தன்னாட்சி - உள்ளாட்சி உங்களாட்சி

  • Home
  • India
  • Chennai
  • தன்னாட்சி - உள்ளாட்சி உங்களாட்சி

தன்னாட்சி  -  உள்ளாட்சி உங்களாட்சி மத்தியில் கூட்டாட்சி!
மாநிலத்தில் சுயாட்சி!
'உள்ளாட்சியில் தன்னாட்சி! என்பதே நம் இலக்கு.

'உள்ளாட்சியில் நல்லாட்சி உள்ளூரில் வளங்குன்றா வளர்ச்சி' என்ற முழக்கத்தோடு செயல்பட்டு வரும் தன்னாட்சி, உள்ளாட்சியைக் குறிப்பாகக் கிராம ஊராட்சியை, 'எளிய மக்கள் தங்களுக்காகத் தாங்களே நிர்வாகம் செய்யும் அரசாக' மாற்ற முயலும் ஒரு மக்கள் இயக்கமாகும். 'உள்ளாட்சி உங்களாட்சி' என்ற பெயரில், 2017 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சிகளுக்காக, கிராமசபைக்காக, கிராம தன்னாட்சிக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பா

ட்டாளர்களால், 2018 ஆம் ஆண்டு 'தன்னாட்சி' என்ற பெயரில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்-1975 இன் கீழ் சங்கமாகப் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் இயக்கமே தன்னாட்சி.

விளிம்பிலும் விளிம்பு நிலையிலுள்ள கடைக் கோடி குடிமக்களும் பொது நிர்வாகம் செய்வதற்கான அதிகாரத்தையும் தகவல்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அதிகாரப் பரவலைக் கொள்கையாகக் கொண்டு குரலற்றவர்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்து வருகிறது நம் தன்னாட்சி!

மத்தியில் கூட்டாட்சி!
மாநிலத்தில் சுயாட்சி!
'உள்ளாட்சியில் தன்னாட்சி'!

என்பது வெற்று முழக்கமல்ல..
நாம் வென்றெடுக்க வேண்டிய லட்சியம்!

தன்னாட்சிஉள்ளாட்சிகளுக்கானமக்கள் தகவல் மையம்தகவல் ஓர் ஆயுதம். சரியான தகவல் மாற்றத்துக்கான ஆயுதம். ஊராட்சி நிர்வாகம், கிர...
26/05/2026

தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான
மக்கள் தகவல் மையம்

தகவல் ஓர் ஆயுதம். சரியான தகவல் மாற்றத்துக்கான ஆயுதம்.

ஊராட்சி நிர்வாகம், கிராமசபை, மக்கள் நலத்திட்டங்கள் என எந்தத் தகவல் வேண்டுமானாலும் தன்னாட்சியின் மக்கள் தகவல் மையத்தை அழையுங்கள். முறையான தகவல் பெற்று செயலாற்றுங்கள். உங்கள் ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு வித்திடுங்கள்.

தொடர்புக்கு: 94436-62058

தன்னாட்சிஉள்ளாட்சிகளுக்கானமக்கள் தகவல் மையம்ஊராட்சி நிர்வாகம், கிராமசபை, மக்கள் நலத்திட்டங்கள் என எந்தத் தகவல் வேண்டுமான...
12/05/2026

தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான
மக்கள் தகவல் மையம்

ஊராட்சி நிர்வாகம், கிராமசபை, மக்கள் நலத்திட்டங்கள் என எந்தத் தகவல் வேண்டுமானாலும் தன்னாட்சியின் மக்கள் தகவல் மையத்தை அழையுங்கள். முறையான தகவல் பெற்று செயலாற்றுங்கள். உங்கள் ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு வித்திடுங்கள்.

தொடர்புக்கு: 94436-62058

உள்ளாட்சிகளுக்குப் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?இந்து தமிழ்திசையில் வெளிவந்துள்ள, தன்னாட்சியின் துணைத்தலைவர் தோழர் நந்...
09/04/2026

உள்ளாட்சிகளுக்குப் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்து தமிழ்திசையில் வெளிவந்துள்ள, தன்னாட்சியின் துணைத்தலைவர் தோழர் நந்தகுமார் எழுதியுள்ள கட்டுரை. அவசியம் வாசிக்கவும்.

தன்னாட்சிசரியான தகவல்களைத் தெரிந்து கொண்டு தங்கள் ஊராட்சியின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றுங்கள்!அழைக்க: 9443662058
27/03/2026

தன்னாட்சி

சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டு தங்கள் ஊராட்சியின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றுங்கள்!

அழைக்க: 9443662058

தன்னாட்சிஉள்ளாட்சிகளுக்கான மக்கள் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் /அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
25/03/2026

தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான மக்கள் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் /அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் பணி. ஆர்வமும் சமூக அக்கறையும் உள்ளவர்களுக்குப் பகிரவும். நன்றி!

தர்மபுரியில், உள்ளாட்சித் தேர்தலில் களம் காண ஆர்வமுள்ளோருக்கான இரண்டு நாள் பயிற்சிகிராம சபை முதல் உள்ளாட்சிக்கான தன்னாட்...
16/03/2026

தர்மபுரியில், உள்ளாட்சித் தேர்தலில் களம் காண ஆர்வமுள்ளோருக்கான இரண்டு நாள் பயிற்சி

கிராம சபை முதல் உள்ளாட்சிக்கான தன்னாட்சி வரை விரிவாகப் பேசப்பட்ட பயிற்சிப் பட்டறை!
--
கடந்த 14.03.2026 மற்றும் 15.03.2026 ஆகிய இரு நாள்களில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகக் களம் காண ஆர்வமாக இருக்கும் பலரைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தர்மபுரியில் 'கிராம விழிகள் அறக்கட்டளை' ஒருங்கிணைத்திருந்த இப்பயிற்சியில். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து உள்ளாட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஆர்வமுள்ள 50 பேர் கலந்து கொண்டார்கள்.
'ஏன் வேண்டும் வலுவான உள்ளாட்சிகள்?' என்ற தலைப்பிலான துவக்க உரையாடல் பயிற்சியின் நோக்கத்தினை, நம் பயணத்தின் இலக்கினை ஆழமாக உணர்ந்து கொள்ள உதவியாக இருந்தது.

இரண்டு நாள் பயிற்சியில் விரிவாக ஊராட்சி சட்டம், ஊராட்சியின் பொது நிர்வாகம், ஊராட்சி பொது நிலங்கள் உள்ளிட்டவை குறித்தும் குறிப்பாக நடைமுறையில் எவ்வாறு நிர்வாகம் செயல்படுகிறது, சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் பேசினோம். இவை அனைத்தும் குழு செயல்பாடாகவும் பங்கேற்பாளர்கள் கருத்து பகிர்வாகவும் ஒருங்கிணைந்து சென்றது.

அரங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் திரு.ராஜா விரிவாகத் தனது தேர்தல் அனுபவம் பற்றிப் பேசினார். மேலும் அவர் ஐந்தாண்டுக் கால நிர்வாக அனுபவத்திலிருந்து மக்களை/கட்சி பிரதிநிதிகளை/அலுவலர்களை எப்படி அணுகுவது எனப் பகிர்ந்து கொண்ட செய்தி பலருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

சேலம் மாவட்டம், காரிப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு.மனோ சூர்யா, திட்டங்கள் நடைமுறையும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் பேசினார்.

அரங்கூர் பாலர் சபை, பாலர் பஞ்சாயத்துத் தேர்தல் ஆகியவை குறித்து அதன் பொறுப்பாளர்கள் நேரடியாக வந்திருந்து விரிவாக விளக்கிப் பேசியது, பலருக்கு ஜனநாயகத்தில் குழந்தைகளின் குரல்கள் எவ்வாறெல்லாம் வெளிக் கொண்டு வர வேண்டி உள்ளது என்பதை உணர்த்தியதாகத் தெரிவித்தார்கள்

தர்மபுரியை அடுத்த வெள்ளக்கல் பகுதியில் அமைந்திருந்த இயற்கை பண்ணையில், நல்லதொரு சூழலில் இந்த இரண்டு நாட்கள் பயிற்சியைக் கிராம வழிகள் அறக்கட்டளை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தது.

தன்னாட்சியின் சார்பாக துணைத்தலைவர் நந்தகுமார் மற்றும் அரங்கூர் ராஜா ஆகியோர் பயிற்சியை வழிநடத்தினர்.

வெறும் செய்திகளைச் சொல்லும் பயிற்சியாக இல்லாமல் கள அனுபவப் பகிர்வையும், தொடர் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கான வாய்ப்பினையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர முடிந்தது.

பங்கேற்பாளர்கள் அவரவர் பகுதிகளில் செயல்படவும் மாற்றங்களைக் கொண்டு வரவும் உறுதியோடு விடைபெற்றுச் சென்றது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

தன்னாட்சிஉள்ளாட்சிகளுக்கான மக்கள் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் /அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
12/03/2026

தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான மக்கள் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் /அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் பணி. ஆர்வமும் சமூக அக்கறையும் உள்ளவர்களுக்குப் பகிரவும். நன்றி!

தன்னாட்சியின் திசைவழிதன்னாட்சியின் திசைவழி குறித்த அரசியல் பயிற்சிப்பட்டறை கடந்த மார்ச் 7-8 அன்று சென்னை தியான ஆசிரமத்தி...
12/03/2026

தன்னாட்சியின் திசைவழி

தன்னாட்சியின் திசைவழி குறித்த அரசியல் பயிற்சிப்பட்டறை கடந்த மார்ச் 7-8 அன்று சென்னை தியான ஆசிரமத்தில் நடைபெற்றது. தன்னாட்சியின் உறுப்பினர்களுக்கான இந்நிகழ்வை, பியூசிஎல் அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் அவர்களும் விகாஷ் அவர்களும் வழிநடத்தினர்.

இரு நாள் பயிற்சி, உறுப்பினர்கள் கலந்து பழகவும், சமூகத்தின் பல்வேறு குழுக்கள்/சக்திகள் செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்ளவும், அரசியல் மாற்றத்தின் படிநிலைகளைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

2018 இலிருந்து அதிகாரப் பரவலாக்கத்திற்காகவே தன்னாட்சி பணியாற்றி வருகிறது. இன்னும் தெளிவுடன், இன்னும் அர்ப்பணிப்புடன் நாம் செயல்பட வேண்டியுள்ளது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பின்பற்றி, மக்களை ஒருங்கிணைத்து, சமூக, அரசியல் மாற்றத்திற்கு வித்திட வேண்டுமென்ற உரையாடலுக்கு இப்பயிற்சி வித்திட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்று, தன்னாட்சியின் திசைவழி குறித்து சிந்தித்த அனைத்து தோழர்களுக்கும், பயிற்சியை வழிநடத்திய தோழர்கள் சுரேஷ் மற்றும் விகாஷ் ஆகியோருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றிகள்!

25/02/2026

தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான
மக்கள் தகவல் மையம்

இக்காணொளியைப் பாருங்கள்.

ஊராட்சி நிர்வாகம், கிராமசபை, மக்கள் நலத்திட்டங்கள் என எந்தத் தகவல் வேண்டுமானாலும் தன்னாட்சியின் மக்கள் தகவல் மையத்தை அழையுங்கள். முறையான தகவல் பெற்று செயலாற்றுங்கள். உங்கள் ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு வித்திடுங்கள்.

தொடர்புக்கு: 94436-62058

Address

69, Anagappa Naicken Street
Chennai
600001

Telephone

9003232058

Alerts

Be the first to know and let us send you an email when தன்னாட்சி - உள்ளாட்சி உங்களாட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தன்னாட்சி - உள்ளாட்சி உங்களாட்சி:

Share