Nanre Sei Public Charitable Trust

Nanre Sei Public Charitable Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nanre Sei Public Charitable Trust, Nonprofit Organization, Coimbatore.

நமது அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தனி வகுப்புகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் ...
01/03/2026

நமது அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தனி வகுப்புகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நேற்று 28.02.2026 ஆம் தேதி மதுக்கரை மார்க்கெட்டில் உள்ள நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இதில் ஓவியப்போட்டி, கவிதை, கட்டுரை, குழு விவாதம், பேச்சுப்போட்டி மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு நமது மதிப்பிற்குரிய ஆசிரியைகள் K.முர்ஷிதா, M.சண்முகப்பிரியா, N.நசீரா பானு, J.ஷமிதா ஆகியோர் மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தி, அவர்களை ஆயத்தப்படுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்து வந்தனர். இந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளரும், மூத்த வழக்குரைஞருமான தோழர்.ச.பாலமுருகன் அவர்களும், பூ.ச.கோ தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.இல.சிவசக்தி வடிவேல் அவர்களும், பூ.ச.கோ சர்வஜன மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.சா.குமாரசாமி ஐயா அவர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்கள். இந்தப் போட்டிகளில் நடுவர் குழுவாக செயல்பட்ட வழக்குரைஞர்கள் தோழர்.S.சோபியா, தோழர்.D.ஜீவா, தோழர்.T.ரஞ்சித், தோழர்.P.தன்யா மற்றும் தோழர்.T.புவனேஸ்வரி ஆகியோர் போட்டிகளை முன்னின்று நடத்தியதுடன், வெற்றியாளர்களையும் தேர்வு செய்தனர். இந்த கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சியை தோழர்.M.திருமூர்த்தி, தோழர்.K.மாறன், தோழர்.K.செல்வராஜ் உள்ளிட்ட தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் போலோ சைக்கிள் விளையாட்டு போட்டியில் இந்திய தேசிய அணிக்கு தேர்வாகியுள்ள வி.எல்.பி அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவதர்ஷினிக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000/- வழங்கப்பட்டது.
முழு நிகழ்ச்சியையும் தோழர்.சுந்தர் சிங் நேர்த்தியுடன் ஒளிப்பதிவு செய்தார்.
இந்தக் கலை இலக்கியப் போட்டிகளை நடத்திட நன்கொடை அளித்து, போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திட முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நமது அறக்கட்டளையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

16/02/2026
நமது அறக்கட்டளையின் சார்பில்  கோயம்புத்தூர் ஆத்துப்பாலம் அருகில் கரும்புக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு  பள்ளியில் பயின்...
29/10/2025

நமது அறக்கட்டளையின் சார்பில் கோயம்புத்தூர் ஆத்துப்பாலம் அருகில் கரும்புக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கான மாலை நேர வகுப்புகள் சமூக செயல்பாட்டாளர் திரு.செல்வராஜ் அவர்கள் மேற்பார்வையில் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பில் ஆசிரியை திருமதி.நசிரா பானு அவர்கள் சிறந்த முறையில் பயிற்றுவித்து வருகிறார்கள். 📚

நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவை-குனியமுத்தூர்- திருமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அரச...
02/07/2025

நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவை-குனியமுத்தூர்- திருமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கான மாலை நேர வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பினை ஆசிரியை திருமதி.ஷமிதா அவர்கள் பயிற்றுவித்து வருகிறார்கள். சமூக செயல்பாட்டாளர் திரு.செல்வராஜ் அவர்களும், ஆசிரியை திருமதி.முர்சிதா அக்பர் அவர்களும், சிறந்த முறையில் கவனித்து வருகிறார்கள் 📚

நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவை-குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி...
05/03/2025

நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவை-குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கான மாலை நேர வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பினை ஆசிரியை திருமதி.முர்சிதா அக்பர் அவர்களும், சமூக செயல்பாட்டாளர் திரு.செல்வராஜ் அவர்களும் சிறந்த முறையில் கவனித்து பயிற்றுவித்து வருகிறார்கள்.

நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அன்னூர் ஒன்றியம் நல்லி செட்டி பாளையம் கிராமத்தில், அரசு துவக்க...
08/01/2025

நமது அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அன்னூர் ஒன்றியம் நல்லி செட்டி பாளையம் கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியருக்கான மாலை நேர வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பினை ஆசிரியை திருமதி.பிரியா அவர்களும், சமூக செயல்பாட்டாளர் திரு.மாறன் அவர்களும் சிறந்த முறையில் கவனித்து பயிற்றுவித்து வருகிறார்கள். காலஞ்சென்ற சமூக செயல்பாட்டாளர் N.A.பழனிச்சாமி அவர்களின் மகன் கோகுல் அவர்களுக்கு உதவியாக பணியாற்றி வருகிறார்கள். இவ்வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பணியாற்றி வரும் நண்பர்களுக்கு நமது அறக்கட்டளை சார்பில் நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nanre Sei Public Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share