Voice of chitlapakkam

Voice of chitlapakkam நம் பகுதி நம் பொறுப்பு

04/05/2026

TVK SARATH WON THE TAMBARAM CONSTITUENCY. HE IS OUR MLA.HAPPY TO HEAR. BUT REAL CHALLENGES BEGIN. EVERY REPRESENTATIVES TOOK OATH WHILE THEY GOT THEIR SEATS. HOPE THEY WILL NOT VIOLATE.
WE THE Voice of chitlapakkam ALWAYS WATCH AND WE ARE WAITING...

WORLD AUTISTIC ACCEPTANCE DAYஆட்டிசம் விழிப்புணர்வு நடைபயணம் நமது சிட்லபாக்கம் ஏரியில் சிறப்பாக நடைபெற்றது. நடையணத்தை Dr...
01/04/2026

WORLD AUTISTIC ACCEPTANCE DAY
ஆட்டிசம் விழிப்புணர்வு நடைபயணம் நமது சிட்லபாக்கம் ஏரியில் சிறப்பாக நடைபெற்றது. நடையணத்தை Dr. Cyril (Head of disability School) மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் DRO DR. Kathirvel மற்றும் GIID autism acceptance week partnership with INZPIRE INCLUSIVE FITNESS ( spl kid fitness, day care and learning centre) chrompet, NIPMED VOLUNTEERS .போன்ற‌ பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர். இதில் பல குழந்தைகள் கலந்துகொண்டு அவரவரின் சிறப்புத் திறனை அற்புதமாக வெளிப்படுத்தினர். இதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது பெற்றோர்கள். ஆட்டிசம் குறைபாடு உள்ள மாணவர்களின் சிறப்புத் திறனை அறிந்து அதற்கேற்றாற்போல் சிறப்பு ஆசிரியர்களின் பயிற்சி சொல்லில் அடங்காது. அந்த விழா நிறைவு செய்தவுடன் நம் தாம்பரம் மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் உடனுக்குடன் குப்பைகளை அகற்றியதற்கு நன்றியுடன் மகிழ்ச்சியை பகிர்கிறோம். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளும் மற்ற குழந்தைகள் மாதிரிதான் என்று எடுத்துக்காட்டுவதற்கான விழிப்புணர்வு இந்த நடைபயணம். இவர்களுக்கான தனித்திறனின் எடுத்துக்காட்டாக பலர் பாரா ஒலிப்பிக்கில் பதக்கம் வென்றவர்கள். இம்மாதிரி குழந்தைகளை வீட்டீல் வைத்துக்கொள்ளாமல் inclusive education மற்றும் சிறப்ப பள்ளிகளில் சேர்க்கவும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் 9094783445 லஷ்மி கிருஷ்ணகுமார், Geetha மற்றும் Mathavi Raman உதவி செய்ய காத்திருக்கிறோம்.
ஆட்டிசம் என்பது நோயல்ல ஒரு குறைபாடு தகுந்த பயிற்சி இருந்தால் அவர்களும் சாதாரண மாணவர்கள் தான்.

30/03/2026

தேர்தல் வாக்குறுதிகள். பல கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசுகின்றனர். இதில் நடைமுறை சாத்தியத்தை சிந்திக்க வேண்டும். இங்கு யாரும் வரிச்சுமையை குறைக்க வாக்குறுதிகளை தரவில்லை. எல்லா கட்சிகளும் வரிச்சுமையை கூட்டுவதற்கான வாக்குறுதிகள் மட்டுமே. இலவசங்கள் நம்முடைய வரிச்சுமையை இரட்டிப்பாக்கும். ஏற்கனவே வீட்டு வரி, தண்ணீர் இணைப்பு இல்வாதோர்க்கு தண்ணீர் வரி, மின்சாரம் கணக்கிடும் முறை பெருஞ்சுமை. ஊழலை ஒழிப்போம் என்று ஒரு கட்சி. மக்களின் வாழ்வாதாரம் இலவசங்களில் இல்லை கல்வியிலும், மருத்துவத்திலும் இருக்கிறது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படும் என்ற வாக்குறுதி இல்லை. அரசு காப்பீடு எல்லா மருத்துவமனையிலும் செல்லும் என்ற அறிக்கை இல்லை. அரசு அலுவுலங்களின் அதிகார்களை சுலபாக சந்திக்கும் முறை வேண்டும். சாக்கடை நீர் கலக்காமல் இருக்க திட்டங்கள் மற்றம் அதை செயல்படுத்தும் அதிகாரிகள் வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்டவர்கள் யார் என்று அறிந்து வாக்களிக்க தயாராவோம். ஓட்டுக்கு காசு வாங்கி விலை போகாமல் இருக்க கற்றுகொள்வோம். சிந்தீப்பீர் மக்களே....இனியும் சிநதனைகள் தொடரும்
இப்படிக்கு வாய்ஸ் ஆஃப் சிட்லபாக்கம் குழு.

29/03/2026

தாம்பரம் சட்டமன்றத்தில் நான்கு கட்சியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள்.

Water Ambassador Nimal Raghavan met the Prime Minister. His works are really amazing. Rajasthan lake work tells his name...
12/03/2026

Water Ambassador Nimal Raghavan met the Prime Minister. His works are really amazing. Rajasthan lake work tells his name forever. Tireless worker

சாலை போடுவதும் மிகவும் முக்கியம். ஆனால் மில்லிங் (milling), ஸ்கரிப்பிங் (scraping ) செய்யாமல் போடும் சாலை தரமற்றது. சிட்...
28/02/2026

சாலை போடுவதும் மிகவும் முக்கியம். ஆனால் மில்லிங் (milling), ஸ்கரிப்பிங் (scraping ) செய்யாமல் போடும் சாலை தரமற்றது. சிட்லப்பாக்கத்தில் Ward 44 சாலை போடும் வேலை நடக்கிறது. ஆனால் தரமில்லை. ரோடு மேல ரோடு போட்டு உயரத்தை கூட்டி மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வருமா ?? வராதா?? இதை அங்கு வசிக்கும் மக்கள் கேட்க வேண்டாமா?? கேள்வி கேட்கவில்லை என்றால் சில பொது விஷயங்களுக்கு தீர்வு கிடைக்காது. டெண்டரில் scraping, milling செய்ய வேண்டுமென குறிப்பிடவில்லையாம். கேட்பதற்கு கேலி கூத்தாக உள்ளது.எங்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் உரிமையை யார் கொடுத்தது??
Tambaram Corporation , AE, AEE, JEE SE இதற்கு தீர்வு வேண்டும். மக்களும் அச்சப்படாமல் கேள்வி கேட்க வேண்டும்.

Tree walk today 28th February 2026 , 3.45 pm at Chitlapakkam Neer vanam -Nizhal Chitlapakkam 10th Anniversary. Please at...
28/02/2026

Tree walk today 28th February 2026 , 3.45 pm at Chitlapakkam Neer vanam -Nizhal Chitlapakkam 10th Anniversary. Please attend. Let's know our surroundings.

44 வது வார்டு கண்ணகி தெருவில்  எப்போதாவது வரும் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது என்னதான் செய்வது இப்படிப்பட்ட ...
26/02/2026

44 வது வார்டு கண்ணகி தெருவில் எப்போதாவது வரும் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது என்னதான் செய்வது இப்படிப்பட்ட நிர்வாகத்தை ...கானல் நீராய் போகின்ற அளவில் உள்ள குடிநீரில் கழிவு நீரும் கலந்துள்ளது .....
குடிக்கும் நீர் சாக்கடை கலந்து வந்தால் இதன் மூலம் வரும் வியாதிகள் எண்ணில் அடங்காதவை. ஒவ்வொரு முறையும் பரிசோதித்து புகைப்படம் வெளியிடும் தாம்பரம் மாநகராட்சி இதை எப்பொழுது கவனத்தில் கொள்ளும். இதை உட்கொண்டால் நம் குழந்தைகளின் உடல்நிலை அடுத்த சந்ததியினர் நிலையே கேள்விக்குறிதான் ??
Tambaram Corporation

சென்று வாருங்கள் தோழர்! வீரவணக்கம்!!! 🚩சிட்லப்பாக்கம் குடியிருப்பு வாசிகள் உங்கள் சேவையை என்றும் மறவாத கடமைப்பட்டவர்கள்....
25/02/2026

சென்று வாருங்கள் தோழர்! வீரவணக்கம்!!! 🚩
சிட்லப்பாக்கம் குடியிருப்பு வாசிகள் உங்கள் சேவையை என்றும் மறவாத கடமைப்பட்டவர்கள்.
ஊர் கூடி தேர் இழுத்தால் என்பது போல் இந்த சிட்லப்பாக்கம் ஏரி தூய்மை பணி மக்கள் இயக்கமாக மாறி பெரிய உந்து சக்தியை உண்டாக்கியதற்கும், பெரும்பாலன குடியிருப்புகளையும் வாழ்வதாரத்தையும் பாதுகாக்க கம்யூனிஸ்டு கட்சி தோழர்களின் உழைப்பு அளப்பரியது.
ஐயா உங்கள் உயரம் ஏணி வைத்தாலும் எட்டாது.உங்கள் அமைதி ஆழ்ப்பறியது. சில தோழர்கள் பொது நலத்திற்காக சிறை சென்ற போது உங்களுடைய குரல் தமிழ்நாடு முழுவதும் கண்டண அறிக்கையாக பதிவாக்கியதில் பெரும் பங்கு உங்களையே சாரும். எதையும் எளிதில் மறக்கப் முடியாது. மறக்கவும் கூடாது.
என்றென்றும் எங்களில் கலந்திருக்கும் உங்கள் ஆன்மா சாந்தியடைய வாய்ஸ் ஆஃப் சிட்லபாக்கம் சார்பில் பிரார்திக்கிறோம்.
செவ்வணக்கம் ! வீரவணக்கம்!

Address

Chennai

Telephone

+919952061020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of chitlapakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share