தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறைசங்கம் கோவை

  • Home
  • India
  • Coimbatore
  • தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறைசங்கம் கோவை

தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறைசங்கம் கோவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறைசங்கம் கோவை, Community Organization, Coimbatore.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற மரியாதைக்குரிய மாண்புமிகு *திரு.C. ஜோசப் விஜய்*  அவர்...
13/05/2026

தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற மரியாதைக்குரிய மாண்புமிகு *திரு.C. ஜோசப் விஜய்* அவர்களுக்கும், *அமைச்சர்* பெருமக்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற *சட்டமன்ற உறுப்பினர்கள்* அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை💐 தெரிவித்துக் கொள்கிறோம்.🤝

*தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் கோவை*

*இரங்கல் செய்தி*⬛⬛⬛⬛⬛⬛⬛⬛விஸ்வகுல பூஷணம்விஸ்வகுல காப்பாளர் தெய்வத்திரு. ஐயா K.P.சுப்பையன் ஆச்சாரியார்அவர்களின் துணைவியாரு...
04/11/2025

*இரங்கல் செய்தி*
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛

விஸ்வகுல பூஷணம்
விஸ்வகுல காப்பாளர்
தெய்வத்திரு. ஐயா K.P.சுப்பையன் ஆச்சாரியார்
அவர்களின் துணைவியாரும்

தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க
மாவட்ட தலைவர்

திரு K.P.S.பிரகாஷ் B.Com அவர்கள்,

மாநில பொருளாளர்/ சங்க போஷகர்
திரு.K.P.S.ராஜேஷ் B.A அவர்கள்
ஆகியோர்களது தாயாருமான

திருமதி.ராதா சுப்பையன் அவர்கள்

இன்று 04-11-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.00 மணியளவில் இறைவன் திருவடி அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்*...

அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

அன்னாரது இறுதிச் சடங்கு மாலை 4. 00 மணி அளவில் R.S. புரம் இல்லத்தில் நடைபெறுகிறது.

இங்கனம்..,

தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் கோவை.

💐💐💐அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
01/01/2025

💐💐💐அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

💐💐 இன்று திருமண நாள் காணும் நமது சங்க உறவின்முறை தலைவர் அவர்களுக்கும், துணைவியார்  அவர்களுக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்...
21/11/2024

💐💐 இன்று திருமண நாள் காணும் நமது சங்க உறவின்முறை தலைவர் அவர்களுக்கும், துணைவியார் அவர்களுக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நமது சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.,🙏🏻🙏🏻

இப்படிக்கு,

தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் கோவை

https://youtu.be/rqikrkI9tGY?si=VwsnmVULv_6xQm0BNN News Network கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் : கோயமுத...
08/11/2024

https://youtu.be/rqikrkI9tGY?si=VwsnmVULv_6xQm0B

NN News Network

கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் :
கோயமுத்தூர் ஜுவல்லரி கிளஸ்டர் சார்பில் சேர்மன் திரு அஞ்சலி C. N. சீனிவாசன், மேலாண்மை இயக்குனர் ராகவேந்திரா திரு.T.செந்தில்குமார், நிதி இயக்குனர் கடம்பூர் S. சீனிவாசன் ஆகியோர்கள் கிளஸ்டர் வளாகத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வரை வரவேற்று பங்குதாரர்களுடன் நன்றி தெரிவித்தனர்

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கோவை குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காகவும் கோவையில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோயம்புத்தூர் ஜுவல்லரி கிளஸ்டர் சார்பில் அதன் தலைவர் சி.என் சீனிவாசன்,
மேலாண்மை இயக்குனர்
டி.செந்தில்குமார்,
நிதி இயக்குனர்
எஸ்.சீனிவாசன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும், 60 பங்குதாரர்களால் ரூபாய் 4 கோடி முதலீடு செய்யப்பட்டு மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல்களோடு தயார் நிலையில் உள்ள எங்களது கிளஸ்டர் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி, பொற்கொல்லர்களின் பொது பயன்பாட்டிற்காக (CFC) மத்திய, மாநில அரசின் தங்க நகை தொழில் கூடத்தை முதல்வர் திறந்து சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொண்டோம். கோயம்புத்தூர் தங்க நகை கிளஸ்டர் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் சிட்கோ, சென்னை டான்சிட்கோ, எம்எஸ் எம்இ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் ஜுவல்லரி கிளஸ்டர் இயக்குனர்கள்
பிரேம்குமார், சுப்புராஜ்,
பி. காளியப்பன், ஆர்.பி சண்முகம், எம்.ரமேஷ்,
பி.ராமமூர்த்தி, வைரவமூர்த்தி,
மற்றும் பங்குதாரர்கள்
ஆர்.அய்யாதுரை, எஸ்.தனபாலன், எம்.விஜயகுமார், ராம் பிரகாஷ், வெங்கடாசலம்,
அர்ஜுன், வெங்கடேஸ்வரன்,
ஆறுமுகம், செல்வம், சீனிவாசன்,
பாலசுப்பிரமணி,
ராஜ்ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோயமுத்தூர்  கோல்டு ஸ்மித்ஸ் கவுன்சில் (கோயமுத்தூர் கோல்டு ஜுவல்லரி கிளஸ்டர்) இயக்குனர்கள், பங்குதாரர்கள்  சார்பாக அனைவர...
30/10/2024

கோயமுத்தூர் கோல்டு ஸ்மித்ஸ் கவுன்சில் (கோயமுத்தூர் கோல்டு ஜுவல்லரி கிளஸ்டர்) இயக்குனர்கள், பங்குதாரர்கள் சார்பாக அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...,

இப்படிக்கு.,
C.N.சீனிவாசன்
சேர்மன்

கோயம்புத்தூர் கோல்டுஸ்மித்ஸ் கவுன்சில்

🙏🏻🙏🏻🙏🏻RTM தெலுங்கு விஸ்வகர்மா உறவின்முறை சமூக சங்க  மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக...
23/09/2024

🙏🏻🙏🏻🙏🏻RTM தெலுங்கு விஸ்வகர்மா உறவின்முறை சமூக சங்க மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.,

💐💐💐 அரை நூற்றாண்டான ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிக்கு (22-09-2024) தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கத்திற்கு அழைப்பு கொடுத்து அந்த அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர் அந்தஸ்தை அளித்து, மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவித்து அறுசுவை உணவை வழங்கிய எங்களது சகோதர சங்கமான RTM சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கத்தின் சார்பாக நிறுவனர் என்கின்ற முறையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொன் விழாவை அடுத்து மரகத விழா, வைர விழா, பவள விழா, அமுதவிழா, நூற்றாண்டு விழா கண்டு கல்விப் பணியும் சமூக பணியும் தொடர வேண்டுமென்று சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏🏻🙏🏻🙏🏻
இப்படிக்கு.,

தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் கோவை

தெலுங்கு உள்ளூர் கம்ஸலவாரு அனைவருக்கும் வணக்கம் நாளை (22-09-2024) காலை 10:30 மணி அளவில்  நடைபெற இருக்கும் நமது சகோதர சங்...
21/09/2024

தெலுங்கு உள்ளூர் கம்ஸலவாரு அனைவருக்கும் வணக்கம்

நாளை (22-09-2024) காலை 10:30 மணி அளவில் நடைபெற இருக்கும் நமது சகோதர சங்கமான RTM சங்கத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிக்கு நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் உறவின்முறை சொந்தங்கள் அனைவரும் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
இப்படிக்கு.,
அஞ்சலி C.N.சீனிவாசன்
நிறுவனர்

தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் கோவை

நமது சங்கத்தில்  இன்று 15-08-2024 -78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நமது  சங்க அலுவலகத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத...
15/08/2024

நமது சங்கத்தில் இன்று 15-08-2024 -78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நமது சங்க அலுவலகத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் சரியாக காலை 9.00 மணிக்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நமது சங்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய Lion. Dr.திரு. B.கிருஷ்ணராஜ் அவர்கள் பொற்க்கரங்களால் தேசியக்கொடி ஏற்றி வைக்கின்றார்கள்.

அதுசமயம் நமது சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு,
பொதுக்குழு, மகளிர் அணி
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்
கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்று விழாவை சிறப்பு சேர்க்குமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு.,
அஞ்சலி C.N.சீனிவாசன் நிறுவனர்

தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின் முறை சங்கம் கோவை.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறைசங்கம் கோவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share