22/05/2026
நாள்:-22.05.26.
தமிழக அரசின் அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.P. செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் உயர்திரு முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வனத்துறைகளின் வனப்படை தலைமை அலுவலர் அவர்களுக்கு வழங்கிய கடித எண். 13/நாள்.11.01.25 ன் படி மாநிலத்தில் பரவலாக காணப்படக்கூடிய கோனோகார்பஸ் வகை மரங்களை (அவை மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தன்மைகளின் காரணமாக) நீக்கி விட்டு , அதற்குப் பதிலாக வேறு நாட்டு மரபு ரக மர கன்றுகளை நடவு செய்திட அறிவுறுத்திய கடித நகல் காண்க.
ஆயிரம் நாளில் பசுமை வடசென்னை என்பதை இலக்காக கொண்டு இதுவரை கடந்த 738 நாளில் (21.05.26) 12010 மரக்கன்றுகளை வடசென்னை பகுதிகளில் நடவு செய்து வருவதுடன் , கோரிக்கை அடிப்படையில் தமிழகம் எங்கும் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் இலவசமாக அனுப்பி பசுமை பரவலை உயர்த்தி வருகிறோம்.
மேலும் சமீபத்தில் 2024-2025 ஆண்டுக்கான பசுமை முன்னவர் விருதினை சென்னை மாவட்டத்தில் எங்கள் பங்களிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
தவிர்க்கப்பட வேண்டிய கோனோகார்பஸ் வகை மரங்கள் அதன் தன்மையும், பொதுமக்களுக்கு பெயரும் தெரியாமலேயே தலைநகரில் பல இடங்களிலும் (குறிப்பாக சென்னை-தினத்தந்தி அலுவலகம் இருந்து வேப்பேரி காவல் நிலையம் செல்லும் சாலை ஓரம், மாதவரம் தோட்டக்கலை பூங்கா பின்புற சாலை, எர்ணாவூர் மேம்பாலம் அருகே, திருவள்ளூர் -மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை காம்பவுண்ட், மணலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல தொழிற்சாலைகள், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலய வெளிவட்ட பாதை, விருதுநகர் என) இவ்வகை மரங்கள் பல இடங்களிலும் வளர்வதை காண முடிகிறது.
அரசின் அறிவிப்பும், மரத்தை பற்றிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் மண்டலம் 1,2,3 அலுவலகங்களுக்கும் மற்றும் திருச்செந்தூர் ஆகிய உரிய விபரங்களுடன் கடிதம் வழங்கியும் உள்ளோம்.
நாம் செல்லும் இடங்களில் இந்த மரங்கள் இருப்பதை தொடர்ச்சியாக அறிந்தவுடன், இயற்கை ஆர்வலர் என்ற முறையில் இது பற்றியஅச்சம் ஊட்டுவதாக அமைகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (21.05.26) சென்னையில் இருந்து ரயில் மூலம் பயணிக்கையில் ஆண்டிபட்டி ரயில் நிலைய நடைமேடை பகுதி முழுவதம் இதே வகை கோனோகார்பஸ் வகை மரங்கள் புதிதாக நடவு செய்து வளர்ந்து வருவதை அறிகிறோம்.
எனவே மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் இது சம்பந்தமான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல் தருவதுடன், வளர்ந்து வரும் கோனோகார்ப்பஸ் மரங்களை வேரோடு களைந்து நமது நாட்டு ரக மரங்களை வளர செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இனியும் காலம் கடத்தாமல் மக்கள் நலனில் பொறுப்புள்ள புதிய அரசு, தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள அன்புடனும் நம்பிக்கையுடனும் வேண்டுகிறோம்.
இயற்கைய மீட்போம்.