தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு, Community Organization, Padappai, Chennai.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு |
சமூகத்தை அரசியல் மயமாக்குவோம் | அரசியலை சமூக மயமாக்குவோம் | என்று
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் அரசியல் அதிகாரம், பிரதிநிதித்துவம் மற்றும் நிலையான அரசியல் அதிகாரத்திற்கு செயல்படும் குழு.

100 சதவிகிதம் வாக்களிப்போம்!*DKV தேர்தல் 2026*தேர்தலைப்பற்றிய சரியான விழிப்புணர்வையும், 100% தேவேந்திரர்கள் சரியாக வாக்க...
24/06/2026

100 சதவிகிதம் வாக்களிப்போம்!

*DKV தேர்தல் 2026*

தேர்தலைப்பற்றிய சரியான விழிப்புணர்வையும், 100% தேவேந்திரர்கள் சரியாக வாக்களிக்க வேண்டும் என்பதையும், மக்கள் அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து நல்லதொரு தேர்தலை தேவேந்திர்கள் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக.

தினசரி கருத்துகேட்கும் நிகழ்வு தொடர்ந்து நடக்கிறது.

தாங்களும் இணைந்தால் ஒன்றாக பயணிக்கலாம்.

*இணைவதற்கு:*
https://tinyurl.com/DKVELECTION2026

*தினசரி சந்திப்பில் இணைய:*
https://meet.google.com/ggh-onsg-vmf

*நேரம்:* இரவு 8 மணி

சந்திக்கலாம்.....

ஒன்றிணைவோம் • சிந்திப்போம் • செயல்படுவோம்

📘 Facebook: https://www.facebook.com/share/1ChXFPR1nP/

📷 Instagram: https://www.instagram.com/admindkvspcc/

▶️ YouTube: https://youtube.com/?si=HfgOUZhnIoBI2muK

#தமிழ்நாடு_தேவேந்திரகுல_வேளாளர் #சமூகஅரசியல்_ஒருங்கிணைப்புக்குழு #தேவேந்திரகுலவேளாளர்

24/06/2026

மக்களால் மக்களுக்காக இயற்கையின் ஆதரவோடு உருவாகியதுதான் ஒருங்கிணைப்பு குழு.

2வது நாள் கலந்துரையாடல் ஒரு சிறு பார்வை:

🇧🇾🇧🇾🇧🇾 *DKV தேர்தல் 2026:*🇧🇾🇧🇾🇧🇾

*காணொளி சந்திப்பு:* 2

*நாள்:* 04-Nov-2025

தொடர்ந்து இரண்டு நாட்கள் காணொளி சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் 2026 ல் பங்களிக்கும் உறவுகளுக்கு நன்றி.

*1. சில தொகுதிகளில் நமது தோழமை சமுதாயங்களுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது*

*2. இளைஞர்களை மையப்படுத்தி தேர்தல் பணிகளை கொண்டுசெல்வது*

*3. தொகுதிவாரியாக தேர்தல் பணிசெய்ய தன்னார்வலர்களை கண்டறிதல்*

*4. அதிகாரத்திலிருக்கும் அரசியல் கட்சிகளை நமது கோரிக்கையை முன்வைத்து ஆதரிப்பது*

இன்றும் முக்கிய விசயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இது போக இதற்கு முன் அனுபவம் வாய்ந்த நபர்கள், அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்கும் சக்தி கொண்ட பலரும் வெளியே உள்ளனர். அவர்களுக்கு நேரடி சந்திப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருத்து கேட்கப்பட்டது.

*முடிவுகள்:*
1. தினசரி இந்த கூட்டத்தை ஆன்லைன் வாயிலாக நடத்துவது நன்றாக உள்ளது. தொடர்ந்து நடத்த வேண்டும்
2. தினசரி பேசப்படும் கருத்துக்களை ஆவணப்படத்துவது. இது தொடர்ந்து நடக்கிறது
3. கடந்த, முந்தைய தேர்தல்களில் தொகுதி, பூத் வாரியாக பதிவான வாக்குகள் பற்றி தகவல்களை பெற வேண்டும். அதற்கு நமது அரசு அதிகாரிகளை அணுகவேண்டும்
4. தன்னார்வமாக தேர்தல் பணி செய்ய விருப்பம் உள்ள இளைஞர்களை கண்டறிய வேண்டும்
5. ஒவ்வொருவரும் ஒரு 5 கூடுதல் நபர்களை தொடர்பு கொண்டு அவர்களை நமது தினசரி கலந்துரையாடலில் கலந்துகொள்ள வற்புறுத்த வேண்டும்
6. தேர்தல் பணி செய்ய சில நாட்களை அனைவரும் ஒதுக்க வேண்டும். அவர்களின் பொருளாதார தேவை மற்றும் தன் பணியும் இடையூறு ஆகாதவாறு திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதிக நபர்கள் தேர்தல் 2026 ல் நேரடியாக தேர்தல் பணி செய்ய முன்வர வேண்டும்.

உறவுகளுக்கு தினசரி சந்திப்பது, அதுவும் குறிப்பாக வேலை நாட்களில் சற்று சிரமம்தான். ஆனாலும் கூடுமானவரை கலந்துகொள்ள முயற்சி செய்ய அனைவரும் முன்வர வேண்டும். நமது காலத்திலேயே அரசியல் மாற்றத்தை காண ஆசை அனைவருக்கும் உள்ளது. அந்த கனவை நனவாக்க உங்களின் பங்களிப்பு அவசியம். அதற்கான சாத்தியக்கூறுகள் நன்றாக தெரிகிறது.

ஆகவே தவறாது அனைவரும் தினமும் கலந்துகொள்ள முயற்சி செய்வோம்.

நாளை சந்திப்போம் *இரவு 8-10 மணி.*

நன்றி.

23/06/2026

🇧🇾🇧🇾🇧🇾 DKV தேர்தல் 2026 🇧🇾🇧🇾🇧🇾

📹 முதல் காணொளி கலந்துரையாடல் – சுருக்கம்

🗓️ நாள்: 03 நவம்பர் 2025

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்த DKV தேர்தல் 2026 முதல் காணொளி கலந்துரையாடலில் கலந்து கொண்டு, தங்களது ஆழமான கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

2026 தேர்தலை, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் புதிய அரசியல் பயணத்தின் தொடக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் கருத்துக்களிலும் வெளிப்பட்டது.

📝 முக்கியமாக விவாதிக்கப்பட்ட கருத்துகள்:

✅ நம்மை ஆதரிக்கும் அரசியல் சக்திகளுக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவது.

✅ ஆதரவு இல்லாத இடங்களில் தேவேந்திர வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து ஆதரிப்பது.

✅ பொதுத் தொகுதிகளில் தேவேந்திரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் கட்சிகளை ஆதரிப்பது.

✅ தேவையான இடங்களில் பிற தமிழ் குடிகளுடன் இணைந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஆதரிப்பது.

மேலும்,

- தேர்தல் புறக்கணிப்பின் சாதக–பாதகங்கள்,
- பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை ஆதரிக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது,
- இக்கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக மாற்றுவது,
- அரசியல் கட்சிகளிடம் நமது கோரிக்கைகளை வலியுறுத்துவது,
- தேர்தலுக்கு பிந்தைய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது,
- விரைவில் நேரடி சந்திப்பை ஏற்பாடு செய்வது

போன்ற பல முக்கிய கருத்துகள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டன.

📌 கூட்ட முடிவுகள்

1️⃣ தினசரி இரவு ஆன்லைன் கலந்துரையாடல் நடத்துதல்.
2️⃣ ஒவ்வொரு நாளும் பேசப்படும் கருத்துகளை ஆவணப்படுத்துதல்.

அனைத்து உறவுகளும் தினசரி நடைபெறும் ஆன்லைன் கலந்துரையாடலில் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளையும் பங்களிப்பையும் வழங்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

🕗 அடுத்த சந்திப்பு: தினமும் இரவு 8.00 மணி – 10.00 மணி

ஒன்றிணைவோம் • சிந்திப்போம் • செயல்படுவோம்

📘 Facebook: https://www.facebook.com/share/1ChXFPR1nP/

📷 Instagram: https://www.instagram.com/admindkvspcc/

▶️ YouTube: https://youtube.com/?si=HfgOUZhnIoBI2muK

#தமிழ்நாடு_தேவேந்திரகுல_வேளாளர் #சமூகஅரசியல்_ஒருங்கிணைப்புக்குழு #தேவேந்திரகுலவேளாளர்

DKV Election 2026 – தேர்தல் 2026📢 முதல் கலந்துரையாடல்தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு மு...
23/06/2026

DKV Election 2026 – தேர்தல் 2026

📢 முதல் கலந்துரையாடல்

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுப்பில் நடைபெறும் DKV Election 2026 முதல் இணையவழி கலந்துரையாடலுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

🗓️ நாள்: 03 நவம்பர் 2025 (திங்கள்)
🕗 நேரம்: இரவு 8.00 மணி – 10.00 மணி

🎥 Google Meet Link:
https://meet.google.com/ggh-onsg-vmf

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் அரசியல் எதிர்காலம், தேர்தல் முன்னெடுப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து அனைவரும் இணைந்து கலந்துரையாடுவோம்.

ஒன்றிணைவோம் • சிந்திப்போம் • செயல்படுவோம்

📘 Facebook: https://www.facebook.com/share/1ChXFPR1nP/

📷 Instagram: https://www.instagram.com/admindkvspcc/

▶️ YouTube: https://youtube.com/?si=HfgOUZhnIoBI2muK

#தேவேந்திரகுலவேளாளர் #தமிழ்நாடு_தேவேந்திரகுல_வேளாளர் #சமூகஅரசியல்_ஒருங்கிணைப்புக்குழு

DKV Election 2026 – தேர்தல் 2026வணக்கம்!தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுப்பில்,...
23/06/2026

DKV Election 2026 – தேர்தல் 2026

வணக்கம்!

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுப்பில், 29 அக்டோபர் 2025 அன்று DKV Election 2026 – தேர்தல் 2026 என்ற இந்த சமூக ஊடக முயற்சி தொடங்கப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் தேர்தல் பங்கேற்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம்.

இனி இந்தப் பக்கத்தில் தொடர்ந்து:
✅ தேர்தல் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்
✅ சமூக விழிப்புணர்வு பதிவுகள்
✅ அரசியல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தகவல்கள்
✅ நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள்
பகிரப்படும்.

ஒன்றிணைவோம். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அரசியல் பங்களிப்பை அதிகரிப்போம்.

📘 Facebook: https://www.facebook.com/share/1ChXFPR1nP/⁠

📷 Instagram: https://www.instagram.com/admindkvspcc/⁠

▶️ YouTube: https://youtube.com/?si=HfgOUZhnIoBI2muK⁠

#தேவேந்திரகுலவேளாளர் #தமிழ்நாடு_தேவேந்திரகுல_வேளாளர் #சமூகஅரசியல்_ஒருங்கிணைப்புக்குழு #அரசியல்விழிப்புணர்வு

Address

Padappai
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமூக அரசியல் ஒருங்கிணைப்புக் குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share