Mukhtasar Tafsir Ibn Kathir

Mukhtasar Tafsir Ibn Kathir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mukhtasar Tafsir Ibn Kathir, 35/16, Angappa Naicken St, Chennai.

  47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி  ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெறவுள்ளது.இடம்: நந்தனம் YMCA மைதானம்.எமது ரஹ்மத் பப்ளிகேஷன்...
01/01/2024



47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெறவுள்ளது.
இடம்: நந்தனம் YMCA மைதானம்.

எமது ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகள் இஸ்லாமிய நூல் விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

நேரில் வந்து வாங்க இயலாதவர்களுக்கு 10% டிஸ்கவுன்ட் + கூரியர் கட்டணமின்றி உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

எமது வெளியீடுகள் இலாப நோக்கின்றி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் திருக்குர்ஆன் நபிமொழிகளின் கொண்டு அலங்கரியுங்கள்.

* இச்சலுகை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் மட்டுமே!

வாட்ஸ்அப் தொடர்புக்கு...

https://wa.me/c/919171846184

#ரஹ்மத்_அறக்கட்டளை

09/11/2023
26/05/2022

சகோதரி ஃபாத்திமா (சபரிமாலா) அவர்களின் https://youtu.be/uOFQsC-2z4A காணொளியை அண்மையில் கண்டேன்.

தான் இஸ்லாமை வாழ்வியலாகத் தழுவியதற்கு எமது ரஹ்மத் அறக்கட்டளையின் ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகளும் முக்கியக் காரணமாக இருந்தது என்பதை அருமையாக குறிப்பிட்டதோடு, இவ்வெளியீடுகளை தமிழ்கூறும் உலகுக்கு அளித்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து துஆக்களையும் தெரிவித்தார்.

ரஹ்மத் அறக்கட்டளை அறங்காவலர், இப்பணிகளுக்கு வித்திட்டவன் என்ற முறையில் சகோதரி ஃபாத்திமா அவர்களுக்கு எனது துஆவுடன் வாழ்த்துக்கள். ஜஸாக்கல்லாஹு ஹைரா.

#தயவுசெய்து_படியுங்கள் என்று தலைப்பிட்ட அந்தக் காணொளியில்,

எழுத வாசிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டியவை திருக்குர்ஆன் விரிவுரை (தஃப்சீர்), நபிகளாரின் பொன்மொழிகள் (ஹதீஸ்கள்) எனக் குறிப்பிட்டிருந்தார்.

எமது இப்பணிகள் இலாப நோக்கற்ற மறுமைப் பிரதிபலன்களை மட்டுமே இலக்காகக் கொண்டவை. ஒரு பாகம் வெளிவர பெரிய பொருட்செலவு ஏற்படுகிறது. ஆனால் மிக மிகக் குறைவான விலையே நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

எமது இப்பணிகள் இறைஉவப்பு, இறையங்கீகாரம் ஆகிய உன்னத எண்ணங்களோடு இக்லாஸ் எனும் தூய எண்ணத்தோடு நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தங்களன்பின்
எம்.ஏ. தமீம்
நிறுவனர் & அறங்காவலர்
ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை
ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ், சென்னை
ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
+91 98400 99999

#ரஹ்மத் | #ரஹ்மத்_அறக்கட்டளை | #ரஹ்மத்_பப்ளிகேஷன்ஸ் | | | | | #ஸஹீஹுல்_புகாரீ | #தஃப்சீர்_இப்னு_கஸீர்
https://youtu.be/uOFQsC-2z4A

11:15. யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்க(ளின் ...
25/04/2021

11:15. யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்
க(ளின் பலன்)களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு (பலன் வழங்குவதில்) குறை செய்யப்படாது.

11:16. (ஆனால்,) அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு (அடியோடு) அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் விளம்பரத்திற்காக நற்செயல் புரிபவர்களைக் குறிக்கிறது. அவர்களுக்கு, அவர்கள் ஆற்றிய நற்செயல்களுக்கான பலன்கள் அனைத்தும் இம்மையிலேயே வழங்கப்பட்டுவிடும். அவர்களுக்கு அணுவளவுகூட அநீதியிழைக்கப்படமாட்டாது.

இதன்படி, இந்த வசனத்தின் பொருளாவது: யார் இவ்வுலகத்தை(யும் அதன் பலனையும்) எதிர்பார்த்து நல்லறம் புரிகின்றாரோ, அது தொழுகையாகவோ நோன்பாகவோ இருந்தாலும் அதை இவ்வுலக (ஆதாய)த்திற்காக மட்டுமே அவர் செய்திருந்தால், அவர் எதிர்பார்த்த பலனை இம்மையிலேயே அவருக்கு நான் முழுமையாக வழங்கிவிடுவேன்.

அத்தோடு அவர் செய்துகொண்டிருந்த நல்லறங்கள் அனைத்தும் (இம்மையிலேயே) அழிந்துபோகும். அவர் மறுமையில் இழப்புக்குரியோரில் ஒருவராக இருப்பார்.

#விளம்பரத்திற்காக #நல்லறம் #புரிவோர்

முஜாஹித் (ரஹ்) அவர்கள், “இவ்வசனம் விளம்பரத்திற்காக நற்செயல் புரிவோர் குறித்து அருளப்பெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இந்த உலகமே ஒருவருடைய நோக்கமாகவும் எண்ணமாகவும் வேட்கையாகவும் இருக்குமானால், அவர் ஆற்றிய நல்லறங்களுக்கு இவ்வுலகிலேயே அல்லாஹ் பிரதிபலன் வழங்கிவிடுவான். அவர் மறுமையை அடையும்போது பிரதிபலன் வழங்கத் தகுந்த எந்தவொரு நல்லறமும் அவருக்காக (எஞ்சி) இருக்காது.

அதே நேரத்தில், ஒரு (நல்ல) இறைநம்பிக்கையாளர், தாம் புரிந்த நல்லறங்களுக்காக இவ்வுலகில் பிரதிபலன் வழங்கப்படுவதுடன், மறுமையிலும் அவற்றுக்காக வெகுமதி வழங்கப்படுவார். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம்)

( #தஃப்சீர் #இப்னு #கஸீர் #தமிழாக்கம், பாகம் - 4, 11:15,16 விரிவுரையிலிருந்து...)

Address

35/16, Angappa Naicken St
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Mukhtasar Tafsir Ibn Kathir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mukhtasar Tafsir Ibn Kathir:

Share