Voice of people

Voice of people AIIEA RIGHT PATH, AIIEA LONG LIVE

06/06/2026

Com Varadharajan daughter marriage function

21/05/2026
21/05/2026

H.M.A.மாலிக் அவர்களைப்பற்றி தோழர் L.பழனியப்பன் அவர்கள் உரையாற்றினார்...

🚩
20/05/2026

🚩

*“போராட்டத்தின் புனித இசை” - தோழர் "சந்திரசேகர் போஸ்”*மூச்சை நிறுத்திக் கொண்ட ஒரு சகாப்தம்மௌனத்தில் முழங்கும் வரலாறு அது...
20/05/2026

*“போராட்டத்தின் புனித இசை” - தோழர் "சந்திரசேகர் போஸ்”*

மூச்சை நிறுத்திக் கொண்ட ஒரு சகாப்தம்
மௌனத்தில் முழங்கும் வரலாறு அது.
நிழலாய் நின்று பலருக்கு வெளிச்சம் தந்த
நெஞ்சம்
தோழர்.சந்திரசேகர் போஸ்.

வஞ்சிக்கப்பட்ட காலத்தின் காயங்களில்
வெந்நீராய் பொங்கிய எதிர்ப்பு,
நசுக்கப்பட்ட உரிமைகளின் சாம்பலில்
மீண்டும் எழுந்த தீப்பொறி,
அது தான் இந்த தொழிற்சங்க ஆசனின் பிறப்பு.

தன்நலனைத் துறந்த பாதையில்
தொண்டு என்ற தீபம் ஏந்தி,
ஊழியரின் குரலாய் மாறி
உயர்ந்த தியாகதின் அடித்தளமாய் நின்றார்.

எல்ஐசி வாசலில் வீசும் காற்றிலும்,
பொதுக் காப்பீட்டு அலுவலக சுவர்களிலும்
இன்னும் ஒலிக்கிறது அவரது நடையின் ஒலி,
அவர் போராட்டத்தின் புனித இசை.

நூற்றாண்டை கடந்தும் நிமிர்ந்த நேர்மையான தியாக வாழ்வு,
நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டும் நினைவு.
மக்களுக்காக வாழ்ந்தவர், மரணமில்லை
மாற்றத்தின் மண்ணில் விதையாக மாறுவார்.

வீரவணக்கம் உமக்கு,
செவ்வணக்கம் உமக்கு,
உங்கள் கொள்கை எங்கள் நடைபாதை,
உங்கள் தியாகம்
எங்களின் லட்சியம் உங்கள் நினைவு எங்கள் நிலையான தீபம்.

*-கவிஞர் சேரலதான்-*

தோழர் H. M. A. மல்லிக் - இரங்கல் கவிதை:மறைந்தார் மல்லிக் …மறையாத பாதைகள் விட்டுச்  சென்றார்…நூலக நிழலில் தொடங்கிய பயணம்,...
20/05/2026

தோழர் H. M. A. மல்லிக் - இரங்கல் கவிதை:

மறைந்தார் மல்லிக் …
மறையாத பாதைகள் விட்டுச் சென்றார்…

நூலக நிழலில் தொடங்கிய பயணம்,
நூற்றுக்கணக்கான உள்ளங்களில் ஒளி பரப்பியது…
புத்தக வாசனையில் வளர்ந்த சிந்தனை,
போராட்டக் களத்தில் தீயாய் எரிந்தது…

தோழர் என்று அழைத்த ஒவ்வொருவருக்கும்,
தோளாய் நின்ற தாரகையே அவர்…
கற்றுத் தந்த வார்த்தைகள் இன்று,
காலத்தைக் கடந்த குரலாய் ஒலிக்கின்றன…

லஞ்சமற்ற நெஞ்சம், நேர்மையின் நடை,
சங்கப் பாதையில் செதுக்கிய சின்னம்…
சிக்கலில் தள்ளாடும் பலருக்காய்,
சட்டத்தின் விளக்காய் நின்ற ஒளி…

சென்னையின் வீதிகளில் ஊழியர் வீடுகள் சாட்சி,
சங்கத்தின் வளர்ச்சி உங்கள் மூச்சு…
ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்து,
ஒளிந்தர் அவர் அமைதியாக…

ஆனால் தோழரே,
நீங்கள் சென்றதே இல்லை…
ஒவ்வொரு கொள்கையிலும்,
ஒவ்வொரு குரலிலும்,
நீங்கள் இன்னும் வாழ்கிறீர்…

கண்ணீர் சொட்டும் இந்த நொடியில்,
உங்கள் நினைவு நம்மை எழுப்புகிறது…
உங்கள் பாதையைத் தொடர்வோம்,
உங்கள் கனவை நிறைவேற்றுவோம்…

அஞ்சலி தோழரே…
உங்கள் போராட்டம் இன்றும் தொடர்கிறது…

-கவிஞர் சேரலதான்-

Dear Comrades, a meeting to unveil the photos of AIIEA leaders Com. Chandrasekhar Bose and Com. HMA. Mallick was held on...
20/05/2026

Dear Comrades, a meeting to unveil the photos of AIIEA leaders Com. Chandrasekhar Bose and Com. HMA. Mallick was held on 14.05.2026 at 5.30 PM at our Union office at Bharath Insurance Building. Befoy the commencement of the meeting condolences paid to the departed former ICEU General Secretary of Vellore Division Com.S. Raman. Then Com. G. Jayaraman former President of ICEU, Chennai Division - I, unveiled the photo of Com. Chandrasekhar Bose and Com. VDS garlanded the photo of Com. Chandrasekhar Bose. Com. L. Palaniappan former President of ICEU Chennai Division I unveiled the photo of Com. HMA. Mallick and Com. G. Mani, former DEC Member, ICEU garlanded the photo of Com. HMA. Mallick. Com. VDS spoke about the contribution of Com. Chandrasekhar Bose, and Com. L. Palaniappan spoke about the contributions of Com. HMA. Mallick. Com. S. Ramesh Kumar General Secretary, ICEU Chennai Division I addressed the meeting. Earlier Com. S. Ravikumar V.P, ICEU Chennai Division I welcomed the gathering and Com. D. Praveen J.S, ICEU Chennai Division I proposed vote of thanks. More than hundred comrades attended the meeting.
S. Ramesh Kumar

19/05/2026

தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களைப் பற்றி தோழர் VDS அவர்கள்

Dear comradesWe regret to inform you that Com.D.Manavalan, Former President of ICEU, Vellore Division passed away today....
19/05/2026

Dear comrades
We regret to inform you that Com.D.Manavalan, Former President of ICEU, Vellore Division passed away today. On behalf of SZIEF we convey our heartfelt condolences to the bereaved family members and comrades of ICEU Vellore Division - V.Suresh.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Voice of people:

Share

Category