20/08/2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘WoW – Women of Wonder Awards 2026’
41-க்கும் மேற்பட்ட சாதனைப் பெண்களுக்கு விருதுகள் மற்றும் உலக சாதனை அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு
*சென்னை, ஆகஸ்ட் 20:*
பெண்களின் சாதனைகளை அடையாளம் கண்டு, அவர்களின் திறமை, உழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் *“WoW – Women of Wonder Awards 2026”* விருது வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள *தி பிரசிடென்சி கிளப்பில்* இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரான முனைவர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட *41-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், சமூக சேவகர்கள், கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனைப் பெண்களுக்கு “WoW – Women of Wonder” விருதுகளை* டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவின் *Adjudicator Partner ஆக Grand Universe Book of Records* பங்கேற்றது. விருதாளர்களின் சாதனைகளுக்கு கூடுதல் அங்கீகாரம் அளிக்கும் வகையில் *உலக சாதனை அங்கீகாரச் சான்றிதழ்களும்* வழங்கப்பட்டன.
இவ்விழாவை *My Screen Media இயக்குநர் சினேகா சக்திவேல்* மற்றும் *Visionary பரிவு டாக்டர் எஸ். சக்திவேல்* ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.