TNGPA

TNGPA தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், 2013ம் ஆண்டு பிப்ரவரி 3, திருச்சியில் உருவானது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற 7ஆம் மாநில பிரதிநிதித்துவப் பேரவை
21/10/2023

திருவண்ணாமலையில் நடைபெற்ற 7ஆம் மாநில பிரதிநிதித்துவப் பேரவை

சென்னை மாவட்ட செயற்குழுவில் மாநிலத்தலைவர் தோழர் நெ.இல.சீதரன் அவர்கள் முன்னிலையில் மாநில துணைத் தலைவர் கி.இளமாறன்  கையெழு...
21/10/2023

சென்னை மாவட்ட செயற்குழுவில் மாநிலத்தலைவர் தோழர் நெ.இல.சீதரன் அவர்கள் முன்னிலையில் மாநில துணைத் தலைவர் கி.இளமாறன் கையெழுத்து இயக்கம் தொடங்கிவைத்தார்.

11/10/2023

எங்களைப் பற்றி:

சங்க ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஓய்வூதியர்களின் நலன்களுக்காக பரந்து பட்ட ஒற்றுமையைக் கட்டவும், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், 2013ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 3ம் நாள் திருச்சியில் உருவானது. முதல் மாநாடு 28.04.2013 அன்று வேலூர் மாநகரில் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2014ல் திருவாரூரிலும், 2015ல் கோவை யிலும் மாநிலப் பேரவைகள் நடத்தப்பட்டன. 2016ல் மதுரையில் 2-ஆம் மாநில மாநாடு சிறப்புற நடந்தேறியது. 2017ல் திருச்சியில் 3ஆம் மாநிலப் பேரவையும், 2018ல் தென்காசியில் 4 ஆம் மாநிலப் பேரவையும் நடத்தப்பட்டன. 14.09.2019 அன்று சேலம் மாநகரில் 3ஆம் மாநில மாநாடு எழுச்சிகரமாக நடந்தேறியது. 29.12.2020 அன்று மதுரை மாநகரில் 5ஆம் மாநிலப் பேரவை சிறப்புற நடந்தேறியது. 30.12.2021 அன்று தஞ்சாவூரில் 6ஆம் மாநிலப் பேரவை சிறப்பாக நடைபெற்றது. 27.08.2022 அன்று 4ஆம் மாநில மாநாடு மயிலாடுதுறையில் சிறப்புடன் நடைபெற்றது. ஒவ்வொரு மாநில மாநாடும் / மாநிலப் பேரவையும் நமது சங்கம் மென்மேலும் வளர்ந்து வருவதை பறைசாற்றும் வண்ணம் விளங்குவதைக் காண்கிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பு உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வட்டங்களில் ஒரு சில வட்டங்களைத் தவிர அனைத்து வட்டங்களிலும் பகுதிக்கிளைகள் அறிவிக்கப்பட்டு 80000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு மாநிலத்தில் முதன்மை சங்கமாக நமது சங்கம் செயல்பட்டு வருகிறது.

நமது சங்க முயற்சியில் தமிழகத்தின் ஓய்வூதியர் அமைப்புகளை ஒன்றிணைத்து ‘தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டு, தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

மத்திய - மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஓய்வூதியப் பாதுகாப்பிற்காக இயக்கங்களை/ கூட்டங்களை பல மாவட்டங்களிலும் நடத்தி வருகிறோம்.

அரசு ஊழியர் ஆசிரியர்களின் (ஜேக்டோ - ஜியோ) வேலைநிறுத்தம் உள்ளிட்ட இயக்கங் களில் இரண்டறக் கலந்து பணியாற்றி அவர்களுக்கு உறுதுணையாக விளங்குகிறோம்.

புதுதில்லியில் AISGEF முன்முயற்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ‘அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம்’ (AISGPF) உருவாக்கப்பட்டது. நமது மாநிலத் தலைவர் தோழர் நெ.இல.சீதரன் அவர்கள் அகில இந்திய அமைப்பாளராக நியமனம் செய்யப்பட் டார். தொடர்ந்து 28.12.2020 அன்று சென்னையில் அமைப்பிற்கான விதி உருவாக்குதல் மற்றும் நடவடிக்கைகளுக்கான சிறப்புக் கூட்டமும் நடைபெற்றது. 12.03.2022 அன்று பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய தலைவராக தோழர் அசோக்தூல், பொதுச் செயலாளராக தோழர் நெ.இல.சீதரன், நிதிச்செயலாளராக தோழர் ஆர்.சீனிவாசன் ஆகியோரும் பல்வேறு மாநிலத்திலிருந்து துணைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 26.08.2022 அன்று மயிலாடுதுறையில் AISGPFஇன் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தில்லியில் (பரிதாபாத்) AISGEF யினால் கட்டப்பட்டுவரும் 4 தளம் கொண்ட தோழர் சுகுமால்சென் நினைவு சங்கக் கட்டிடத்தில் நமது AISGPF க்கு ஒருதளம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அகில உலக ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் தொழிற்சங்க அமைப்பின் (Trade Union International of Pensioners and Retirees) அறைகூவலை ஏற்று, “பென்ஷனை பாதுகாப்போம்”, “முதியோர்நலன் பாதுகாத்திடுவோம்” என்ற முழக்கத்தோடு அக்டோபர் 1ஆம் நாள் கடந்த 5 ஆண்டுகளாக இயக்கங்கள் நடத்தி வருகிறோம்.

நமது சங்கத்தின் 2024ம் ஆண்டு நாட்குறிப்பு பல்வேறு புதிய விவரங்களுடன் வெளி வருகிறது. பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

Address

22/32, F3 வேதவள்ளி ஃபிளாட்ஸ், ஆரிமுத்து (ஆ) தெரு, திருவல்லிக்கேணி
Chennai
600005

Opening Hours

Monday 11am - 6pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm

Telephone

+914428444434

Alerts

Be the first to know and let us send you an email when TNGPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNGPA:

Share