23/05/2026
அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்கள், மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் Rajmohan திரு. ராஜ்மோகன் அவர்களை நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து மடல் மற்றும் சிறப்பு நூலை நினைவுப் பரிசாக வழங்கிய டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்கள், கல்வித்துறையைச் சார்ந்த பல்வேறு பொதுநல கருத்துகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார். குறிப்பாக, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துதல், தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்தல், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்வது போன்ற முக்கிய கோரிக்கைகளும் அமைச்சர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.
மேலும், கடந்த 24.01.2026 அன்று, தனது தலைமையிலான அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து Tamilaga Vettri Kazhagam தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்கள் நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டார்.அந்த தருணம் குறித்த உரையாடல் இருவருக்கும் இடையே ஆக்கபூர்வமான மற்றும் மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது.
மக்கள் நலன், கல்வி முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் டாக்டர் கலைமகன் எஸ். வெங்கடேசன் அவர்களின் இந்த சந்திப்பு, சமூக சேவையிலும் கல்வி வளர்ச்சியிலும் மேலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.