Poovulagin Nanbargal

Poovulagin Nanbargal Environment, Ecology, Biodiversity, Nature, Sustainable Living

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

ஒரு சுயேச்சையான, மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வலியுறுத்துவோம். உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடை

க்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.

பொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி , கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. வறுமை, எழுத்தறிவின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குகின்றன.

இன்றைய சூழ்நிலையில் . . .

தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க முயற்சிப்பது, அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வது; சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வை பெறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது; இயற்கை ஆதாரங்கள் சந்தைப்படுத்தப்படும் சூழ்நிலையில், இயற்கை மற்றும் இயற்கை வளங்களை (நிலம், நீர் உள்ளிட்டவை) சூழலியல் பாதுகாப்பு பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வளங்குன்றாத வகையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாக்கும் பண்பை ஊக்குவிப்பது; மாசுபடுத்துதல் மற்றும் வீண் நுகர்வை குறைக்க வலியுறுத்துவது; தமிழகத்தில் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள்-தாவரங்கள் மற்றும் உறைவிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது; இயற்கையை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கூருணர்வை ஏற்படுத்துவது ஆகியவை எங்களது விரிவான நோக்கங்கள்.

பல்லுயிரியத்துக்கு எதிரான ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் . . .

இயற்கையுடன் மனிதர்கள் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, செயல்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு இயற்கை வளமும்,இயற்கை அற்புதங்களும் செழித்துள்ள உலகை விட்டுச்செல்ல வலியுறுத்துவோம்.

எங்கள் பணிகள்

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் தகவல்களை ஆவணப்படுத்துதல்

பதிப்பித்தல்-பரப்புதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைத்தல்-ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் - இவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் விழிப்புணர்வை உருவாக்குதல்.

கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்...
12/08/2026

கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) திருத்த மசோதா 2026ஐ ஒன்றிய அரசு மக்களவையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.

விரிவாகப் படிக்க: https://poovulagu.org/statements/கனிம-mmdr-bill-diluting-state-powers/

மாநில உரிமைகளைப் பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதா 2026.முழு விவரம்:
12/08/2026

மாநில உரிமைகளைப் பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதா 2026.

முழு விவரம்:

கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் .....

ஆகஸ்ட் 12உலக யானைகள் நாள்!யானைகள் காட்டின் ஆதார உயிரினம்.மனித செயல்பாடுகளினால் காடுகள் அழிக்கப்பட்டதால் யானை - மனிதர் எத...
12/08/2026

ஆகஸ்ட் 12
உலக யானைகள் நாள்!

யானைகள் காட்டின் ஆதார உயிரினம்.
மனித செயல்பாடுகளினால் காடுகள் அழிக்கப்பட்டதால் யானை - மனிதர் எதிர்கொள்ளல் அரிகரித்துள்ளது.
யானைகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்போம்.

🚨 New Video Alert! 🚨என்ன செய்யும் El - Nino? | Poovulagin Nanbargal Sundarrajan | PoovulaguClick here to watch 👇🏾 https:...
11/08/2026

🚨 New Video Alert! 🚨

என்ன செய்யும் El - Nino? | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu

Click here to watch 👇🏾
https://youtu.be/HubBTtUHH6Q

தேசியப் பேரிடர்களாக அறிவிக்கப்பட்ட வெப்ப அலை மற்றும் மின்னல்.முழு விவரம்:
11/08/2026

தேசியப் பேரிடர்களாக அறிவிக்கப்பட்ட வெப்ப அலை மற்றும் மின்னல்.

முழு விவரம்:

ஒன்றிய அரசு வெப்ப அலைகள் மற்றும் மின்னல் ஆகியவற்றை மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு நிதிகளின் கீழ் நிவாரணத்....

இயற்கைப் பேரிடர்களில் வெப்ப அலை மற்றும் மின்னல் பாதிப்புகள் அதிகம் பேரைக் கொல்கின்றன. இப்பாதிப்புகளைத் தடுக்கவும் நிவாரண...
10/08/2026

இயற்கைப் பேரிடர்களில் வெப்ப அலை மற்றும் மின்னல் பாதிப்புகள் அதிகம் பேரைக் கொல்கின்றன.

இப்பாதிப்புகளைத் தடுக்கவும் நிவாரண உதவி வழங்கவும் கூடுதல் நிதியைப் பயன்படுத்தும் வகையில் தேசியப் பேரிடர்கள் பட்டியலில் வெப்ப அலை மற்றும் மின்னலை இணைத்தது வரவேற்கத்தக்கது.

Ndrf HQ Chief Minister of Tamil Nadu TVK Vijay Sundar Rajan

ஆகஸ்ட் 09,நாகசாகி பேரழிவு நாள்!
09/08/2026

ஆகஸ்ட் 09,நாகசாகி பேரழிவு நாள்!

🚨 New Video Alert! 🚨சுரண்டப்படும் தமிழ் நாட்டு வளங்கள்! | Poovulagin Nanbargal Sundarrajan | PoovulaguClick here to watc...
08/08/2026

🚨 New Video Alert! 🚨

சுரண்டப்படும் தமிழ் நாட்டு வளங்கள்! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu

Click here to watch 👇🏾
https://youtu.be/p8HOGZ5c06I

Like, Share&Subscribe

Poovulaginnanbargal

07/08/2026

மேகதாது அணை கானுயிர்களுக்கு ஆபத்து!

- செளமியா அன்புமணி MLA

சென்னை பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையில் உள்ள ஒன்றிய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இ...
07/08/2026

சென்னை பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையில் உள்ள ஒன்றிய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் EIACP மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து ஒருங்கிணைத்த காலநிலை மாற்றம் குறித்தான கருத்தரங்கம் இன்று சென்னை கிண்டி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோ. சுந்தர்ராஜன் கலந்து கொண்டு காலநிலை மாற்றம் குறித்தும், தற்போது உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல் நினோ தாக்கம் குறித்தும் உரையாற்றினார். இக்கருத்தரங்கில் EIACP ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர். இரா. மணிகண்டன் கலந்துகொண்டார்

மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் காலநிலை அரசியல் குறித்தும், எழுத்தாளர் ஜீயோ டாமின் காலநிலை மாற்றத்திற்கு தீர்வு என்ன என்பதை பற்றியும், பொறியாளர் நிகழ் அய்யாக்கண்ணு சென்னையில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் குறித்தும் உரையாடினார்கள்.

முன்னதாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஶ்ரீ திலகம் கட்டைக்கூத்து சபை சார்பில் "வெப்பத்தின் வெறியாட்டம்" என்ற தலைப்பில் கட்டைக்கூத்து நிகழ்த்தப்பட்டது.

Address

Old No: 54, New No: 72, , 1st Floor, CRP Gdn 3rd Street, Anjugam Nagar, , West Jafferkhanpet
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when Poovulagin Nanbargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Poovulagin Nanbargal:

Shortcuts

Share