தேகஆற்றலின் எண்ணமே சிவசித்தன்

  • Home
  • India
  • Chinthamani
  • தேகஆற்றலின் எண்ணமே சிவசித்தன்

தேகஆற்றலின் எண்ணமே சிவசித்தன் மனிதனே, தேகமாய் உயிராய்,உணர்வாய்,பேராற்றலாய்,ஒளியாய்,--- "நானே அனைத்தும் சிவசித்தன்" .

மனிதனே,நீ உன் அகத்தில் எண்ணுவதைமுதலில் கவனி. நீ சொல்வது இந்த உலகம் படைத்ததில் இருந்து, வாழ்ந்த அனைத்து நிலையிலும் இருந்த மனிதன் சொன்னதைத்தான் நான் சொல்கிறேன்,என்றால் நீ நோய் என்ற ஒன்று இல்லாமல் வாழ்ந்து இருக்க வேண்டும்.துன்பம் இல்லாமல் வாழ்ந்து இருக்க வேண்டும்.உண்மையான எண்ணத்தில் நீ உணர்வை உணர்ந்து மனித பேராற்றலை உணர்ந்து வாழ்ந்து வந்து இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லியதை நான் சொல்லவில்லை என்பத

ை எம் வாசியோகக்கலை நீ அனைத்தையும் விட்டு விட்டு , வரும் போது உன்னுள்ளே நீயே உணர்வாய்.மற்றவர்களோடு எம்மை எப்பொழுதும் ஒப்பிடாதே. உண்மை என்பது மெதுவாகத்தான் வெளிவரும். "தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை"-- என்ற வார்த்தையை நீ அடிக்கடி சொல்கிறாய். ஏன் நீ இதுவரை தன்னை அறியவில்லையா ? மற்ற வேலைகளை பார்ப்பதை விட்டு விட்டு தன்னை அறிந்து உணர்ந்த பிறகு உன் அக எண்ணத்தால் நீ பேசினால் அது உனக்கு நன்மை, இல்லையேல் அந்த அக எண்ணத்தால் உன் தேகமே அழியும்."எண்ணத்தை எண்ணுபவன் ஏறும் இருவழி ஒன்றானால் எண்ணியதே எண்ணமாகும். அவனால் எண்ணியதே முதலும் முடிவுமான எண்ணமாகுமே."-----சிவசித்தன்

Address

Chinthamani
625009

General information

தேகத்தின் உண்மை உணர்வு ஆற்றலின் வெளிப்பாடு முதலும் முடிவுமாய்.

Alerts

Be the first to know and let us send you an email when தேகஆற்றலின் எண்ணமே சிவசித்தன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தேகஆற்றலின் எண்ணமே சிவசித்தன்:

Share