11/08/2026
*சுமார் ₹7,500 கோடி மதிப்பிலான 118 MBT MK-2 டேங்க் உற்பத்தியை கைவிடக் கூடாது!*
HVF தொமுச கோரிக்க!!
\\\==================\\\
தொழிலாளர் தோழர்களுக்கு வணக்கம்!
நமது HVF தொழிற்சாலையில் *118 MBT MK-2 (Arjun Mk-1A) Main Battle Tanks* உற்பத்திக்கான சுமார் *₹7,500 கோடி* மதிப்பிலான உற்பத்தி ஆணை கிடைக்கப் பெறுவதற்கு, *வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி,* அவர்கள், *CVRDE*-யில் மேற்கொண்ட ஆய்வினால் இந்த உற்பத்தி நமது HVF தொழிற்சாலைக்கு கிடைத்தது.
உதிரி பாகங்கள் விலை பன்மடங்கு உயர்ந்ததால் இந்த திட்டத்தை கைவிடும் நிலைக்கு HVF தொழிற்சாலை தள்ளப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதில் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் Engine / Power Pack-ன் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் திட்டத்தில் போதிய லாபம் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து, HVF / AVNL நிர்வாகம் இந்த உற்பத்தியை தொடராமல் கைவிட பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
"
*₹7,500 கோடி மதிப்பிலான இத்தகைய மிகப்பெரிய பாதுகாப்புத்துறை உற்பத்தித் திட்டம் எந்த காரணத்திற்காகவும் பாதிக்கப்படக் கூடாது என்பதே நமது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ஒரே நிலைப்பாடு!*
இது ஒரு சாதாரண உற்பத்தி அல்ல! *Make in India / Aatmanirbhar Bharat* திட்டத்தின்படி பாதுகாப்புத் துறையில் உற்பத்தியாகும்.
இந்த டேங்கிற்குத் தேவையான பல்வேறு தொழில்நுட்பங்கள், உற்பத்தி கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்கள் இந்தியாவிலேயே தயாராக உள்ள நிலையில், வெளிநாட்டு Engine / Power Pack செலவு உயர்வை மட்டும் காரணமாகக் கொண்டு உற்பத்தியை கைவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இந்த பிரச்சனையில் உடனடியாக *டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி* அவர்கள் தலையிட்டு இந்த உற்பத்தியை ஏற்கனவே HVF தொழிற்சாலைக்கு பெற்றுக் கொடுத்தது போல், இந்த உற்பத்தியை கைவிடாமல் உற்பத்தியை தொடங்குவதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று இன்று *(09/08/2026)* நமது சங்கத்தின் சார்பாக சங்கத்தின் *பொருளாளர் திரு பி ஞானமணி* அவர்கள் நேரில் சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக மனுவினை அளித்தார்.
*நமது தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள்:*
1. *118 MBT MK-2 டேங்க் உற்பத்தியை HVF-ல் உடனடியாக தொடங்க வேண்டும்!*
2. *உற்பத்திச் செலவு உயர்ந்திருந்தால், ₹7,500 கோடி மதிப்பிலான தற்போதைய ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து (Contract Revision), தற்போதைய செலவுக்கு ஏற்ப ஒப்பந்த மதிப்பை உயர்த்த வேண்டும்*
3. *Engine / Power Pack உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களுக்கான மாற்று மற்றும் உள்நாட்டு உற்பத்தி வாய்ப்புகளை விரைவுபடுத்த வேண்டும்!*
4. *HVF-ன் உற்பத்தித் திறனையும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் பாதுகாக்க வேண்டும்!*
5. *இந்தியாவில் தயாரிக்கக்கூடிய MBT உற்பத்தியை எந்த காரணத்திற்காகவும் கைவிடக்கூடாது!*
6. *மேற்கண்ட பிரச்சனையை தீர்க்க உடனடியாக HVF தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்*
உள்ளிட்ட கோரிக்கைகளை *Dr. கலாநிதி வீராசாமி, எம்.பி.* அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நமது சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக பாதுகாப்புத்துறை அமைச்சகம், AVNL நிர்வாகத்துடன் பேசுவது மட்டுமல்லாமல், *Ministry of Finance – Consultative Committee (Advisory Committee)* உறுப்பினராக இருக்கும் *டாக்டர் கலாநிதி வீராசாமி MP* அவர்கள் மேற்கண்ட கமிட்டியில் பேசுவதாக உறுதி அளித்துள்ளார். மேலும் HVF தொழிற்சாலையை கூடிய விரைவில் ஆய்வு செய்ய வருவதாகவும் உறுதி அளித்துள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
*லூ. இரட்சகராஜா,*
பொதுச்செயலாளர்
*ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொமுச*