Sri Vishnumaya Swamy Seva Trust

Sri Vishnumaya Swamy Seva Trust 🐚ശ്രീ വിഷ്ണുമായ സ്വാമി സേവാ ട്രസ്റ്റ്
🐚ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமி சேவா டிரஸ்ட்
Coimbatore - 641045

08/02/2025

26/12/2023

#திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

#திருச்சிற்றம்பலம்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்

கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்

செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமையேலோர் #எம்பாவாய். 11

25/12/2023

#திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

#திருச்சிற்றம்பலம்

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலார் #எம்பாவாய். 10

24/12/2023

#திருவெம்பாவை

திருவண்ணாமலையில் அருளியது

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் #எம்பாவாய். 9

23/12/2023

#திருப்பாவை #8


Keezh vaanam vellendru! erumai siru veedu கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
Meyvaan paranthana kan! mikkulla pillaikalum மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
Poovan pokinraarai-popokaamal kaathu unnai-k வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
Koovuvaan vandhu ninrom! kothu kalamudaya கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
Paavaai! ezhunthiraai! paadi-p-parai kondu பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
Maavai-p-pilanthaanai, mallarai maatiya மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
Devaathi dhevanai chenrunaam sevithal தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
Aa Aaa enru aaraindhu arul-el or empaavaai ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் #எம்பாயாய்.

22/12/2023
21/12/2023

#திருவெம்பாவை

#திருச்சிற்றம்பலம்

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

21/12/2023

#திருப்பாவை
Pullum sillambina kaan; pull araiyan koilil புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
Vellai vili sangin peraravam kettilaiyo வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
Pillaai! ezhundirai peymulai nanjundu பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
Kalla-ch-chakatam kalallazhi-k-kaalochi கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
Vellathu aravil thuyil amarandha vithhinai வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
Ullathuk kondu munivarkalum yogikalum உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
Mella ezhundu 'Hari' enra per aravam மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
Ullam pukundhu kulirndhu-el or empaavaai உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் #எம்பாவாய்.

20/12/2023

#திருப்பாவை
Maayanai mannu vada Madhurai maindhanai மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
Thuyao-peruneer Yamunai-t-thuraivanai தூய பெருநீர் யமுனைத் துறைவனை
Aayar kulathinil thonrum mani vilakkai ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
Thaayai kudal vilakkam seida Dhamodharanai தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
Thooyomaai vandhu naam thoomalar thoovi-t-thozhudhu தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
Vaayinaal paadi manatthinaal sendhikka வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
Poya pizhayum pugutharuvaan ninranavum போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
Theeyinil thoosaakum seppu-el or empaavaai தீயினில் தூசாகும் செப்பேலோர் #எம்பாவாய்.

20/12/2023

#திருவெம்பாவை
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

19/12/2023


#திருப்பாவை
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
Aazhiyul pukku mugundhu koda aathu, ari ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
Oozhimudalvan uruvam pol mei karuthu ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
Paazhi am tholudai Padmanabhan kaiyil பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
Aazhipol minni valampuripol minru adhirndhu ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
Thaazhaade Sarngaam udhaitha saramazhai pol தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
Vaazha ulaginil peidhidaai; naangalum வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
Maargazhi neerada magizhndu-el or em paavaai. மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

16/12/2023

திருப்பாவை
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுமீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலோன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே, நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

Address

1 KP NAGAR, SUNGAM BY PASS Road
Coimbatore
641045

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vishnumaya Swamy Seva Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share