25/12/2025
*வேளாளர் வரலாறு*!
--- இந்த கட்டுரையை படித்து அனைவருக்கும் பகிருங்கள் ---
*சைவவேளாளர்* வரலாறு தெரியாதவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்... "
இதனை இத்தளத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...
முன்னுரை:
"சைவ வேளாளர்" இன்றைய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, இலங்கை என பல நாடுகளில் பல்கி பெருகி எங்கும பரந்து காணப்படுபவராவர்.
மேலும், சைவ சமயத்தின் தலைமையான *பதிணென் சுத்த சைவ ஆதீன மடத்திங்களுடைய மடாதிபதிகளாக உரிமை பூண்டிருப்பவர்களே சைவ வேளாண் குலத்தினராவர்*.
*சைவ வேளாளர்*:
சைவ வேளாளர் எனப்படுவோர் வேளாண்மையை முதன்மையாக செய்து பின் உழுவித்துண்ணும் முறையில் வேளாண் தொழில் செய்து பொருள் ஈட்டியது வணிகம் செய்தலும், ஆளுமைத்திறனும், ஆன்மீகத்தில் தழைத்தோங்கி தனிப்புகழும் கொண்ட குலமாம்.
மேலும், இவர்கள் காராளர், உழவர், காணியாளர் என்றும் போற்றப்படுகிறார்கள்.
மேற்படி, பண்டைய காவிரிபூப்பட்டினத்தில் (சோழ நாட்டின் பண்டைய தலைநகர்) பல்கிபெருகி வாழ்ந்த இம்மேன்மக்கள் பற்றி பட்டினபாலை இயற்றிய உருத்திரங்கண்ணனார், *"குலைகடிந்து(கொலைசெய்யாமல்), களவுநீக்கி(களவுசெய்யாமல்), ஆவுதி அருந்தியும்(சைவ உணவு உண்டு), நல் ஆனொடு பகடு ஓம்பியும்(பசு,காளையினை பாதுகாத்தும்), நான் மறையோர் புகழ்பரப்பியும்(நான்கு வேதங்களை கற்று, பின்பற்றியும்), பசும்பதம்கொடுத்தும்(பச்சை உணவுகளை விளைவித்துண்டும்), தண்ணிழல் வாழ்க்கைக் கொடும் மேழி நசை உழவர்"* என்றவாரு போற்றியுள்ளார். ஆக, நாகரிகங்களின் முன்னோடியாக வேளாண் குலத்தினர் இருந்தனர் என்பதை நாம் இங்கு அறிய முடிகிறது.
அதெப்படி வேட்டை தொழில் செய்யும், மேய்ச்சல் தொழில் செய்யும் இனம், களவு தொழில் செய்யும் இனம் என இருந்த காலத்திற்கு முன்பே உழவினை அடிப்படையாக கொண்டு தன்னாட்சி புரிந்த இனம் ஒன்று இருந்ததை நாம் அறிய முடிகிறது... ஆக, நாகரிகங்கள் இங்கு தோன்றும் முன்னே இங்குவந்து நாகரிகம் கற்றுதந்த இனமாகவும் இருக்கிறதென்பதில் எந்தவித ஐயமுமில்லை... இதற்கன்னே கிழார், உடையார், செட்டியார், முதன்மையார் என்ற பட்டத்தினையும் கொண்டிருந்தனர் இவ்வேளாண் மாந்தர்கள்.
இவர்கள் தனக்கென காணிகொண்டு காணியாட்சி செய்தனர். ஆம் காணி இருந்தால் தானே வேளாண்மை செய்தல் இயலும், அஃது வேளாளன் செய்தமையாலே வேளாண்மையும் ஆயிற்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே!
"காராளும் பெரும்புரிசை கதித்தோங்கு மாநகரிற்
சீராளும் முழுதுகண்ட ராமனெனப் பெயர்சிறந்து" (இடம்: திருநெல்வேலி (பாண்டிய நாடு) பாடல்: ஆறாவது வேண்டவளரந்த சருக்கம்) என்று காராளனான வேளாளன் புகழை எடுத்தியும்புவதற்கு இது ஒரு எச்சமே இதுபோல் அநேகம் உண்டு!
மேலும், வேளிரென்பார் பிற்காலத்தில் எட்டி, ஏனாதி, காவிதி பட்டம் எய்தினர் என்பது அனைவரும் அறிவோம்.
அதன்கன்னே இன்றளவும் எட்டி --> செட்டி பட்டமும், ஏனாதி--> சேனாதிபதி பட்டமும் இவர்கள் கொண்டுள்ளனர் என்பதும் கருத்திற்கொள்க!
மேலும், சோழர்கால கல்வெட்டுகளில் சைவ வேளாளர் குலத்தினர் (நல்லூருடையார் கோத்திரம்) "க்ஷத்திரய சிகாமனி" எனவும் குறிப்பிடப்படுகின்றனர்.
அரசு: இராசேந்திரன்
கல்வெட்டு: '...மூவேந்தவேளானும் க்ஷத்திரியசிகாமனி வளநாட்டு பனையூர்நாட்டு ஜனனாதநல்லூருடையான் காளிஆதித்த...' என்று குறிப்பிடுகிறது.
மடங்டளின் அதிபதியாக இருப்பதும் இவர்களது தனித்தன்மையாகவும் இருக்கிறது.
*பட்ட கிளைபிரிவுகள்*:
சைவ குருக்கள்,
சைவ தேசிகர்,
சைவ ஓதுவார்,
சைவ பிள்ளை,
சைவ முதலியார்,
சைவ செட்டியார்,
ஓ.ப.சீ வேளாளர்,
சைவ நயினார், காணியாளர்,
கவிராயர் ஆகிய பட்ட பிரிவினர் "சைவ வேளாளர்" ஆவர்.
*சைவ வேளாளர் கோத்திரங்கள்*:
வெண்ணெய்நல்லூருடையார், புதுச்சேரிக்குடையார், திரிகாத்தராயர், சேதுபராயர், காங்கையர் (கங்கையார்(காங்கேயர்)),
பிரவூருடையார், ஆலஞ்சேரிக்குடையார், பெருமலுடையார், சீனக்குடையார், அருமாரானோர், அன்னப்புக்காங்கையர், பாண்டியுடையார், கோமாக்கிழவர், நெற்குணமுடையார், திருமங்கையாழ்வார், வாணாதிராயர், சிங்கராயர், நல்லூருடையார், கொங்கைச்செங்கிழார், கோங்குராயர் (கொங்கு ராயர்), தென்னங்குடையார், கன்னங்குடையார், சென்னியுடையார், சிவபாதநேசர், பொன்னியாருடையார், புங்கனூர்கிழவர், மூவர்க்கிறைவர், மூர்த்தி நாயனார், மங்கலமுடையார், முடிசூட்டுத்தலைவர், முன்னூற்கிழவர், பெருமாளுடையார், காலிங்கராயர், கனகராயர், நாசிங்கதேவர், திருநல்லூருடையார், செம்பங்குடையார், விசயபாலர், வையவைப்பூருடையார்,
மழவராயர், வயலூர்க்கிழவர், வாழ்பாதமுடையார், செலமுர் பெரு மீனக்கொடியார், புகழ்ச்சோழராயர், வளகாவுடையார், கோத்தவேளார், குத்தியுடையார், புத்தக்குடையார், புரமெரித்திகழார், இகற்சோழராயர்,
இசை முப்பதுடையார், இளந்தையுடையார், தினகரத்துடையார், சிறுகளத்துடையார், பெருந்தமிழாளர், கண்ணலூருடையார், தண்டனைக்கிழார், அரியலூர்க்கிழவர், அரன்பாதமறவார், சிகேந்திரநாயனார், பரபணிபராக்கிரமர்.
*பட்டபிரிவுகள்*:
முதலாவதாக குருக்கள்,
தேசிகர்,
ஓதுவார் ஆகிய பட்டங்கள் சைவ சமய பணிகளில் சிறந்து விளங்கிய சைவ வேளாளர்க்குரியன.
இவர்கள் சைவ வேளாண்குலத்தினிற்றோன்றி சைவ சமயத்தில் தீக்கைகளின் நால்வகைப் படி நிலைகளாகிய
சமயம்,
விசேடம்,
நிருவாணம், ஆசாரியாபிஷேகம் என்னும் சிவதீக்கைகளை முறையாகப்பெற்று கல்வி கேள்விகளில் சிறந்து சிவாலயங்களிலும், திருமடங்களிலும் அணுக்கதொண்டர்களாகவும், ஆச்சாரியர்களாகவும் திருமுறை ஓதுபவர்களாகவும் இருப்பவர்கள்.
"தேசிகர்", "குருக்கள்" ஆகிய பட்டங்கள் சற்றேறக்குறைய ஒரே தன்மையான 'குரு' என்பதையே குறிப்பவை.
மேலும்,
"ஓதுவார் மூர்த்திகள்" முறைப்படி தீட்சைகளை பெற்று சிவாலயங்களிலும், தேவாரம், முதலிய பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், அபிராமியந்தாதி போன்றவர்களை இறையருளால் இசை மரபு கெடாமல் ஓதும் தன்மை கொண்டவர்வர்களாவர்.
அரசு: இராசராசன்
கல்வெட்டு: "...திருமுறைகளை அருளிப்பாடும் மகாதேவர்களாகிய ஓதுவாமூர்த்திகள்... " என்று சோழ மன்னர்களின் கல்வெட்டில் காணப்படுகிறது.
தஞ்சையில் சோழன் இவர்களுக்கு "திருக்கைக்கோட்டி" என்ற இடத்தை கோயிலில் நிறுவி பெருமதிப்பு செய்தான்.
ஓதுவார் மூர்த்திகள் "சிவபிடாரர்கள்" எனவும் அறியபடுகிறனர். பிடாரர் = ஆசாரியார்; சிவபிடாரர் = சிவாச்சாரியார் என்றும் போற்றப்பட்டனர்.
மேலும் 'தென்னிந்திய குலங்களும் குடிகளும் புத்தகத்தில்' 'Edgurd Thurston' இத்தகைய சிறப்பு வாய்ந்த "ஓதுவார்களை", "ஆதிசைவர்" (அந்தனர்) என்று குறித்துள்ளார்.
தேவர்
"...மகாதேவர்களாகிய ஓதுவார்மூர்த்திகள்..." என்று ஓதுவார்மூர்த்திகள் தேவர் ஆக அறியபடுகிறனர்.
மேலும், சோழனுக்கு முடிசூட்டிய ஆதிசைவகுலத்தில் தோன்றிய சைவ வேளாளர் குலத்தில் முடிசூட்டுத்தலைவர் கோத்திரத்தில் அவதரித்த திருமாளிகைத்தேவர் பதிணென் சித்தர்களில் ஒருவராயும் அறியபடுகிறார்.
மேலும், அருள்மொழித்தேவர் (சேக்கிழார்), மெய்கண்டதேவர், என்று இவர்கள் சைவ வேளாளர்களாக அறியப்பட்ட சான்று நிரம்பவே உள்ளது.
*பிள்ளை*:
"பிள்ளை" என்கிற பட்டமானது இவர்கட்கு வந்ததற்கு புராண வரலாறு உண்டு
செய்யுள் : சாத்திரதிரட்டு
"வேளாண் டலைவர் தாம் பிள்ளையே யெனவும்"
என்ற புராண நூல் மூலம் காஞ்சியில் காமாட்டியம்மையாக உமாதேவியார் சிவபூஜை செய்துகொண்டிருந்த காலத்தில் சிவபெருமானிடம் இரண்டு படி 'நெல்லை' பெற்றார். அதனை கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பதற்காக வேளாளர்களூ அழைத்து "பிள்ளைகளே" அந்த ''நெல்லை'' பயிரிட்டு விருத்தி செய்து முப்பத்திரண்டு தருமங்களையும் உலகில் செய்து நிலை நாட்டுவீர்களாக என்று நெல் விதையை அவர்களுக்கு அளித்தார். சிவபெருமான் பார்வதிதேவியின் ''பிள்ளைகளாதலால்'' "வேளாளர்கள்" தங்கள் பெயருக்கு பின் ''பிள்ளை'' என்று பெருமையாய் சேர்த்து கொண்டனர். பின் ஏனைய மக்கள் இவர்களை பெருமதிப்புடன் ''பிள்ளைவாழ்'' என்று அழைத்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி யில் இன்றும் அவ்வழக்கம் உள்ளது. சிவபெருமான் பார்வதிதேவியின் பிள்ளை ஆகியதாலயே தேவர்களின் முழுமுதற் கடவுளாகிய விநாயகர் "'பிள்ளையார்'" என்று அனைவராலும் போற்றப்பட்டார்.
"பிள்ளையார் (ஆர் - விகுதி, பெருமதிப்புடன் சேர்க்கப்படுகிறது).
*நயினார்*:
"நாயனார்" என்ற சொல் தலைவன், தந்தை சிவபெருமான், சிவனடியார் ஆகியவற்றை குறிக்கும்.
செய்யுள்: காணியாளர் அகவு "முன்னாட்டிலும்பிள்ளை' முதன்மையார்' சோழ
நன்னாட்டில் வாழும் நாயன்மா ரென்பார்'"
என்று வேளாண் மாந்தர்களின் பட்டங்களாகிய "பிள்ளை, முதன்மையார் (முதலியார்), நாயன்மார் (நயினார்) ஆகியவற்றை ஒருங்கே புகழ்ந்து காணியாளர் அகவில் பாடினார் 'கவிச்சக்கரவர்த்தி' கம்பர், அவர்கள்.
*செட்டியார்*:
வேளாண்மையால் உழுவித்து ஈட்டிய பொருளை வணிகம் செய்தனர் வேளாளர்கள். பின் அவர்கள் செட்டியார் என வழங்கப்பெறுகின்றனர். செட்டு என்றால் வணிகம் என்று பொருள் எட்டி சென்று வாணிகம் செய்தமையால் செட்டி என்று அழைக்கப்பட்டு பின் ஆர் விகுதியார் செட்டியார் என்று அழைக்கப்பட்டனர்.
வேளிரில் எட்டி,ஏனாதி போன்ற பட்டங்கள் உண்டென நச்சினார்கினியார் குறிப்பிட்டதையும் கருத்தில் கொள்க!
*முதலியார்*:
எனைய மரபினரிலும் வேளாளர் மேம்பட்டு விளங்கியமையாலும் உழவுத் தொழிலுக்கு முதலாகிய விளைநிலங்களுக்கு உரியவர்களாகவும் (நிலமாகிய முதல் உடையவர்கள்), மன்னன் அரசு கட்டில் ஏறும்போது அவனுக்கு புனையப்பெறும் முடியை எடுத்து நல்கும் உரிமையையும் பெற்றிருந்தார்கள் என்று "தொண்டை மண்டல சதகம்" எடுத்துரைக்கிறது.
வெள்ளாள குலத்தை சேர்ந்த சோழ அரசன் ஒருவன் காஞ்சியில் தன் மகனுக்கு முடி சூட்டும்போது, "தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்" மரபினரை அழைத்து அரசிளங்குமரனுக்கு முடிசூட்டும்படி வேண்டினான் என்ற வரலாற்றை அச்செய்யுள் கூறுகிறது.
கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்ப முதலியாரும் தொண்டை மண்டல ஆதிசைவவேளாளர் மரபினரே.
"முதன்மையாளர்", என்று அழைக்கப்பட்ட வேளாளர்கள் பின் "முதலியார்" என்று அழைக்கப்பட்டனர்.
*கவிராயர்*:
"சைவவேளாளர்களில்" கவிபாடும் திறன் உடையோர் "கவிராயர்" என அழைக்கப்பட்டனர்.
ஓ.ப.சீ சைவ வேளாளர்:
ஓ.ப.சீ வேளாளர் என்பது 'ஓ'மநல்லூர் 'ப'ட்டர்புரம் 'சீ'மைச்சம்பரிதி என்ற ஊர்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என்பதன் சுருக்கமாகும். "மூணூர் வேளாளர்" என்பவர்களும் இவர்களே. ஓமநல்லூர், பட்டர்புரம், சீமைச்சம்பிரிதி என்ற ஊர்களில் வாழ்ந்த "சைவவேளாளர்" '"திருமால்'" வழிபாடு செய்வதுண்டு.
*காணியாளர்*:
காணி என்றால் நிலம் ஆட்சி என்றால் ஆறுதல் என்றும் பொருள். "வேளாளர்க்குரிய" ''கிழார்'' என்னும் பட்டப்பெயர் ''கிழார்'', ''கிழவர்'', கிழவன்'' எனவும் வழங்கும். இவற்றிற்கு முறையே உரியவர், உரியவன், உரிமையாளர், உரிமையாளன் என்பது பொருள்.
நிலத்துக்குரியவர்கள் ''கிழார்'', ''கிழவர்'' எனப் பெற்றனர். இக்காலத்தில் ''மிராசுதார்'' என வழங்கும் உருது சொல்லுக்கு நிலம் உத்தியோகம் இவை சம்பத்தமாகப் பரம்பரையால் வரும் முழுப் பாத்தியமுடையவன் என்பது தான் பொருள். அதற்கு நிகரான தமிழ், "நிலக்கிழார்", "நிலக்கிழவர்", "காணியாளர்" என்பனவாகும்.
பெரியபுராணம் அருளிச்செய்த வேளாளர் குலத்தில் தோன்றிய சேக்கிழார் இயற்பெயர் அருள்மொழித்தேவர் இவர் கிழார் என்பதை சேர்த்து சேக்கிழார் என்று போற்றப்பட்டார்.
மேலும், வேளாளர்கள் சைவத்தையும் தமிழையும் சமூக ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காத்துவருகின்றனர். வேளாளர் சமுதாயம் தீண்டாமையை செய்யாது.
பெருமானருளால் ஆட்கொள்ளப்பட்ட அனைவரையும் மதிக்கக்கூடிய பண்பினையுடையவர்களாவர்.