15/07/2026
திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது.
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது.
எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும்.
இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.