Muthamizh Vizha

  • Home
  • Muthamizh Vizha

Muthamizh Vizha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muthamizh Vizha, Community Organization, .

இயற் இசை நாடகத் தமிழாய் உறைந்திருக்கும் தீந்தமிழின் தீமினை பாரெங்கும் கமழச் செய்திடும் தமிழுக்கான திருவிழா முத்தமிழ் விழா...

முன்னொருநாள் வெகு தெற்கே கடலுக்குள் ஓராயிரங் காத தூரத்தில் கொன்றை வேந்தன் கொலு வீற்றிருக்க அவன்றலைமையில் தமிழ் அரங்கேறத் தெடங்கியது.அதன் பின்னான கடற்கோள்களும் படையெடுப்புகளும் அதன் மதுரத்தைக் குன்றச் செய்ய முடியவில்லை.

பின் பாண்டி வேந்தன் வீற்றிருக்க தமிழ்கெழு கூடலில் அரங்

கேறியது வள்ளுவனும் இளங்கோவுங் கண்ட தமிழியாக!

சங்கம் மருவிய பின் பதினெண் மேற்கணக்கு நூல்களால் வளர்ந்தது தமிழ் வட்டெழுத்தாக!

அதன் பின்னர் பக்தி இலக்கியங்களால் வளர்ந்தது தமிழ் கிரந்தமாக!

பண்டைய தமிழாக சிற்றிலக்கியங்களால் வளர்ந்து மறுமலர்ச்சி இலக்கியங்களால் நவீன தமிழாக உயர்ந்து நிற்கின்றது. "கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக் குடி"யெனப் புகழும் புறப்பொருள் வெண்பாமாலையின் கூற்றினைப் போல் தொன்மையுஞ் செழுமையும் இனிமையும் நிரம்பப் பெற்ற தமிழையும் அதன் பாரம்பரியத்தையும் மீண்டுமொரு முறைஅரங்கேற்றிட
இரண்டாம் கூடலாய் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோவையில் அமையக் காத்திருக்கும் விழா முத்தமிழ் விழா.

முத்தமிழ் விழா எமது கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் நுண்கலை மன்றத்தால் வருடந் தோறும் நடத்தப்பெற்று வருகின்றது.இதற்கான முதல் வித்து 2012ம் ஆண்டில் இடப்பட்டது.அன்று எம் கல்லூரிக்குள் மட்டும் நடைபெற்று வந்த இவ்விழா பின்னர் தேமதுர தமிழோசையை தேம தூர தேசங்களிலும் பரவச் செய்யும் பொருட்டு மாநில அளவிலான விழாவாக விரிவுபடுத்தப்பட்டது.இன்று தமிழ் நாடு கல்லூரிகள் வழங்கிவரும் விழாக்களில் சிறந்தவொன்றாக அறியப்படுகிறது.

Address


641013

Alerts

Be the first to know and let us send you an email when Muthamizh Vizha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muthamizh Vizha:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share