02/08/2026
தென் சென்னை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று MGR நகர் மர்க்கஸில்,
மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் சென்ற மாத பணிகள் குறித்தும் இம்மாதம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் மாநில தலைவர் பங்கேற்கும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி.
நடத்திட முடிவு செய்யப்பட்டது.
மாநில தலைமையகத்தில் வட சென்னை மாவட்டம் சார்பில் நடக்க இருக்கும் கட்டுரை போட்டி நிகழ்ச்சியில் மக்களை திரட்டி பங்கேற்க செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது..
இன்ஷா அல்லாஹ்
ஆகஸ்ட் 22 ம் தேதி சென்னை சூளைமேட்டில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
திட்டப் பணிகளை விவாதித்ததுடன், சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
வல்ல இறைவன் பணிகளை பொருந்தி கொண்டு சிறப்பாக்கி வெற்றியாக்கி தருவானாக.!
- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் - தென்சென்னை மாவட்டம்..