தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை, Non-Governmental Organization (NGO), Chennai.

வியாபாரிகளின் ஒற்றுமைக்காவும் வளர்ச்சி பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பெற வேண்டியும்

ஆன் லைன் வர்த்தக அரக்கனிடம் இருந்து நமது வணிகர்களை காப்பதே நமது இலக்கு..

ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம்......

01/01/2025
*தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை*தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் சுதேசி நாயகன் ஐயா தா. வ...
10/09/2024

*தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை*

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் சுதேசி நாயகன் ஐயா தா. வெள்ளையன் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த வணிகர்களுக்கும் பேர் இழப்பாகும் அன்னாரை இழந்து வாடும் தமிழக வணிகப் பெருமக்களுக்கு தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களில் ஐக்கிய பேரவை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு
M Md அராஃபத்
மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை.

21/07/2024

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
2011 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்த பிறகு 2021 வரை சென்னை மக்கள் மட்டும் அல்லாது தமிழகம் முழுவதும் ரவுடிகள் கலாச்சாரம் அறவே இல்லாமல் இருந்தது

திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த மூன்று ஆண்டுகளில் ரவுடிகள் நடமாட்டம் மற்றும் அல்லாது அவர்களின் அராஜகம் மிக அதிகமாக உள்ளது அதற்கு எடுத்துகாட்டு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அருமை அண்ணன் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போவதை பார்த்தால் சாமானிய மக்கள் உயிர் மீது அச்சம் கொள்ளும் அளவுக்கு ரவுடிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு இருக்கிறது

அதிலும் அந்த ரவுடிகளால் பாதிக்கபட கூடியது பெரும்பாலும் பெரும் முதலாளிகளும் வியாபாரிகளும் தான் அதிலும் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பழைய பொருள் வியாபாரிகள் ரவுடி மாமூல் கொடுக்காமல் பொருட்களை வெளியில் எடுத்து வர முடியாத அவள நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது

ஆளும் திமுக அரசு வெறும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை மட்டும் விரட்டி பிடித்து தப்பித்து கொள்ள நினைக்காமல் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க தவறினால் அமைதி பூங்காவாக திகழும் தமிழகம் ரவுடிகளின் சொர்க்க பூமியாக திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

எனவே தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மரியாதைக்குரிய திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் தனி கவணம் செலுத்தி தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் ரவுடிகள் கலாச்சாரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து

தமிழக மக்கள் நிம்மதியாக வாழவும் தமிழ்நாடு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை எந்த தடங்களும் இன்றி சுதந்திரமாக செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை சார்பாக தமிழக அரசுக்கு கோறிக்கை வைக்கப்படுகிறது.

இப்படிக்கு
M Md அராஃபத்
நிறுவனர்/ மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share