்மை பணிக்கான கள ஆய்வுகளும் நடைபெற்றது.இன்று பருவமழைக்கு முன் ...
31/05/2026

இன்றைய களப்பணி..!!

நமக்காக பழ கன்றுகளும் மரங்கள் சுற்றிய தூய்மை பணிக்கான கள ஆய்வுகளும் நடைபெற்றது.

இன்று பருவமழைக்கு முன் மரக்கன்றுகள் வைத்து நாளைய பருவமழையை பெறுவோம்..!

நமது கடமை நமது உரிமை வாக்களிப்போம்..! நல்லோருக்கு..!!
23/04/2026

நமது கடமை நமது உரிமை
வாக்களிப்போம்..! நல்லோருக்கு..!!

நமது பகுதியில் தூய்மை சிறக்கவும் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்காகவும்  பல்வேறு முயற்சிகள் தொடர்ந்த...
03/12/2025

நமது பகுதியில் தூய்மை சிறக்கவும் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்காகவும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நம்ம நவக்கரை குழுமம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளிடம் கேட்டுக்கொண்டதன்பெயரில்
வி கார்டு நிறுவனத்தின் சமூக பணிக்கான பங்களிப்பு (CSR) நிதியிலிருந்து நமது மாவுத்தம்பதி ஊராட்சிக்கு ஒரு மின் வாகனம் (E CART) தூய்மை பணிக்காக வழங்கப்பட்டது.

நம்ம நவக்கரை குழுமம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

*நம்ம நவக்கரை குழுமம்* மண்ணில் மறைந்தாலும் மண்ணுலகில் மரம் உள்ளவரை நிலைத்து நிற்கும்படி மறைந்த மரங்களின் தாய் பத்மஶ்ரீ ச...
16/11/2025

*நம்ம நவக்கரை குழுமம்*

மண்ணில் மறைந்தாலும் மண்ணுலகில் மரம் உள்ளவரை நிலைத்து நிற்கும்படி மறைந்த மரங்களின் தாய் பத்மஶ்ரீ சாலுமரத திம்மக்கா அவர்களின் நினைவாக நாவல்கரை சோலையில் இன்று காலை ஆறடி உயர ஆலமரக்கன்று நடவு செய்யப்பட்டது.

இயற்கையை காக்க இயன்றதை செய்வோம்.!அவை நம்மை இறுதி வரை காக்கும்..!!
15/11/2025

இயற்கையை காக்க இயன்றதை செய்வோம்.!
அவை நம்மை இறுதி வரை காக்கும்..!!

Address

Coimbatore
641105

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம நவக்கரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share