12/11/2024
ஒரு ஊரை எப்படி தண்ணீர் பஞ்சத்தில் தள்ளுவது. கீழ்க்கண்ட முறைகளை கையாண்டால் விரைவில் சாதித்து விடலாம்.
1. தெரு/சாலைகளை முழுவதுமாக ஒரு இன்ச் கூட மண் இடமாக மழைநீர் ஒரு துளி கூட மண்ணில் இறங்க விடாமல் முழுவதுமாக சிமெண்ட் & தார் சாலை அமைப்பது (உபயம்: அரசு).
2. வீடு & அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் போது முழுவதுமாக ஒரு இன்ச் கூட மண் இடம் மழைநீர் ஒரு துளி கூட மண்ணில் இறங்க விடாமல் சுற்று சுவர் டூ சுற்று சுவர் முழுவதுமாக கட்டிடம் கட்டுவது அப்படியே இடம் விட்டு கட்டினாலும் வீட்டை சுற்றிலும் முழுவதும் சிமெண்டால் தரை அமைப்பது (உபயம்: பொது மக்கள்)
3. ஊரில் உள்ள கொஞ்சநஞ்ச பச்சை பசேல் மரங்களையும் செடி கொடிகளையும் வளர்ச்சி என்ற போர்வையில் வெட்டி சாய்ப்பது (உபயம்: அரசு & பொதுமக்கள்)
4. ஊரில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் & மற்ற நீர் நிலைகள் & நீர்வழி பாதைகளை தூர்ந்து & ஆக்கிரமித்து அதன் மேல் வீடுகள் & கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து நாசமாய் போவது (உபயம்: அரசு & பொதுமக்கள்)
5. அனைத்து வகையான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு இல்லாமல் இருப்பது, அப்படியே இருந்தாலும் அதனை பராமரிக்காமல் அனைத்து மழை நீரையும் பைப் அமைத்து சாலையில் வடிய விடுவது (உபயம்: அரசு & பொதுமக்கள்)
6. ஊரில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், மற்ற நீர் நிலைகள் & நீர்வழி பாதைகளை தேர்ந்தெடுத்து குப்பைகளை கொட்டுவது (உபயம்: அறிவு கெட்ட பொதுமக்கள்)
7. ஊரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகாலிலும் கழிவுநீர் கலந்து மாசு ஆக்குவது & குப்பைகளை கொட்டுவது (உபயம்: அறிவு கெட்ட பொதுமக்கள்)
இப்படி மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் பின் நாளில் வெகு தொலைவில் இருந்து டாங்கர் லாரிகள் மூலம் பணம் செலவு செய்து தண்ணீர் கொண்டு வந்து செலவு செய்யலாம்.
இலவசமாக கிடைக்கும் மழைநீரை இன்று சேமிக்காவிட்டால் நாளை நீ & உனது சந்ததியினர்கள் கை காசு போட்டு அதே நீரை வாங்கி வாழ வேண்டிய துர்பாக்கிய வாழ்க்கையை மனநிம்மதி இல்லாமல் வாழலாம்.
நன்றி
https://www.facebook.com/share/v/19eLDvmTAT/