18/08/2026
தாம்பரம் மாநகராட்சி பகுதியில், வீட்டு எண்கள் பல தெருக்களில், ஒரே எண் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு இருப்பதை நாம் காண்கிறோம்.
பல தெருக்களில் இந்த ஐந்து ஆண்டுகளில் பல மனைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு அதே கதவு எண் A, B என்று பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம். பல மனைகள், கட்டிட விதிகளை தவிர்ப்பதற்கு மனை உட்பிரிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கு ஒரு கதவு எண் கொடுக்கப்படுகிறது.
பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் எந்த மனைக்கும் கதவு எண் கொடுக்கப்படவில்லை.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் விரிவாக்க பகுதி நகர்களின் தெருக்களில் கதவு எண்கள் அவரவர் விருப்பத்திற்கு பதிவு செய்து கொள்கின்றனர்.
தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்த முறைப்படுத்தப்படாத வீட்டு எங்களினால் பல குளறுபடிகள் நேரிட வாய்ப்புகள் அதிகம்.
தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலை, தெருக்களின் மனை, வீட்டு எண்களை முறையாக வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.