23/02/2025
சென்னை கோட்டூரில் மாபெரும் கட்டணமில்லா மருத்துவ முகாம்.
சென்னை கிரவுன் அரிமா சங்கம், காயல்பட்டினம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) மற்றும் முகில் டிரஸ்ட்
ஆகிய அமைப்புகள் சார்பாக
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை , காவேரி மருத்துவமனை , சென்னை பிஸியோ கேர் , மற்றும் Dr.குப்தாஸ் பல் மருத்துவமனை
ஆகிய மருத்துவமனைகளின் ஒத்துழைப்புடன் சென்னை, கோட்டுர்புரத்தில் அமைந்துள்ள யூனிட்டி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் வைத்து 23-02-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவ பரிசோதனைக்காக 110 நபர்களும், கண் பரிசோதனைக்காக 155 நபர்களும், பல் பரிசோதனைக்காக 101 நபர்களும், பிஸியோதெரபி சிகிச்சைக்காக 38 நபர்களும் பயன்பெற்றார்கள்.
மேலும் 11 நபர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஈ.சி.ஸி எடுக்கப்பட்டது. 23 நபர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு கட்டணமில்லா கண் புரை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் கலந்து கொண்ட பயணாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின்படி கட்டணமில்லா மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை சென்னை கிரவுன் அரிமா சங்கம், முகில் அறக்கட்டளை மற்றும் காயல்பட்டிணம் சென்னை வழிகாட்டி மையம் (KCGC) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.