23/11/2025
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், Vooki நிறுவனத்தின் பங்களிப்புடன், களத்திற்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு ‘ரெயின்கோட்’ வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு. ஆ. அருண், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மூத்த பத்திரிகையாளர்கள் திரு. என். ராம் மற்றும் திரு. நக்கீரன் கோபால் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.