விஸ்வகர்மா உறவு முறை - சென்னை

  • Home
  • India
  • Chennai
  • விஸ்வகர்மா உறவு முறை - சென்னை

விஸ்வகர்மா உறவு முறை - சென்னை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விஸ்வகர்மா உறவு முறை - சென்னை, Community Organization, Chennai.

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்212, தம்பு செட்டி தெரு, மண்ணடி, சென்னை 600001சென்னை வாழ் விஸ்வகர்ம சேவார்த...
06/04/2026

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
212, தம்பு செட்டி தெரு, மண்ணடி, சென்னை 600001

சென்னை வாழ் விஸ்வகர்ம சேவார்த்திகள் பதிவு.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட விஸ்வகர்ம சமுதாய ஆண் சேவார்த்திகள் அனைவரும் கீழ்கண்ட சான்றிதழ்களுடன் தங்களது பெயர்களை 01.04.2026 முதல் 30.09.2026 வரை திருக்கோயிலுக்கு மனு மூலம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக விடுமுறை ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை தவிர மற்ற அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும், பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 05.45 மணி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.
ஒவ்வொரு சேவார்த்திகளும் தங்களது பெயர்களை பதிவு செய்ய 0.12 பைசா ஸ்கீம்படி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

2.
இருப்பிட சான்றிதழ்
சென்னை மாநகராட்சி அசல் எல்லைக்குள் வசிக்கும் விலாசத்திற்குரிய அத்தாட்சியாக ஆதார் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.

3.
வார்டு (200)
சென்னை மாநகராட்சி அசல் எல்லைக்குள் வசிக்கும் வார்டு/ விலாசத்திற்குரிய அத்தாட்சியாக ஸ்மார்ட் கார்டு/(அல்லது) வாக்காளர் அட்டை

4. விஸ்வகர்ம சான்றிதழ் ஜாதி
சம்பந்தப்பட்ட வருவாய்துறை தாசில்தார் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது. அல்லது பள்ளி சான்றிதழ் தனக்கோ (அல்லது) தனது குழந்தைகளுக்கோ வழங்கப்பட்டதில் ஜாதியின் பெயர் இடம் பெற்றிருந்தால்அதன் அசல் காண்பிக்கப்பட வேண்டும்.

5.
2026ம் ஆண்டிற்கு புதியதாக முதல் முறையாக பெயர் பதிவு செய்பவர்கள் மேற்படி ஆவணங்கள் அனைத்தும் அசல் (Original) காண்பித்து பதிவு செய்து கொள்ளலாம்,

6.
2021-2025 சேவார்த்திகள் உறுப்பினர்கள் பதிவு கணிணி முறையில் பதிவு செய்து கொண்டவர்கள் 2026ம் ஆண்டிற்கு உறுப்பினர் பதிவிற்கு அசல் ஆதார்கார்டு மட்டும் காண்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

7.
புகைப்படம் நேரில் எடுக்கப்படும்.
மேற்படி பதிவுகள் அனைத்தும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்

19/01/2026
16-12-2025மார்கழி:01சூர சம்மாரம்இறைவா, என்னுள்ளிருக்கும் சிற்றியல்பு என்னும் சூரனைச் சம்மாரம் செய்ய நீ துணை புரிவாயாக.  ...
16/12/2025

16-12-2025

மார்கழி:01

சூர சம்மாரம்

இறைவா, என்னுள்ளிருக்கும் சிற்றியல்பு என்னும் சூரனைச் சம்மாரம் செய்ய நீ துணை புரிவாயாக.

அசுரனை அழித்தல் என்னும் அரிய செயலைத் தெய்வம் பல்வேறு வடிவெடுத்துச் செய்திருக்கிறார். நம்முள்ளிருக்கும் கீழ்மையே அசுரன் என உருவகப்படுத்தி இயம்பப்பட்டிருக்கிறது. கீழ்மையோடு கடும் போர் புரிந்து அதை அகற்ற வேண்டும்.

மனதையொரு வில்லாக்கி, வான்பொறியை நாணாக்கி,
எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம்?

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்212, தம்பு செட்டித் தெரு, சென்னை - 600 001. போன் : 2522 9624Website: www.c...
22/10/2025

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
212, தம்பு செட்டித் தெரு, சென்னை - 600 001. போன் : 2522 9624
Website: www.chennaisrikaligambal.org/
E-mail: [email protected]

[ஸ்ரீ மஹா கந்த சஷ்டி லட்சார்ச்சனைப் பெருவிழா அழைப்பிதழ் [22.10.2025 - 28.10.2025]

தமிழகத்தின் தலைநகராம் தருமமிகு சென்னையில் சென்னை வாழ் விஸ்வகர்ம சமுதாயத்தினரின் குலதெய்வமாய் மேற்படி சமுதாயத்தினரை அருள்பாலிக்கவும். வாழ்வளிக்கவும் சென்னை வாழ் விஸ்வகர்ம சமுதாயத்தினரால் தோற்றுவித்து ஸ்தாபிக்கப்பட்டதும் அவர்கள் நிர்வாகத்தில் பரிபாலனத்தில் தொன்று தொட்டு இருந்து வருவதுமான அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீகாளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரர் தன் பாமாலையை சூட்டி வழிபாடு செய்ததுமாகிய இக்காளிகாம்பாள் திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ வடகதிர்காம முருகப் பெருமானுக்கு நிகழும் விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 05-ந் தேதி (22.10.2025) புதன்கிழமை முதல் ஐப்பசி மாதம் 11-ந் தேதி (28.10.2025) செவ்வாய்கிழமை வரை நடைபெறும் கந்த சஷ்டிப் பெருவிழாவில் காலை, மாலை வேளைகளில் அகில பாரதீய விஸ்வகர்ம பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சிவசண்முக ஞானாச்சார்ய குரு மஹா சன்னிதானம் அவர்கள் அருளாசியுடனும், தெய்வத்திரு. டாக்டர் தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசார்யர் அவர்கள் அருளாசியுடனும், ஸ்ரீ வடகதிர்காம முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையும் லட்சார்ச்சனை நடைபெறும்.

லட்சார்ச்சனை ஒன்றுக்கு கட்டணம் ரூ. 250/- மட்டும் ஸ்ரீ முருகப் பெருமான் திருவுருவம் பதித்த வெள்ளி டாலர் ரூ.420 /- மட்டும்,
மெய்யன்பர்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீமுருகப் பெருமானின் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்
அறங்காவலர் குழுத் தலைவர்
பிரம்மஸ்ரீ. EMS. மோகன் ஆச்சாரி

அறங்காவலர்கள்
பிரம்மஸ்ரீ.
S. சர்வேஸ்வரன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ. V. சீனிவாசன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ.
இரா. இராஜேந்திரகுமார் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ. J. ரமேஷ் ஆச்சாரி

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்212, தம்பு செட்டித் தெரு, சென்னை - 600 001Ph : 25229624Website: www.chenna...
23/09/2025

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
212, தம்பு செட்டித் தெரு, சென்னை - 600 001
Ph : 25229624
Website: www.chennaisrikaligambal.org/ Online Email: [email protected]

விசுவாவசு வருஷத்திய,
ஸ்ரீ சாரதா நவராத்திரி பெருவிழா அழைப்பிதழ்.

நாள்: 22.09.2025 திங்கள் முதல், 1.10.2025 புதன் வரை.

23/09/2025 இன்று
ஸ்ரீ சாரதா நவராத்திரி பெருவிழா இரண்டாம் நாள்
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அலங்காரம்...

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்212, தம்பு செட்டித் தெரு, சென்னை - 600 001Ph : 25229624Website: www.chenna...
22/09/2025

சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம்
212, தம்பு செட்டித் தெரு, சென்னை - 600 001
Ph : 25229624
Website: www.chennaisrikaligambal.org/ Online Email: [email protected]

விசுவாவசு வருஷத்திய,
ஸ்ரீ சாரதா நவராத்திரி பெருவிழா அழைப்பிதழ்.

நாள்: 22.09.2025 திங்கள் முதல், 1.10.2025 புதன் வரை.

22/09/2025 இன்று
ஸ்ரீ சாரதா நவராத்திரி பெருவிழா முதல் நாள் ஸ்ரீ திரிபுர சுந்தரி அலங்காரம்...

*சென்னை* *ஸ்ரீ_காளிகாம்பாள்_கமடேஸ்வரர்_தேவஸ்தானம்*212, தம்பு செட்டித் தெரு, சென்னை 600001. போன் : 044-2522 9624 Website:...
15/09/2025

*சென்னை* *ஸ்ரீ_காளிகாம்பாள்_கமடேஸ்வரர்_தேவஸ்தானம்*

212, தம்பு செட்டித் தெரு, சென்னை 600001. போன் : 044-2522 9624 Website: www.chennaisrikaligambal.org/
E-mail: [email protected]

(விஸ்வகர்ம ஜெயந்தி பெருவிழா)

தமிழகத்தின் தலைநகராம் தருமமிகு சென்னையில் சென்னை வாழ் விஸ்வகர்ம சமுதாயத்தினரின் குலதெய்வமாய் மேற்படி சமுதாயத்தினரை அருள்பாலிக்கவும், வாழ்வளிக்கவும் சென்னை வாழ் விஸ்வகர்ம சமுதாயத்தினரால் தோற்றுவித்து ஸ்தாபிக்கப்பட்டதும் அவர்கள் நிர்வாகத்தில் பரிபாலனத்தில் தொன்று தொட்டு இருந்து வருவதுமான (அன்னை ஸ்ரீ காமாட்சி) ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும். சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மகாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் தன் பாமாலையை சூட்டி வழிபாடு, செய்ததுமாகிய இக்காளிகாம்பாள் திருக்கோயிலில், ஸ்ரீ விராட் விஸ்வபரபிரம்மத்தின் கற்கோயில் சன்னதி இடம்பெற்று விஸ்வபரபிரம்மத்தின் அருட்சீடர்களான மனு, மயா, துவஷ்டா, சில்பி, விஸ்வக்ஞா எனும் பஞ்ச மகரிஷிகள் குலத் தோன்றல்களான விஸ்வகர்ம சமூகத்தினரால் பக்தி சிரத்தையுடன் நிர்வகிக்கப்பட்டு வரும் இத்தேவஸ்தானத்தில்
*ஸ்ரீ_விஸ்வபரபிரம்மத்திற்கு_ஜெயந்தி _பெருவிழா*

நிகழும் விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 01-ம் தேதி 17.09.2025 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் அகில பாரதிய விஸ்வகர்ம பீடாதிபதி குருமஹா சன்னிதானம் தெய்வத்திரு. ஸ்ரீ சிவசண்முக ஞானாச்சார்ய சுவாமிகள் அருளாசியுடனும், வேதாகம ஞான கலாநிதி தெய்வத்திரு. டாக்டர் தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசார்யர் அருளாசியுடனும், ஐந்தொழில் கடவுள் ஸ்ரீமத் விராட் விஸ்வபரபிரம்மத்திற்கு சிறப்பு ஹோமம், 108 குடத்தில் சகல அபிஷேகங்களும், அலங்காரம் ஆராதனை மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற இருப்பதால் விஸ்வகர்ம அன்பர்கள், சேவார்திகள் அனைவரும் இவ்விழாவில் குடும்ப சமேதராய் கலந்துக் கொண்டு ஸ்ரீவிஸ்வபரபிரம்மத்தின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்
அறங்காவலர் குழுத் தலைவர்
பிரம்மஸ்ரீ EMS. மோகன் ஆச்சாரி

அறங்காவலர்கள்
பிரம்மஸ்ரீ S. சர்வேஸ்வரன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ. V. சீனிவாசன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ இரா. இராஜேந்திரகுமார் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ. J. ரமேஷ் ஆச்சாரி

( பூஜையில் கலந்துகொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதத்துடன் மதியம் அறுசுவை விருந்து வழங்கப்படும்.)

17/07/2025
17/07/2025
குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்? - காஞ்சி மகா பெரியவர் விளக்கம்:குல தெய்வ வழிபாடு ஏன் நடத்த வேண்டும், அதனால் என்ன பலன், கு...
03/03/2025

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்? - காஞ்சி மகா பெரியவர் விளக்கம்:

குல தெய்வ வழிபாடு ஏன் நடத்த வேண்டும், அதனால் என்ன பலன், குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருப்பது வழக்கம். குல தெய்வத்தை வணங்கினால், நம் துன்பங்கள் விலகி, சுபிட்சம் பெறலாம்.

குல தெய்வம் என்பவர் யார்?

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம்.

தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வத்தை குல தெய்வம். தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு.

ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும்.

இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில் தான் செய்து வருவது வழக்கமாக இன்றும் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர்.

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர்.

“நாளும், கோளும் கைவிட்டாலும் கூட, நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது” என கூறியுள்ளனர்.

குலதெய்வத்தை முறைப்படி வணங்கினால், நாம் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும், அவர் நம் கூடவே இருந்து நம்ம காப்பார்.

குலதெய்வம் குறித்து காஞ்சி மகா பெரியவரின் விளக்கம்:

ஒரு முறை ஒரு ஊருக்கு மகா பெரியவர் சென்ற போது, அவரை துன்பத்தில் வாடும் ஒருவர் வந்து சந்தித்தார். பெரியவர் பார்த்ததுமே அவரின் மனக்குறையைத் தெரிந்துகொள்ளக்கூடியவர் என்பதால் அவரின் பிரச்சினைகளை அறிந்து கொண்டார்.

பெரியவரிடம் என் துன்பத்தைத் தீர்க்க வழி சொல்ல வேண்டும் என கேட்டார். அதற்கு பெரியவர், நீ குல தெய்வத்தை வழிபாடு செய்து வருகிறாய் இல்லையா என கேட்டார்.

இல்லை என கூறிய அவரிடம், முதலில் நீ உன் குல தெய்வத்தை வழிபாடு நடத்தி விட்டு வா என்றார். ஆனால் அவரோ ஐயா எங்கள் முன்னோர்கள் பர்மாவில் வசித்து வந்தனர். மூன்று தலைமுறைகளாக தான் நாங்கள் இங்கு வசிக்கின்றோம். அதனால் எங்களின் முன்னோர்கள் எந்த குல சாமியை வணங்கினார்கள் என தெரியாது என்றார். நீ உன் குல தெய்வம் யார் என தேடு, அவர் உனக்கு புலப்படுவார் என்றார்.

சரி என சென்ற அவர், அவரின் பாட்டனுக்கு நெருங்கிய சிலரிடம் கேட்க, ஒருவழியாக புதர் மண்டி கிடந்த இடத்தில் சுத்தம் செய்து பார்த்து, பேச்சாயி அம்மன் என்ற அவரின் குல தெய்வத்தை கண்டுபிடித்தார்.

அதை மகா பெரியவரிடம் வந்து சொன்னார். இப்போது என் துன்பத்தை தீருங்கள் என்றார். நீ தினமும் குல தெய்வத்திற்கு பூ பொட்டு வைத்து,விளக்கேற்றி வழிபடு செய்துவா என்றார்.

அப்படி செய்தால் மட்டும் எப்படி என் துன்பம் அகலும் என கேட்டதற்கு, நீ ஒரு வருடம் பூஜை செய்து விட்டு என்னை வந்து பார் என்றார்.

ஒரு வருடம் கழித்து அந்த நபர் தட்டு நிறையப் பழங்கள், பூ, பணம் வைத்து தன் துன்பத்தை, குல தெய்வ வழிபாடு நடத்தச் சொல்லி போக்கியதற்காக இதை சமர்ப்பிக்கிறேன் என மகா பெரியவரை வந்து வணங்கினார்.

குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒரு கலசத்தில் தண்ணீர் வைத்து அதில் சந்தனம், குங்குமம் சிறிது கலந்து அதை குலதெய்வமாக ஏற்று, பூ வைத்து வணங்க வேண்டும்.

அல்லது ஒரு சிகப்பு துணி விரித்து, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி, அதை கூட நாம் குல தெய்வமாக நாம் வழிபடலாம்.

காஞ்சி பெரியவரின் பொன்மொழி:

தேடினால் நம் குலதெய்வம் புலப்படுவார். நாம் குலதெய்வத்தை தேட முயன்றால் அவர் நமக்கு புலப்படுவார். என தெரிவித்துள்ளார்.

குல தெய்வத்தை எப்படி வழிபடுவது:

குல தெய்வம் தெரிந்தவர்கள் அடிக்கடி சென்று வணங்குவது நல்லது. அப்படி இல்லையெனில் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று, குல தெய்வத்திக்கு அபிஷேகம் செய்து புது துணி சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருவது சிறந்தது.

சிலரின் வீட்டில் பணம், பொருள் என எல்லாம் இருந்தும் நிம்மதி இருக்காது. இது குல தெய்வ வழிபாடு செய்யததால் ஏற்படும் குறை என கூறுவார்கள். அவர்கள் குல தெய்வத்தை வணங்கினால் பிரச்சினை தீரும்.

நாம் தேடினால் நம் குல தெய்வம் கிடைப்பார். அது வரையில், வீட்டில் கலசத்தில் தண்ணீர் வைத்தோ, விளக்கேற்றியோ அதை குல தெய்வமாக வணங்கி வாருங்கள். குல தெய்வத்தின் அருளை பெற்றிடுங்கள்.

தாயார் இருந்தென்ன?தந்தையும் இருந்தென்ன?தன் பிறவி உறவு கோடிதனமலை குவிந்தென்ன?கனபெயர் எடுத்தென்ன?சேயர்கள் இருந்தென்ன?குருவ...
04/02/2025

தாயார் இருந்தென்ன?
தந்தையும் இருந்தென்ன?
தன் பிறவி உறவு கோடி
தனமலை குவிந்தென்ன?
கனபெயர் எடுத்தென்ன?
சேயர்கள் இருந்தென்ன?
குருவாய் இருந்தென்ன?
சீடர்கள் இருந்தும் என்ன?
சித்து பல கற்று என்ன?
நித்தமும் விரதங்கள் செய்தென்ன?
நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும்
என்ன பலன்?
எமன் ஓலை ஒன்றை கண்டு தடுக்க
உதவுமோ?
இது எல்லாம் தந்தை உறவென்று தான்
உன்னிரு பொற்பாதம் மட்டும் பிடித்தேன் சிவசங்கரா...

🙏🕉️ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!🕉️🙏

Address

Chennai
600118

Telephone

+919884203389

Website

Alerts

Be the first to know and let us send you an email when விஸ்வகர்மா உறவு முறை - சென்னை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விஸ்வகர்மா உறவு முறை - சென்னை:

Share