11/04/2023
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், குருநாதபுரம் கிராமம் (மேல்பட்டி அருகில்)
ஸ்ரீ ஞானசாயி பாபா திருக்கோயிலின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் யோக தட்சிணாமூர்த்தி திருமேனி பிரதிஷ்டை விழா அழைப்பிதழ்
சாய்நாதருடைய அன்பும்,மங்களங்களும் பெருகட்டும்...
நிகழும் மங்களகரமான சோபக்கிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் நாள் 22.04.2023 சனிக்கிழமை தொடங்கி ,சித்திரை மாதம் 10 ஆம் நாள் 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில்,நமது குருநாதபுரம், சிவஞான மலையின் அடிவாரத்தில் எழுந்தருளி எல்லா வளங்களையும் மங்களங்களையும் வழங்கி அருள்பாலித்து கொண்டு இருக்கும் குருநாதபுரம் ஸ்ரீ ஞானசாயி பாபா திருக்கோயிலின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா
ஸ்ரீ ஞானசாயி திருக்கோயிலின் நிறுவனத் தந்தை,
ஞானகுருநாதர் ஸ்ரீ LLS மணிகண்டன் அய்யா,
அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. அதே நன்னாளில் யோக தட்சிணாமூர்த்தி திருமேனி பிரதிஷ்டையும் நடைபெற உள்ளது.
அதுசமயம் அனைவரும் ஸ்ரீ ஞானசாயி பாபா மற்றும் குருமார்களின் அருள் பெற்று, மங்களங்களுடன் நலமாய் வாழ இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.
இங்ஙனம்,
கற்பகதரு அறக்கட்டளை,ஞானசாயி பாபா திருக்கோயில் மற்றும் ஊர் பொதுமக்கள்,குருநாதபுரம்.
பஸ் ரூட்:- ஆம்பூர் to குடியாத்தம் பேருந்துகள் (மேல்பட்டி வழி)
பஸ் ஸ்டாப்:- குருநாதபுரம் (மேல்பட்டிக்கும்,கீழ்பட்டிக்கும் இடையில்)
நிகழ்ச்சி நிரல்
நாள் 22 .04.2023 சித்திரை 9 - சனிக்கிழமை
மாலை 6 மணிக்கு
திருவிளக்கு வழிபாடு, குரு வழிபாடு, புனித வழிபாடு, விநாயகர் வழிபாடு
மாலை 7 மணிக்கு
முதல் கால வேள்வி ஸ்ரீ ஞானசாயி பாபா மற்றும் வீர ஆஞ்சநேயர், ஞானகணபதி, ஸ்ரீ தாத்ரேயர் மற்றும் யோக தட்சிணாமூர்த்தி தெய்வங்களுக்கு திருமஞ்சன ஆகுதி, திரவிய ஆகுதி, பூரணாஹுதி .மலர்வழிபாடு, திருமுறை விண்ணப்பம்,திருவடி விண்ணப்பம்
ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல்
நாள் 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 6 மணிக்கு
திருப்பள்ளியெழுச்சி,மங்கள இசை
காலை 7 மணிக்கு
இரண்டாம் கால வேள்வி ஸ்ரீ ஞானசாயிக்கு
உபசாரங்கள் மற்றும் பூரணாஹுதி
காலை 9.30 மணிக்கு
கலசப் புறப்பாடு
காலை10.00 மணிக்கு
பரிவார தெய்வங்களான வீர ஆஞ்சநேயர், ஞானகணபதி, ஸ்ரீ தாத்ரேயர் கலச நீராட்டு
காலை 10.30மணிக்கு
பரிவார தெய்வமான அருள்மிகு ஆலமர் செல்வன் யோக தட்சிணாமூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
காலை 11.00 மணிக்கு
ஸ்ரீ ஞானசாயி பாபாவிக்கு அபிஷேகம் மற்றும்
ஆரத்தி
மதியம் 12 மணிக்கு
அன்னப் பிரசாதம் வழங்கப்படும்.
குறிப்பு:-வேள்வி மற்றும் யோக தட்சிணாமூர்த்தி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா செஞ்சேரிமலை சுவாமிகளின் அருளாசியோடு, அவர்களின் குழுவினரால் நடத்தப்படுகிறது.
தொடர் நிகழ்வுகள்
யோகி.ஜெயஸ்ரீ மணிகண்டன் அவர்கள் தலைமையில் பிரதி வியாழக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீ ஞானசாயி பாபாவிக்கு சிறப்பு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெறும்.
பிரதி மாதம் பௌர்ணமி தோறும் காலை 11.00 மணிக்கு சத்யநாராயண பூஜையும், தொடர்ந்து ஸ்ரீ ஞானசாயி பாபாவுக்கு சிறப்பு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெறும்.
குறிப்பு:- ஸ்ரீ ஞானசாயி திருகோயிலின் திருப்பணி மற்றும் கட்டிட வேலைகளுக்கு தங்களால் இயன்ற நன்கொடை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கின் விபரம்:
A/C Name : Karpagadaru Trust
A/C no : 922010034818194
Axis bank Branch : West Mambalam
Ifsc code -: UTIB0001714
Gpay No : 63822 24085 Karpagadaru Trust
(80G யின் கீழ் வரவிலக்கு உண்டு என்பதையும் கனிவோடு தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்)
Contact numbers:-. +91 98946 82444, +91 80723 28614, +91 96298 92788,+91 86107 24237 , +91 88613 50513