Dhyan Foundation Tamil

Dhyan Foundation Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhyan Foundation Tamil, Non-Governmental Organization (NGO), Chennai.

தியான் யோகா மற்றும் சேவை மையம்:
'Dhyan Foundation' - ஆன்மீகம் மற்றும் சேவை மையமாகக் கொண்ட அமைப்பு. 4500 வருடங்களுக்கு முன் பதாஞ்சலி முனிவரால் போதிக்கப்பட்ட, பாரம்பரியமான யோகாப் பற்றி தெளிவான விளிப்புரணர்வு அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் அடிப்படை நோக்கம். எங்கள் அமைப்பை ச் சார்ந்தவர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல்வேறு துறைகளில் வேலை செய்பவர்கள். இவர்கள்

எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவையை நோக்கமாகக் கொண்டு யோகி அஷ்வினியின் வழிகாட்டுதலால் ஒன்றிணைத்து, அமைப்பின் பணிகளை செய்கிறார்கள்.
2002 ல் இருந்து இயங்கி வரும் அமைப்பு இன்று, உலகின் பல பகுதிகளிலும் பரவி, சனாதன் க்ரியாவை இலவசமாக எல்லோருக்கும் கற்றுத் தருகிறது. பல ஆயிரம் பேர் உடல், மனம், உணர்ச்சி, ஆன்மீகம் என்ற எல்லா விதத்திலும் சனதான் க்ரியா முறையின் மூலம் பயன் அடைந்துள்ளனர். சேவையை நோக்கமாகக் கொண்டு ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாகக் கற்று தரும் கல்விக்கூடங்கள், அன்னதானத் திட்டங்கள், வறுமையில் இருப்போர்க்கு வேலைவாய்ப்பு, ஏழை மற்றும் பார்வை அற்றோருக்கு மேற்படிப்பிற்கு உதவுதல், நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் விலங்குகளுக்கு உணவளித்தல் மற்றும் மருத்துவ சேவை என்று மனிதர்களும் விலங்குகளும் எங்கள் சேவையின் மூலம் பயன் பெறுகிறார்கள். இவை எதற்கும் எந்த அரசு மற்றும் தனியார் சலுகைகளை பெறுவதில்லை. முற்றிலும் யோகி அஷ்வினி மற்றும் எங்கள் தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படுகிறது.


யோகி அஷ்வினி:
யோகா, தந்த்ரா, spiritual healing என்ற ஆன்மீக வழி சிகிச்சை முறை, மந்திர உச்சரிப்பு, யாகம், முன் ஜென்ம தேடல், ஆயுர்வேதம், வேதகால தற்காப்புக் கலை என்று அனைத்து கலைகளில் திறமை பெற்றவர் யோகி அஷ்வினி.பொருளாதாரம் மற்றும் நிர்வாக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். மிக பிரபலமான நாளிதழ் மற்றும் பத்திரிக்கை எழுத்தாளர். பெயர் பெற்ற பேச்சாளர். இவர் எழுதிய புத்தகங்கள் நமது பாரம்பரிய அறிவியலின் விளக்கத்தை தருவதாகும், வரவேர்ப்பை பெற்றதாகவும் உள்ளது. இவர். 'Dhyan Foundation'-ன் இணையற்ற வழிகாட்டி, முன்னோடி. 'The Inner World' என்ற மாத இதழின் ஆசிரியர்.
பட்டப்படிப்பிற்குப் பின், இமாலயத்தில் சில யோகிகளோடு சில வருடங்களை தனிமையில் கழித்தார். பதாஞ்சலியின் அஷ்டாங்க யோகாவை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். அதன் மூலம் சனாதன் க்ரியா என்ற எளிய பயிற்சியை கண்டறிந்து, எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமைத்து, எந்த எதிர்பரப்பும் இன்றி அனைவர்க்கும் கற்றுத் தருகிறார். 50 வயதை கடந்த இவரிடம் காந்த சக்தியும், பிரகாசத்தையும் உணரமுடியும். நீண்ட நாள் யோக பயிற்சியின் பலன் இவை. யோகாவின் உன்னதத்தை உணர்த்த இவர் ஒரு சான்று. இவர் தரும் பயிற்சி, முழுமையான பலன் தருவதாக, முன்னணி மருத்துவர்களாலும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 1000ற்கும் மேற்பட்டோர் சனாதன் க்ரியாவை இலவசமாகக் கற்று உடல், மனம், ஆன்மீகம் என்று பலவாறு பயன் அடைந்துள்ளனர். இவர் இந்தியாவில் 17 கல்வி நிலையங்களை இலவசமாக நடத்தி வருகிறார். பார்வை அற்றோருக்கு மேல் படிப்பிற்க்கு உதவி, அன்னதான திட்டம், ஏழை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, மருத்துவ முகாம்கள், 100 ற்கு மேற்பட்ட இடங்களில் நாய்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவை என்று பலவும் இவரது முயற்சியால் செயல்பட்டு வருகிறது.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Dhyan Foundation Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhyan Foundation Tamil:

Share