Maattru ulaa friends trust

Maattru ulaa friends trust Bike taxi mattru ulaa it's a pickup and drop service via bike

மாற்று உலா 30 மற்றும் 31 ஆவது ஆட்டோக்களின் திறப்பு விழா நேற்று சிறப்பு கொண்டாட்டத்துடன் துவங்கப்பட்டது நிகழ்வில் பங்கு ப...
06/04/2026

மாற்று உலா 30 மற்றும் 31 ஆவது ஆட்டோக்களின் திறப்பு விழா நேற்று சிறப்பு கொண்டாட்டத்துடன் துவங்கப்பட்டது நிகழ்வில் பங்கு பெற்ற நம்முடைய சொந்தங்களுக்கு வாரம் வாரம் சிறந்த முறையில் பயிற்சி கொடுக்கும் சிறந்த பயிற்சியாளர்களுக்கும் ஆட்டோக்களை தூய்மையாக பராமரிக்கும் நண்பர்களுக்கும் சிறப்பாக வழி நடத்தியவர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் ஆட்டோ பெற்ற நண்பர்களின் வாழ்வாதாரம் மேம்பட இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏🙏

27-03-2026  சென்னை மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் வெற்றிகரமாக ஆட்டோ ஓட்டும் பயிற்சி முடித்த 1. வடிவேல்2. சுகந...
27/03/2026

27-03-2026 சென்னை மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் வெற்றிகரமாக ஆட்டோ ஓட்டும் பயிற்சி முடித்த
1. வடிவேல்
2. சுகந்தன்
மேலும் இரண்டு நண்பர்களுக்கு ஆட்டோ வழங்குவதற்கான முன்பணம் தலா ரூபாய் 50,000 மொத்தம் ஒரு லட்சம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது இரண்டு நண்பர்களும் பொருளாதார தடை இல்லாமல் சீரும் சிறப்புமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றி 🙏🙏🙏

02-03-2026  சென்னை முழுவதும் மாற்றுத்திறனுடைய சொந்தங்கள் மூலமாக இயக்கப்படும் நமது மாற்று உலா நண்பர்கள் ஆட்டோ  எண்ணிக்கைய...
02/03/2026

02-03-2026 சென்னை முழுவதும் மாற்றுத்திறனுடைய சொந்தங்கள் மூலமாக இயக்கப்படும் நமது மாற்று உலா நண்பர்கள் ஆட்டோ எண்ணிக்கையில் மேலும் இரண்டு சொந்தங்கள் இணைந்துள்ளார்கள் அவர்களின் வாழ்க்கை பாதை சீராக ஓடவும் சிரமமின்றி அமையவும் மாற்று உலா நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம் 💐💐💐மேலும் அடுத்த இரண்டு நண்பர்களுக்கு ஆட்டோ வழங்கும் அறிவிப்பு இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி🙏🙏🙏

 #08-02-2026 மேலும் இரண்டு ஆட்டோகளுக்கான முன்பணம் தலா 50 ஆயிரத்திற்கான  காசோலையை எங்களின் (வீல் சேர் கிரிக்கெட், வாலிபால...
08/02/2026

#08-02-2026 மேலும் இரண்டு ஆட்டோகளுக்கான முன்பணம் தலா 50 ஆயிரத்திற்கான காசோலையை எங்களின் (வீல் சேர் கிரிக்கெட், வாலிபால்,) தலைமை பயிற்சியாளர் பாசமிகு அண்ணன் அனீஸ் நடராஜன் மற்றும் அன்பு சகோதரர் ராஜ்கமல் இவர்களின் திருகரங்களால் ஆட்டோ ஓட்டும் பயிற்சியில் தேர்வான
1. சிவராஜ்
2. கோபிநாத் ஆகிய இரண்டு நண்பர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது அவர்கள் வாழ்வில் துயரங்களைக் துடைத்து துடிப்புடன் செயல்பட்டு தூண் போல் வளர எங்களின் மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி...

 #அடுத்த இரண்டு ஆட்டோ O4.12.2025 மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக மாற்றுத் திறனுடைய சொந்தங்களின் சுய வேலைவாய்ப்ப...
05/12/2025

#அடுத்த இரண்டு ஆட்டோ O4.12.2025 மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக மாற்றுத் திறனுடைய சொந்தங்களின் சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் அவர்கள் பொருளாதார மேம்பாட்டில் வளர்ச்சி அடையவும்
திரு. அனீஸ் நடராஜன்
திரு. தமிழரசன் ஆகிய இரண்டு சகோதரர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது தங்களது பயணத்தை இனிதே துவங்கிய அவர்கள் வெற்றி எல்கையையும் எளிதில் முடிப்பார்கள் என்று நம்புகிறோம்... இதுவரை நிபந்தனைகள் இன்றி வழங்கப்பட்ட ஆட்டோ வருகிற காலங்கள் அனைத்திலும் அவர்கள் நலன் சார்ந்த ஒரு சில நிபந்தனைகளோடு வழங்கப்படுகிறது நிபந்தனைகள் கடினமாக இருந்தாலும் அதை தங்கள் நலம் கருதி தான் எடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து இருவருமே இன்முகத்தோடு சாவியை பெற்றுள்ளார்கள் உங்களின் உறுதித் தன்மை மேலும் எங்களுக்கு வலு சேர்க்கும் என நம்புகிறோம் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் நன்றி...🙏🙏🙏

14-11-2025 அடுத்த இரண்டு நண்பர்களுக்கு ஆட்டோ வாங்க முன் பணம் தலா 50,000  ரூபாய்க்கான காசோலை  வழங்கப்பட்டது 1. அனீஸ் நடரா...
14/11/2025

14-11-2025 அடுத்த இரண்டு நண்பர்களுக்கு ஆட்டோ வாங்க முன் பணம் தலா 50,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது
1. அனீஸ் நடராஜன்
2. தமிழரசன்
அவர்கள் இருவருக்கும் மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி ...

The next two friends were given a cheque for Rs. 50,000 each as advance payment to buy an auto
1. Anish Natarajan
2. Tamilarasan
Congratulations to both of them on behalf of the MAATRU LAA Friends trust...

31-08-2025 ஞாயிற்றுக்கிழமை இன்று மாற்றுத்திறன் உடைய நண்பர்களின் வாழ்வாதார மீட்சியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும...
31/08/2025

31-08-2025 ஞாயிற்றுக்கிழமை இன்று மாற்றுத்திறன் உடைய நண்பர்களின் வாழ்வாதார மீட்சியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் மேலும் இரண்டு நண்பர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது அவர்கள் இதுவரை சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த வாகனம் அமையும் என்று நம்புகிறோம் நிதி ஒதுக்கிய பாசமிகு அண்ணனுக்கும் இறைவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் தொடர்ச்சியாக ஆட்டோ ஓட்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது அடுத்தடுத்து நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்று நம்புகிறோம் நன்றி...

விரைவில் இந்த வார இறுதிக்குள் மாற்று உலா நண்பர்கள் இயக்கம் சார்பில் மேலும் இரண்டு நண்பர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட உள்ளது வ...
27/08/2025

விரைவில் இந்த வார இறுதிக்குள் மாற்று உலா நண்பர்கள் இயக்கம் சார்பில் மேலும் இரண்டு நண்பர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட உள்ளது வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் சைதாப்பேட்டை மெட்ரோ பின்புறம் மாற்றுத் திறனுடைய சொந்தங்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது கடந்த இரண்டு வாரங்களாக இந்திய அணியில் வீல் சேர் கிரிக்கெட் பயிற்சியாளராக தடம் பதித்துள்ள பாசமிகு அண்ணன் அனீஸ் நட்ராஜ் அவர்கள் பயிற்சியை சிறப்பித்தார்கள் அவருக்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இந்தப் பிறவி இவ்வாறு அமைக்கப்பட்டதின்
நோக்கம் இறைவன் நம்மளை முழுவதுமாக நம்புகிறார் என்று தான் அர்த்தம்
ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு நபருக்கு முக்கியமாக கை, கால் மூளை ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும் உதாரணத்திற்கு ஒரு போர் வீரன் பெரியவாள் பாதுகாப்புக்காக கேடயம் தலைக்கவசம் அனைத்தையும் பயன்படுத்துகிறான் சிறந்த வீரன் சிறு கை கத்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு போருக்கு துணிவான் அதேபோல் நம் நண்பர்கள் அனைவரும் இல்லையே என்று நினைக்காமல் நமக்கு கொடுக்கப்பட்ட அளப்பரிய ஆற்றல் இங்கே எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்ற எண்ணத்தோடு துணிந்து செல்வோம் வெற்றி பாதையில்... ஒரு செயலை குறைபாடுகள் இருந்தாலும் நம்மால் முடிக்க முடியும் என்று இறைவன் நம்பும்போது நம் மேல் நாம் நம்பிக்கை வைத்து வெளியே வர வேண்டும்
தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு மாற்றுத் திறனுடைய சொந்தங்களும் தனக்கென ஒரு வாழ்வாதார பயணத்தை அமைத்து கொள்ளுங்கள் அதுவே நம் வாழ்வில் தனித்துவமாக வாழ்வதற்கு உதவும் நன்றி...

79 ஆவது சுதந்திர தினம் வெகு சிறப்பாக மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு விரு...
15/08/2025

79 ஆவது சுதந்திர தினம் வெகு சிறப்பாக மாற்று உலா நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மதிப்பிற்குரிய டாக்டர் தமிழ்ச்செல்வி மேடம் மற்றும் ஷோபனா மேடம் இருவருக்கும் எங்கள் இயக்கத்தின் சார்பில் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

04/08/2025
ஹலோ வணக்கம் மாற்று உலா நண்பர்களா மீஞ்சூரில் மோகன்ராஜ்  என்பவரை சந்தித்தோம் அவர் உங்களை தொடர்பு கொள்ள சொன்னார் ஆட்டோ ஓட்ட...
04/08/2025

ஹலோ வணக்கம் மாற்று உலா நண்பர்களா மீஞ்சூரில் மோகன்ராஜ் என்பவரை சந்தித்தோம் அவர் உங்களை தொடர்பு கொள்ள சொன்னார் ஆட்டோ ஓட்டுவது சம்பந்தமாக
யாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் உங்களுக்கா இல்லை அண்ணா என்னுடைய நண்பனுக்கு சிறுவயதில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள் திருமணம் முடிந்து குழந்தை குட்டிகளோடு சிரமப்படுகிறான் இதுவரை நிலையான வருமானம் ஏதுமில்லை எப்படியாவது என் நண்பனுக்கு உதவுங்கள் என்று பயிற்சி கொடுக்கும் இடத்திற்கு தனது தோள் மேல் வைத்து சுமந்து கொண்டு வந்தார்
நல்ல நண்பன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான் இப்படிப்பட்ட அழகிய நண்பர்களை
நண்பர்கள் தினத்தன்று சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கிய பாசமிகு அண்ணாச்சி மோகன்ராஜ் கும்மிடிப்பூண்டி அவர்களுக்கு மாற்று உலா நண்பர்கள் இயக்கம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி🙏

Address

Chennai

Telephone

+917010685459

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maattru ulaa friends trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share