25/04/2026
ஓட்டு போட போறதுக்கு முன்னாடி நம்ம பேர் வாக்காளர் பட்டியலில் இருக்கானு கூட பாக்காம போயிட்டு இப்போ புலம்புறது,
வாக்காளர் பட்டியலில் தன் பேர் இருக்கானு கூட பாக்காம வெளிநாட்டுல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துட்டு நேரா வாக்குச்சாவடி போய் ஓட்டு இல்லனு குறை சொல்றது,
சாயங்காலம் 6 மணிக்குள்ள வந்தாதான் இரவு 7 மணிக்கு ஓட்டு போட முடியும்னு தெரியாம இரவு 7 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்துட்டு, அய்யோ என்னை உள்ள விடலனு அலப்பறை பண்றது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தா ஒரு மாநிலத்துல என்ன நடக்கும்னு தெரியாம அரசை குறை சொல்லி Views காக Reels போடறது?
எது மத்திய அரசு வேலை, எது மாநில அரசோட வேலை னு தெரியாம 30 Sec Reel ல கூறுகெட்டத்தனமா பேசுறது
SIR Form னா என்ன? அத எப்படி குடுப்பாங்க?, எப்படி Fill பண்ணும், நம்ம BLO வ எப்படி கண்டுபிடிக்கிறது?எப்படி நம்ம பேர் வாக்காளர் பட்டியல்ல இருக்கானு செக் பண்றது, இல்லனா திரும்ப எப்படி Apply பண்றது? Final voters list ல எப்படி Check பண்றது? னு அவ்ளோ News வந்தது.இதுல SIR னால என்னவெல்லாம் பாதிப்பு நடக்கும்னு அரசும் , முதலமைச்சரும் தொடர்ந்து பேசிட்டே இருந்தாங்க.
இதையும் தாண்டி தகுதியான வாக்களார்களை இழந்திர கூடாதுனு குறைந்தபட்ச கால அளவுல SIR பணிகள் அவ்வளவு வேகமா நடந்துச்சு.
இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் நம்ம பேரை வாக்காளர் பட்டியல் ல செக் பண்ண காலஅவகாசம்
குடுத்திருந்தாங்க. எப்படி பண்ணனும்னு தொடர்ந்து Photo , Videos ஷேர் பண்ணிட்டே இருந்தாங்க.
இதெல்லாம் தெரிஞ்சிக்க அரசியல் அறிவு கூட வேணாம். Atleast பொது அறிவாவது இருந்திருக்கலாம்.. தினம் ஒரு 20 நிமிஷம் நியூஸ் பேப்பர் வாசிச்சிருக்கலாம்.. இல்லனா நியூஸ் வீடியோஸ் பாத்திருக்கலாம்.
நம்மள சுத்தி எவ்ளோ பேர் ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாம Influencer ங்கிற பேர்ல இருக்காங்கனு இந்த தேர்தல் உணர்த்துச்சு.
நிஜமாவே ரொம்ப அயர்ச்சியா இருக்குங்க😒
மக்களே...இனி வரும் காலங்களில் உங்க பகுத்தறிவு மட்டும் தான் உங்கள காப்பாத்தும். அத மட்டும் மறந்துடாதிங்க. உங்கள சுத்தி என்ன நடந்தாலும் , எத்தனை பேர் உங்கள Influence பண்ணாலும் கொஞ்சம் உட்கார்ந்து பொறுமையா யோசிங்க. மந்தைகளா இருந்து எதையும் யோசிக்காதிங்க. தங்களோட செயல்களால உங்கள் வாழ்க்கையில நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினா தான் அவங்க தரமான Influencer. அதனால யாரை பின்தொடரனும்னு சரியா முடிவு பண்ணுங்க.
நம்ம தாத்தா என்ன வேலை பாத்தார்? நம்ம அப்பா என்ன வேலை பாத்தாங்க? உங்க தாத்தா படிச்சாரா? இல்லனா ஏன் படிக்கல? உங்க அம்மா வேலைக்கு போனாங்களா? அதுக்கு என்ன காரணம்? நாம என்ன வேலை பாக்குறோம்?நாம யார்? நாம எப்படி படிச்சோம்?நமக்கான அடையாளம் என்ன? இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கோம்னா அதுக்கு அரசியல், சமூக காரணங்கள் என்ன?
3 தலைமுறைக்கு முன்னாடி நம்ம வாழ்க்கை சூழல் எப்படி இருந்தது? நம்ம ஊர் எப்படி இருந்தது? இப்போ எப்படி இருக்கு? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.அட்லீஸ்ட் தமிழ்நாட்டோட 50 வருட வரலாறு தெரிஞ்சிக்கோங்க. ஒரு விஷயத்தை ஆழ்ந்து, படிங்க. யார்னாலும் அரசியல் பேசலாம். ஆனா அடிப்படைகளை தெரிஞ்சிகிட்டு , நல்லது, கெட்டது தெரிஞ்சு பகுத்தறிவோடு பேசுங்க.
பெற்றோர்களும் உங்க பிள்ளைகளிடத்துல சின்ன வயசுல இருந்தே அரசியலையும், பொது அறிவையும் பத்தி பேசிங்க.
இனியும் சரித்திரம் தெரியலனா தரித்திரம் நமக்குதான்😒
- Hema Latha