Construction And Real Estate Industry Coalition - CRIC

Construction And Real Estate Industry Coalition - CRIC Construction And Real Estate Industry Coalition

🚀 The Tamil Nadu Council for Professional Civil Engineers (TNCPCE) is moving forward! 🚀Thanks to the tireless efforts of...
20/02/2025

🚀 The Tamil Nadu Council for Professional Civil Engineers (TNCPCE) is moving forward! 🚀

Thanks to the tireless efforts of President Ponkumar Ponnuswamy Ponkumar, we’re seeing major progress. After meaningful discussions with Tamil Nadu Chief Minister M. K. Stalin Minister E.V Velu, and other officials, we had a productive meeting today with Engineer-In-Chief Er.S.Manivannan. His support brings us one step closer to our goal!

Joining our President Ponkumar, in this significant meeting were:

Er. S. Jegadeesan (State Treasurer)
Er. J.L. Kumar (State Vice President)
Er. M.C. Vasanthakumar (State Joint Secretary & PRO)
Er. E. Thenarasu (State Joint Secretary)
Er. A. Vetriselvan (State Joint Secretary)
Er. Sudarshan Swathi Selvan (State Organization Secretary)

We’re committed to ensuring the success of this council for the benefit of all professionals and the public. Let’s keep building the future of engineering in Tamil Nadu! 🏗️

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்ட செயல்வீரர் கூட்டம் 22.01.2025 அன்று மாவட்டத் தலைவர் P.அ...
22/01/2025

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்ட செயல்வீரர் கூட்டம் 22.01.2025 அன்று மாவட்டத் தலைவர் P.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவர் Ponkumar Ponnuswamy அவர்கள் நிர்வாகத்தை மறுசீரமைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலாளர் என்.கொற்றவன், மண்டலத் தலைவர் V.K.முருகேசன், மண்டலச் செயலாளர் S.செந்தில்வேல், மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அயலக தமிழர்கள் தினத்தை சென்னையில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதாவது ஜனவரி இரண்டாவது வாரத...
11/01/2025

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அயலக தமிழர்கள் தினத்தை சென்னையில் சிறப்பாக கொண்டாடி வருகிறது.

அதாவது ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

11ஆம் நாள் முதல் நாள் நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன. இதில் கடைசி அமர்வு வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களுக்கான வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியத்தின் திட்டங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வுக்கு துறை அமைச்சர் நாசர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் #தலைவர் Ponkumar Ponnuswamy அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கி உள்ளவர்கள் ஒரு பிரிவாகவும் வேலைக்காக வெளிநாடுக்கு சென்று திரும்ப கூடியவர்கள் ஒரு பிரிவாகவும் அரசு பார்க்க வேண்டும் வேலைக்காக புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் தான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களின் நலனை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த வாரியம் செயல்பட வேண்டும். குறிப்பாக வாரியத்தில் பதிவு செய்வதற்கு இலவசமாகிட வேண்டும். பதிவு செய்த தொழிலாளர் இறந்து போனால் தான் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை மாற்றி பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைத்திட வேண்டும். கிராம சபை கூட்டங்களில் புலம்பெயர்வை ஒரு விவாத பொருளாக சேர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அமைச்சர் உடனடியாக இந்த கோரிக்கைகளை முதல்வரோடு பேசி பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தார்.

நேற்று (27.12.24) மாலை சென்னை அரும்பாக்கம் லீக் கிளப்பில்    #2025 டைரி வெளியீட்டு நிகழ்வு தலைவர் பொன்குமார் தலைமையில் ச...
28/12/2024

நேற்று (27.12.24) மாலை சென்னை அரும்பாக்கம் லீக் கிளப்பில் #2025 டைரி வெளியீட்டு நிகழ்வு தலைவர் பொன்குமார் தலைமையில் செயலாளர் யுவராஜ் , பொருளாளர் பொறி.S.ஜெகதீசன் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

2025 டைரிக்கான விளம்பர பெற்ற கடலூர் கிழக்கு,திண்டுக்கல், செங்கல்பட்டு, வடசென்னை (கி),தென்சென்னை தெற்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கோவை கிழக்கு, பெரம்பலூர்,மதுரை, வேலூர் மாவட்டங்களையும், திரு.ரத்தினம், திரு.ராஜாராம், திருச்சி சிவக்குமார், திரு. முனீர் ஆகியோரையும் தலைவர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.

டைரி குழுவினரான J.L.குமார்,S.ஜெகதீசன், ரஜினிராஜ், ராமு ஆகியோரை பாராட்டினார்.

டைரியில் உள்ள விளம்பரதாரர்களுக்கு நம் நிர்வாகிகள் பிசினஸ் தந்து உறவை பேணி காத்திட தலைவர் அறிவுருத்தினார்.

டைரிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாநில மண்டல நிர்வாகிகளுக்கும் நன்றி.!!

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் கோவையின் நான்கு மாவட்டக் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 22.12.2024அன்று கோவையில் ...
22/12/2024

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் கோவையின் நான்கு மாவட்டக் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 22.12.2024அன்று கோவையில் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் ராஜதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் #தலைவர் #பொன்குமார் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 29ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் மண்டல மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொழிற்சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தனர்.

மாவட்டம் சார்பில் அச்சிடப்பட்ட #மாதாந்திர #நாள்காட்டியை தலைவர் பொன்குமார் அவர்கள் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

CRIC கூட்டமைப்பின் மாநில செயற்குழுநேற்று திருச்சியில் நடந்த CRIC கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில், கட்டுமான பொருட்களின்...
10/12/2024

CRIC கூட்டமைப்பின் மாநில செயற்குழு

நேற்று திருச்சியில் நடந்த CRIC கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில், கட்டுமான பொருட்களின் அபரிதமான விலை ஏற்றத்தை குறைக்க கோரி ஒன்றிய/தமிழக அரசுகளை வலியுறுத்திய செய்தி... தமிழ் இந்து நாளிதழில் தமிழகமெங்கும்....

#கட்டுமானபொருட்கள் #விலையேற்றம் #தமிழகம் #திருச்சி #செய்தி #இந்துதமிழ்

 #சீர்மிகுபொறியாளர்விருது |  #கட்டுமானத்துறை |   #பொன்குமார் சென்னையில் தமிழ் இந்து நாளிதழும், ராம்கோ சிமெண்ட் இணைந்து ப...
10/12/2024

#சீர்மிகுபொறியாளர்விருது | #கட்டுமானத்துறை | #பொன்குமார்

சென்னையில் தமிழ் இந்து நாளிதழும், ராம்கோ சிமெண்ட் இணைந்து பொறியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது 06.12.2024 அன்று தி.நகர், வாணி மஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் கட்டுமானப் பொறியாளர்களுக்கு சீர்மிகு பொறியாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர் Ponkumar Ponnuswamy அவர்களுக்கு இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் அசோகன் அவர்கள் புத்தகம் வழங்கி கௌரவித்தார்.

TAMILNADU COUNCIL FOR PROFESSIONAL ENGINEERING COUNCIL - TNCPCEபொறியாளர் கவுன்சில் அமைப்பது சம்பந்தமாக கட்டுமானம் மற்றும...
30/07/2024

TAMILNADU COUNCIL FOR PROFESSIONAL ENGINEERING COUNCIL - TNCPCE

பொறியாளர் கவுன்சில் அமைப்பது சம்பந்தமாக கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு - CRIC கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் முயற்சி எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

தலைவர் பொன்குமார் அவர்கள் இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு மற்றும் முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து விரிவாக விவாதித்துள்ளார்கள்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் , அரசு அதிகாரிகள் உடண் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது .

இந்நிலையில் இன்று 29-7-2024 பொதுப்பணித்துறை அமைச்சர் மான்புமிகு எ.வ. வேலு அவர்களின் அழைப்பின் பேரில் தலைவர் பொன்குமார் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநில பொருளாளர்
Er. S.ஜெகதீசன் ,மாநில இணைப் பொதுச்செயலாளர்கள்
ER. M.C.வசந்தகுமார் ,
Er. A.வெற்றிச்செல்வன் , ஆகியோர் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது பொறியாளர் கவுன்சிலுக்கு தேவையான ஆவணங்களை குறிப்பாக, ஒரு சட்ட முன்மாதிரி வடிவை CRIC அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டு அதனை இன்று அமைச்சரிடம் வழங்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இறுதியாக இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து பேசி இந்த கவுன்சில் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தப்படும் என்ற உறுதியை அளித்துள்ளார்.

22/03/2024

Lions International life time: Achievement Awards

18/03/2024

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் உலகப் பெண்கள் தின நிகழ்ச்சி 17.03.2024 ஞாயிற்று கிழமை அன்று திருவள்ளூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக பறையடித்தல் சிலம்பம் போன்ற சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடந்தேறியது. அதன் பின்னர் பெண்கள் மாநாடு தொடங்கியது. வரவேற்புரையாக மாநில மகளிரணி துணைத் தலைவர் ஜி.தனலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா மாவட்டத் தலைவர் செல்வமலர் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநாட்டிற்கு கே.பூங்கோதை தலைமை தாங்கினார். மாநாட்டில் இணை பொதுச் செயலாளர் ஆர்.மகேஸ்வரி, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.இந்துமதி, மகளிர் அணி செயலாளர் வி.சித்ரா, மகளிர் அணி துணைத்தலைவர் எஸ் ஆனந்த ஜோதி, மகளிர் அணி துணைச் செயலாளர் இ.மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர். இந்த நிலையில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர். தலைவர் பொன்குமார் அவர்கள் அமைச்சரை வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றார் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களிடம் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். காவல் துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் அலுவலரிடம் முன்னரே அனுமதி பெற்று இருக்க வேண்டும். இல்லை எனில் இது தேர்தல் விதிகளின் படி தவறானதாகும் என்று தெரிவித்ததால் நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி தலைவர் வினோத் பொன்குமார், பொதுச் செயலாளர்கள் என்.சுந்தராஜ், எஸ்.ஜெகதீசன், வி.சுப்புராயலு, ஜெகமுருகன், மாநில பொருளாளர் ஆர்.சேகர், தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கவிஞர் குரு நாகலிங்கம், மாநில துணைத்தலைவர் என்.லட்சுமணன், இணை பொது செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் ஜி.புருஷோத்தமன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம்.சி.வசந்தகுமார், துணை செயலாளர் ராஜன், அமைப்புச் செயலாளர்கள் பி.சுதர்சன் ஏ.ஜே.நாகராஜ், இளைஞரணி செயலாளர் என்.சமைய செல்வம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 600-க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருவாயாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

கட்டுமானம் மற்றும் மனை தொழிலில் பதிவுத்துறை முக்கிய பங்காற்றுகிறது.அண்மையில் பதிவுத்துறையில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்க...
29/02/2024

கட்டுமானம் மற்றும் மனை தொழிலில் பதிவுத்துறை முக்கிய பங்காற்றுகிறது.

அண்மையில் பதிவுத்துறையில் கொண்டுவரப்பட்ட சில மாற்றங்களால் சில சிரமங்கள் நேர்ந்த்து. இது குறித்து இன்று (29.02.24) பதிவுத்துறை அமைச்சர் மான்புமிகு மூர்த்தி அவர்களை கட்டுமானம் மற்றும் மணித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார், பொருளாளர் பொறி.S. ஜெகதீசன், BAI சார்பில் (CMDA & RERA committee Chairman) திரு. சாந்தகுமார் ஆகியோர் சந்தித்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

இதில் மனை மற்றும் கட்டிட பதிவிற்கு முன் அக்ரீமெண்ட் மேற்கொள்வது,

அதைப்போல 1% பவர் ஆப் அட்டர்ணி (POA) மேற்கொள்வது,

சென்னையில் வீதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டு மதிப்பீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்தல்,

போன்ற பிரச்சனைகள் குறித்து சுமூகமாக பேசி ஒரு முடிவுக்கு வர அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது இயலாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் தொழில் சார்ந்த பல்வேறு அமைப்புகள் கலந்து பேசி அரசோடு இணக்கமாக வந்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பது இந்த பேச்சுவார்த்தையின் மூலம் அறியப்பட்டது. இது குறித்து விரைவில் மீண்டும் சந்தித்து பேசுவதென முடிவெடுக்கப்பட்டது.

23/02/2024

கடைசிநாள் 29-2-2024
www.tnlayoutreg.in GO-118_ படி Rs 500-ல் (Approved Plot-CMDA/DTCP) வரைமுறை படுத்தாத மனைகளை (Unapproved Plot-CMDA/DTCP) வரைமுறை படுத்திக்கொள்ள (Approved Plot-CMDA/DTCP) அரசாணை வெளியிடப் பட்டதை பயன்படுத்திக்கொள்ளுமாறு CRIC அமைப்பின் தலைவர் பொன்குமார் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Address

Chennai
600026

Opening Hours

Monday 9:30am - 5pm
Tuesday 9:30am - 5pm
Wednesday 9:30am - 5pm
Thursday 9:30am - 5pm
Friday 9:30am - 5pm
Saturday 9:30am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Construction And Real Estate Industry Coalition - CRIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Construction And Real Estate Industry Coalition - CRIC:

Share