பரதவர் ஒற்றுமை தளம்

பரதவர் ஒற்றுமை தளம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பரதவர் ஒற்றுமை தளம், Community Center, Chennai.

நெய்தல்

"கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்"

14/12/2024

#கவர்னர் மாளிகையில் சுதந்திரப் போராட்ட மாவீரர் #பாண்டியாபதி #தேர்மாறன் அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம்..!!

திருச்செந்தூர் தேர் வடம் தொட்டு தேரோட்டம் துவக்கி வைத்த பரதவர் குலத்தோர் வீரபாண்டியன்பட்டத்தை சேர்ந்த   ஊர் பட்டங்கட்டி ...
14/12/2024

திருச்செந்தூர் தேர் வடம் தொட்டு தேரோட்டம் துவக்கி வைத்த பரதவர் குலத்தோர் வீரபாண்டியன்பட்டத்தை சேர்ந்த ஊர் பட்டங்கட்டி அடப்பனார் .

28/11/2024
30/10/2024

வீர பரதவர் படை 🇳🇬

குமரி மாவட்டத்திற்கு என்று தனித்த வட்டார தமிழ் (slang) மொழி கிடையாது. காரணம் கீழே 'குமரித் தமிழ்' (Kumari Tamil)  தமிழின...
29/10/2024

குமரி மாவட்டத்திற்கு என்று தனித்த வட்டார தமிழ் (slang) மொழி கிடையாது. காரணம் கீழே

'குமரித் தமிழ்' (Kumari Tamil) தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி ஆரம்ப காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இயங்கி இருப்பதால் மலையாளச் சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. இன்றைய 'குமரித் தமிழ்' பல்வேறு வகைகளில் பேசப்படுகிறது.

1.தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் உள்ள வெள்ளாளர் மக்கள் பேசும் நாஞ்சில் நாட்டுத் தமிழ்.

2.குமரி மாவட்டத்தில் வாழும் நாடார் மக்கள் பேசும் வேணாட்டுத் தமிழ்.

3.குமரி மாவட்டத்தில் மலைகளில் வாழும் பழங்குடியினர் தங்கள் சார்ந்த வட்டார மொழி பேசுகின்றனர்.

4.கடலோரக் கிராமங்களை உள்ளடக்கிய (முக்குவர், பரதவர்) வட்டார மீனவர் தமிழ்.

இவ்வாறு ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் சார்ந்த வட்டார மொழி பேசுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் (முக்குவர், பரதவர்) மீனவர்களுக்கு இடையே இரண்டு வட்டார மொழி பேசப்படுகிறது .

மேலும் குரும்பனை பெர்லின் அவர்கள் குமரி கடலோர மக்கள் பேசும் வட்டார மொழி சொற்கள் பற்றிய புத்தகம் எழுதி உள்ளார்.
முக்குவர் மீனவர்கள் இடையே பேசும் வட்டார தமிழ் மொழியை சித்த மருத்துவர் தொடர்ந்து இனைய தளத்தில் பதிவு செய்து வருகிறார். அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

குமரி தமிழ் மருத்துவன் இனையத்தில் சுட்டி கீழே உள்ளது.

https://www.facebook.com/jeenu.phoenixboy.1
https://www.instagram.com/kumari_tamil_maruthuvan_/

குமரி மாவட்ட பரதவர் பேசும் வட்டார மொழி பற்றிய அறிய ச.முருகானந்தம் எழுதிய கடற்கரை பரதவர் கலைச்சொல் அகராதி என்ற நூலில் 193 ஆம் பக்கத்தில் பல்வேறு சொற்கள் மற்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

"கடற்கரை பரதவர் கலைச்சொல் அகராதி" நூலை படிக்க லிங் :

https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU1lJIy&tag=%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D /197

இறுதியில் குமரி மாவட்டத்திற்கு என்று தனித்த வட்டார தமிழ் (slang) மொழி கிடையாது. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் சார்ந்த வட்டார தமிழ் பேசுகின்றனர்.

எந்த ஒரு குறிப்பிட்ட வட்டார தமிழ் மொழியை குமரி மண்ணின் வட்டார தமிழ் அடையாளமாக முன்னுருத்த முடியாது !

பல்வேறு பிரிவுகள் பேசும் வட்டார தமிழ் மொழிகள் இணைந்தே ""குமரி தமிழ்"" ஆகும்.

25/10/2024

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when பரதவர் ஒற்றுமை தளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share