07/03/2023
இன்றைய உலகத்தில் , கூன் குறுடு செவிடு பேடு நீங்கி , எவ்வித உடல் ஊனமும் இல்லாமல் பிறந்தவர்களுக்கே தங்களின் அன்றாட பிரச்சனைகளைப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சிரம்ப்பட்டு வருகிற நிலையில் ,
முழு பார்வை மாற்றுத் திறனாளிகளாகி நானும் என் மனைவியும் , ஒரு சமூக கடமையாக கருதி , எங்களைப் போன்ற பார்வையற்ற பெண் பிள்ளைகளின் நலனுக்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கி , அவர்களில் சிலருக்கு எங்களால் முடிந்த அளவில் தங்குமிடம், உணவு மற்றும் அவர்களின் படிப்புக்கும் வாசிப்புக்கும் இயன்ற வசதிகளைச் செய்து வருகிறோம் .
அழகுநிலா என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி, அதன் மூலம் , பார்வை மாற்றுத் திறனாளிகளைக் கல்வியில் மேம்பட ஊக்கமளித்து , வருகிறோம்.
இதில் அவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கும் , கணிணி இயக்கவும் , மேலும் , அவர்களின் மேம்பாட்டுக்காகவும் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டு இந்த அறக்கட்டளையை வெற்றிகரமாக கடந்த இரண்டு ஆண்டுகளகா நடத்தி வந்துள்ளோம் . இதன் மூலம் சில பார்வையற்றவருக்கு வேலை கிடைக்கவும் வழிவகை செய்து கொடுத்துள்ளோம்
ஆனால், போன வாரம் எங்கள் அறக்கட்டளை சார்பாக வாடகைக்கு எடுத்து தங்குமிடம் செய்து தந்த வீட்டுக்கு பக்கத்திலேயும் மேலேயும் மெட்ரோவில் வேலை செய்ய இளைஞர்களுக்கு வாடகை விட்டுள்ளனர்
பார்வையற்ற பெண்களை வைத்துக் கொண்டு தற்போது அவர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து வருகிறோம்
எனவே , இந்தப் பதிவைப் பார்க்கும் நல்லுள்ளங்கள், தங்களால் இயலும் பட்சத்தில் எங்களுக்கான மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.
புதிதாக நம்பிக்கை தந்துவிட்டு இப்போது அந்தப் பிள்ளைகளை அப்படியே விட்டு விட மனம் வரவில்லை.
எங்கள் அறக்கட்டளையின் இணையதளம்
www.azhagunila.in
ஆகும். அதில் எங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக பதிவு செய்துள்ளோம்.
நான் எனது வருவாயிலிருந்தும் என் மனைவியின் நகை முதற்கொண்டு அடைமானம் வைத்தே மாணவர்களின் நலனுக்காக இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறோம்.
நண்பர்கள் தங்களால் இயன்ற சிறிய உதவியை இந்த முன்னெடுப்புக்கு தந்து உதவினால் , அது நான்கு பார்வையற்றவர் வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்தது போன்றதாகும் .
AzhaguNila Trust ,
Karuppasami R & K Meenambal
55/7, Vinayagapuram 1st Street,
Arumbakkam , Chennai - 600106.
Mobile : 9159082018
Google Pay : 9884967789
- உங்களின் மற்றும் உலகின் நன்மையை என்றும் நாடும் மனிதர்களில் ஒருவனாக இந்த உதவியைக் கோருகிறேன்
- கருப்பசாமி தமிழ்ப் பட்டதாரி மற்றும் பார்வை மாற்றுத் திறனாளி