Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம்

  • Home
  • India
  • Chennai
  • Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம்

Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம் Satta Panchayath iyakkam
சட்ட விழிப்புணர்வு, மது ஒழிப்பு.
(1063)

Satta Panchayat Iyakkam அனைவருக்கும் வளர்ச்சி தரும் நல்லாட்சி அமைந்திட மக்களை அதிகாரப்படுத்தும் இயக்கம். தொடக்க கட்டமாக, இலஞ்ச ஊழல், மதுஒழிப்பிற்கான செயல்பாடுகளில் கவனம். சட்ட விழிப்புணர்வு மற்றும் நேர்மையான வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வு மேடை இது..

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,இயக்கத்தின் 149 வது வரவு செலவு அறிக்கை( ஏப்ரல் 2026)  உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ...
14/05/2026

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,
இயக்கத்தின் 149 வது வரவு செலவு அறிக்கை( ஏப்ரல் 2026) உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ்கிறோம்.
ஆலோசனை மைய எண்: 7667-100-100
தொடர்பிற்கு : 87545 80269
நன்கொடை அளிக்க: https://www.instamojo.com/
உறுப்பினராக இணைய: http://bit.ly/2021spimember

கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள “717” மதுபான கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் மற்றும் அவரது ...
12/05/2026

கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள “717” மதுபான கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்!

மது மற்றும் போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை:

நடந்து முடிந்த 17வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும், அதன் தலைவர் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் 2016 ஆம் ஆண்டு மது விலக்கு ஆண்டாக அறிவித்து பல அற வழி போராட்டங்களை கையில் எடுத்தது. ஆனால், இதுவரை படிப்படியாக மது விலக்கு கொண்டு வரும் முயற்சியை பெரிதாக முந்தைய ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. குறிப்பாக பெண்கள் படும் இன்னல்களும், இளைஞர்களும் தவறான பாதைக்கு செல்லும் பழக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஆட்சி வந்த முதல் நாட்களிலேயே போதை பொருளை கட்டுப்படுத்த தனிப்படை அலகுகள் மற்றும் கோவில்,பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ள “717” மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டதின் மூலம், மது மற்றும் போதைப்பொருளால் மக்கள் படும் பாட்டை அறிந்து, கட்டுப்படுத்த, புதிதாக பொறுப்பேற்ற அரசாங்கம் எடுத்த நல்ல முயற்சியை சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறது. இத்துடன் நிற்காமல், மேலும் மதுக்கடைகளை மூடவும் மற்றும் மாற்று பொருளாதார வலிமையை உருவாக்க தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

2024-25 நிதியாண்டின் படி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மதிப்பு கூட்டு வரி(VAT) மற்றும் கலால் வரி(excise duty) வாயிலாக 48,344 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. அதில் குறைந்தபட்சம் ஒரு சதவீதமான 480 கோடி ரூபாய் ஒதுக்கி போதை மறுவாழ்வு மையம் புதிதாக ஏற்படுத்திடவும், பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், வெளிப்படையான நிர்வாகம் என்பது நல்ல அரசாங்கத்தின் அணிகலன். அதற்கேற்ப, திரு. விஜய் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடவும், வெளிப்படையான, ஊழலற்ற அரசாங்கம் அமைப்பேன் என உறுதி அளித்து இருக்கிறார். இந்த நல்ல சமிக்ஞையை, சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறோம்.

அதை எடுத்து காட்டும் விதமாக, அடுத்தடுத்த செயல்பாடுகளாக,
லோக் ஆயுக்த சட்ட திருத்தம்,
சேவை உரிமை சட்டம் அமல்படுத்த,
தகவல் அறியும் சட்டம் சிறப்பாக செயல்பட,
உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு கொடுத்திட ,
அரசியல் தலையீடு இல்லாமால் லஞ்ச ஒழிப்பு துறை இயங்க,
அரசு அதிகாரிகளை கண்காணிக்க திடமான உத்தரவுகளை இட வேண்டும் என இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நல்ல அரசாங்கம் செயல்பட ஆரம்ப நாள்களே மிக முக்கியமானது. ஆகையால், நல்லாட்சி கொடுத்திட மேலே குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகள் எடுக்க விரைந்து முடிவு எடுத்து, நடைமுறைப்படுத்திட சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டு கொள்வதோடு, திரு. C.ஜோசப் விஜய் அவர்களுக்கும் வெற்றி பெற்ற அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலைப்பாட்டை பொதுமக்களாகிய நீங்கள் ஆதரிக்கும் பட்சத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்துடன் இணைந்து பயணிக்க அழைக்கிறோம்.(87545 - 80269 )

நீங்கள் இந்த நிலைப்பாட்டிற்கு missed call (7667 -100 -100 ) கொடுத்தும் ஆதரிக்கலாம்!

IMUCET 2026 இணையவழி விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டி கோரிக்கை!இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) நடத்தும...
20/04/2026

IMUCET 2026 இணையவழி விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டி கோரிக்கை!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) நடத்தும் IMUCET 2026 நுழைவுத் தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தின் கடைசி தேதி 24 ஏப்ரல் 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் தற்போது விண்ணப்ப செயல்முறையை முடிக்க முடியாமல் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால், வருமானச் சான்றிதழ் (Income Certificate), பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் (OBC Certificate) மற்றும் EWS சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை உரிய நேரத்தில் பெறுவதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தகுதியுடைய EWS, OBC பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கான உரிய பிரிவில் விண்ணப்பிக்க முடியாமல், பொதுப்பிரிவு (General Category) கீழ் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இதனால் பெரும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் மற்றும் சம வாய்ப்பு உரிமையை கருத்தில் கொண்டு தகுதியுடைய அனைத்து மாணவர்களும் தங்களுக்கான சரியான பிரிவில் விண்ணப்பிக்க,
1. IMUCET 2026 இணையவழி விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை நீட்டிக்கவும்
2. நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் விரைவாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும்
3. தேர்தல் நடக்கும் மாநிலங்களிலிருந்து IMUCET 2026 தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் EWS, OBC சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் தாங்கள் சான்றிதழுக்காக விண்ணபித்துள்ள இணையவழி இரசீது/ஒப்புகை சீட்டை தற்காலிகமாக பதிவேற்றம் செய்து, இறுதி கலந்தாய்வில் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு அனுமதி வழங்க கோரியும்
என்ற மூன்று அம்சங்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Maritime University), மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு (CM Cell) சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,இயக்கத்தின் 148 வது வரவு செலவு அறிக்கை( மார்ச் 2026 )  உங்களிடம் சமர்பிப்பதில் மகி...
11/04/2026

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,
இயக்கத்தின் 148 வது வரவு செலவு அறிக்கை( மார்ச் 2026 ) உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ்கிறோம்.
ஆலோசனை மைய எண்: 7667-100-100
தொடர்பிற்கு : 87545 80269
நன்கொடை அளிக்க: https://www.instamojo.com/
உறுப்பினராக இணைய: http://bit.ly/2021spimember

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,இயக்கத்தின் 147 வது வரவு செலவு அறிக்கை( பிப்ரவரி 2026)  உங்களிடம் சமர்பிப்பதில் மக...
07/03/2026

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,
இயக்கத்தின் 147 வது வரவு செலவு அறிக்கை( பிப்ரவரி 2026) உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ்கிறோம்.
ஆலோசனை மைய எண்: 7667-100-100
தொடர்பிற்கு : 87545 80269
நன்கொடை அளிக்க: https://www.instamojo.com/
உறுப்பினராக இணைய: http://bit.ly/2021spimember

போக்ஸோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வு - குழந்தைகளைப் பாதுகாப்போம்!​குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக...
15/02/2026

போக்ஸோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வு - குழந்தைகளைப் பாதுகாப்போம்!

​குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு 30% அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறதுஇத்தகைய குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவே 'போக்ஸோ' (POCSO) சட்டம் கொண்டுவரப்பட்டது.
​சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
​கடுமையான தண்டனை: பாலியல் வன்கொடுமையால் குழந்தை உயிரிழக்க நேரிட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

​இழப்பீடு: விதிக்கப்படும் அபராதத் தொகை, பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவு மற்றும் மறுவாழ்வுக்காக முழுமையாக வழங்கப்படும்.

​குற்றத்தை மறைப்பது தவறு: குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பைத் தெரிந்தும் புகார் அளிக்காமல் மறைப்பது 6 மாத சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சட்டப் பஞ்சாயத்து இயக்க நண்பர்கள் மாநிலம் முழுவதும் துண்டுப் பிரசுரங்கள், துண்டறிக்கை, தெருமுனை பிரச்சாரம், கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு, பேருந்து பிரச்சாரம் மற்றும் பொது இடங்களில் பிரச்சாரம் பல வகைகளில் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

​உதவி தேவைப்படுகிறதா?
போக்ஸோ சட்டம் குறித்த சந்தேகங்கள் அல்லது உதவிக்கு 'சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தை' தொடர்பு கொள்ளுங்கள்.

​நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

காதலர் தின வாழ்த்துக்கள்!போக்சோ சட்டம் விழிப்புணர்வு!  actகாதலர் தினம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையேயான அன்பையும், பாச...
14/02/2026

காதலர் தின வாழ்த்துக்கள்!

போக்சோ சட்டம் விழிப்புணர்வு!

act

காதலர் தினம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையேயான அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ளும் நாள். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். அதே போல, இந்த அன்பை பகிரும் இந்த நாளில் நம் எதிர்கால சந்ததிகளான குழந்தைகளை பாதுகாப்பது நம் கடமை. இது பற்றிய விழிப்புணர்வை சட்ட பஞ்சாயத்து இயக்கம் செய்து வருகிறது.

நம் குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டம் என்றால் என்ன?

- POCSO சட்டம் என்பது குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்கும் சட்டம்.
- இந்த சட்டம் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாதுகாக்கிறது.
- இந்த சட்டத்தின் கீழ், குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது குற்றமாகும்.

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

- குழந்தைகளை எப்போதும் கண்காணியுங்கள்.
- குழந்தைகளுக்கு அவர்களின் உடலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
- குழந்தைகளை தனியாக விட்டுச்செல்லாதீர்கள்.
- குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றி அறிந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

*நினைவில் கொள்ளுங்கள்:*

- குழந்தைகள் நம்முடைய எதிர்காலம்.
- குழந்தைகளை பாதுகாப்பது நம் கடமை.
- POCSO சட்டம் குழந்தைகளை பாதுகாக்க உதவும்.

*தொடர்பு எண்கள்:*

- குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றி புகைப்படம்: 1098
- போலிஸ்: 100
- உங்கள் மாவட்ட காவல் துறை எண்:

இந்த துண்டறிக்கையை உங்கள் மாவட்டத்தில் விநியோகம் செய்யுங்கள். குழந்தைகளை பாதுகாப்போம்!

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,இயக்கத்தின் 146 வது வரவு செலவு அறிக்கை( ஜனவரி 2026)  உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ்...
05/02/2026

சட்ட பஞ்சாயத்து நண்பர்களுக்கு வணக்கம்,
இயக்கத்தின் 146 வது வரவு செலவு அறிக்கை( ஜனவரி 2026) உங்களிடம் சமர்பிப்பதில் மகிழ்கிறோம்.
ஆலோசனை மைய எண்: 7667-100-100
தொடர்பிற்கு : 87545 80269
நன்கொடை அளிக்க: https://www.instamojo.com/
உறுப்பினராக இணைய: http://bit.ly/2021spimember

 #கிராம_சபை  "தெரு விளக்கு வேண்டுமா?சாக்கடை வசதி வேண்டுமா?தரமான குடிநீர் வேண்டுமா?அனைத்திற்கும் வழி தேடுவோம்...வாருங்கள்...
25/01/2026

#கிராம_சபை

"தெரு விளக்கு வேண்டுமா?
சாக்கடை வசதி வேண்டுமா?
தரமான குடிநீர் வேண்டுமா?
அனைத்திற்கும் வழி தேடுவோம்...
வாருங்கள் கிராம சபைக்கு!
நம் கிராமத்தின் தலைவிதியை நாமே எழுதுவோம்!"

வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும்
கிராம சபையில்.....

"ஊர் கூடித் தேர் இழுப்போம்! கிராம சபையில் குரல் கொடுப்போம்!"
"உங்கள் ஊர், உங்கள் வளர்ச்சி, உங்கள் முடிவு!
கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்."

"கேள்வி கேட்கும் இடத்தில் நீ இருந்தால் மட்டுமே, தேவையான மாற்றங்கள் உன் தெருவிற்கு வரும்."
"மக்களாட்சியின் வேர் கிராம சபை! அதில் நீயும் ஒரு அங்கமாக இரு."

"ஊர் நலம் காக்க ஓர் இடம் - அதுவே உங்கள் கிராம சபை கூடம்!"
"யாரோ வருவார் என்று காத்திருக்காதே... உன் ஊருக்காக நீ முன்வா!"

அனைவரும் கிராமசபையில் கலந்து கொண்டு ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.

மேலும் தொடர்புக்கு
7667100100 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00am to 5.00pm அழைக்கலாம்.


#கிராமசபை_பிரிவு,
#சட்ட_பஞ்சாயத்து_இயக்கம்

போக்சோ சட்டம் - 2012.(POCSO - Protection of Children from Sexual Offences Act, 2012)இன்று ஜனவரி-24 தேசிய பெண் குழந்தைகள்...
24/01/2026

போக்சோ சட்டம் - 2012.
(POCSO - Protection of Children from Sexual Offences Act, 2012)
இன்று ஜனவரி-24 தேசிய பெண் குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகவும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகள் செய்வதற்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்றும் துணை நிற்கும்.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை (NCRB):
POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.
2019 - 47,335 வழக்குகள்.
2020 - 47,221 வழக்குகள்.
2021 - 53,874 வழக்குகள்.
2022 - 63,414 வழக்குகள்.
2023 - 67,694 வழக்குகள்.
ஒவ்வொரு ஆண்டும் இச்சட்டத்தின்படி பதிகுவாகும் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. ஆனால் உண்மையில் நடந்த குற்றச் சம்பவங்களைவிட பதிவான வழக்குகள் குறைவாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் POCSO சட்டம் குறித்த புரிதலும் இச்சட்டம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால் அது குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல அத்தகைய குற்ற சம்பவத்திற்கே அடிக்கும் சாவு மணியாகும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஓரணியில் கைகோர்க்க தொடர்பு கொள்ளவும் 87545-80269, மேலும், ஒன்றிணைவோம்.
POCSO சட்டம் குறித்த மேலும் பல்வேறு தகவல்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் தொடர்பு கொள்ளுங்கள் 7667 100 100.

Address

Satta Panchayat Iyakkam, H42/3, West Avenue, Kamaraj Nagar, Thiruvanmiyur
Chennai
600041

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 10am - 2pm

Telephone

7667100100

Alerts

Be the first to know and let us send you an email when Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Satta Panchayat Iyakkam - சட்ட பஞ்சாயத்து இயக்கம்:

Share