18/09/2026
உபா போன்ற கொடும் சட்டங்கள் ஒருக்காலமும் மக்களை பாதுகாக்காது. மக்களுக்காக போராடும் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை ஒடுக்குவதே இந்த சட்டத்தின் நோக்கம்
- யா. அருள்
உபா சட்டத்தின் பிரிவு 35 - ன் படி யாரை எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். அந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம். பிரிவு 43 - ன் படி எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெற முடியாது. ஜாமீனில் வெளி வருவது கஷ்டம்.
மத்திய அரசின் புள்ளி விபரப்படி கடந்த 5 ஆண்டுகளில் 10,440 பேர் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 335 பேர் மட்டுமே குற்றம் செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 97.2 சதவீதம் பேர் எந்த குற்றமும் செய்யாதவர்கள். 7 ஆண்டுகள் விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் கொடுமையை இந்த சட்டம் வழங்குகிறது.
தடா , போடா , போன்ற கொடும் சட்டங்கள் மக்கள் எதிர்ப்புக்கு பின் வாபஸ் வாங்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் கூட இல்லாத சட்டங்கள் இன்று பிஜேபி ஆட்சியில் இருப்பது ரொம்பவே ஆபத்தானது. போராளிகளை ஒடுக்க நினைக்கும் இது போன்ற சட்டங்களை வாய் மூடிக்கொண்டு மவுனமாக இருக்கும் அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபடும் நபர்களை உரிய ஆதாரங்கள் இருந்தால் தண்டியுங்கள். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களுக்கு ஆதரவாக போராடும் போராளிகளை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது இந்த நாட்டுக்கு ஆபத்தை தான் உண்டாக்கும். இந்த சட்டத்தில் நாளை எவர் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.
அநீதிக்கு எதிராக நீதி கோரி குரல் கொடுப்போம். இன்று நடக்கும் கருத்தரங்கில் திரளாக கலந்து கொள்வோம் வாருங்கள் தோழர்களே !