19/07/2026
*இருதய அறுவை சிகிச்சைக்கு A1 பாசிட்டிவ் இரத்தம் தேவை: உயிர்காக்க பெரம்பலூர் விரைந்த காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்*
அதிராம்பட்டினம், ஜூலை 19:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஜமால் முகமது மற்றும் மும்தாஜ் பேகம் ஆகிய இருவருக்கும் A1 பாசிட்டிவ் (A1 Positive) இரத்தம் தேவைப்பட்டது.
தேவையான இரத்தம் பல நாட்களாகக் கிடைக்காததால், இருவருக்குமான இருதய அறுவை சிகிச்சை தாமதமாகி வருவதாகத் தகவல் கிடைத்தது.
இதையறிந்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தன்னார்வ இரத்ததான அமைப்பு, உடனடியாக இரத்ததானத்திற்கு ஏற்பாடு செய்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்கள், இருவரின் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவும் வகையில் இரத்ததானம் வழங்குவதற்காக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்குச் சென்றனர்.
*M.I. Abdul Razak, P. Suhail, A. Hazeer, Y. Abdul Rahuman, A. Mohamed Mubaris, M.I. Mohamed Mahin, M. Musthaq Ahamed, J. Ziyad Ahamed, S. Asik* ஆகிய 9 மாணவர்கள் இந்த உயிர்காக்கும் இரத்ததானப் பணியில் பங்கேற்றனர்.
உரிய நேரத்தில் இரத்தம் கிடைக்காமல் அறுவை சிகிச்சை தாமதமாகிய நிலையில், இரண்டு உயிர்களைக் காக்க மாணவர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்கிய மனிதநேயச் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
*பேராசிரியர் கா. செய்யது அகமது கபீர்*
ஒருங்கிணைப்பாளர்
தன்னார்வ இரத்ததான அமைப்பு
காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம். 8883184888