Kshatriyas - The Ruler

Kshatriyas - The Ruler Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kshatriyas - The Ruler, Community Center, Chennai.

சாமி நாகப்பன் படையாட்சி சிலை அவமதிப்பு — வன்மையான கண்டனம்!சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் வெண்கலச் சிலை குப்பைக் கிடங்...
25/08/2026

சாமி நாகப்பன் படையாட்சி சிலை அவமதிப்பு — வன்மையான கண்டனம்!

சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் வெண்கலச் சிலை குப்பைக் கிடங்கு போல மாற்றப்பட்டது ஏன்?

மயிலாடுதுறை நகராட்சியின் நிர்வாக முடிவா? அல்லது புதிய அரசியல் நிர்வாகத்தின் நவீன அணுகுமுறையா?

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடிய முன்னோடி சத்தியாகிரகப் போராளியான சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் நினைவைப் போற்ற வேண்டிய நிலையில், அவரது வெண்கலச் சிலையை குப்பைக் கிடங்காக வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வரலாற்றை அவமதிக்கும் செயலுமாகும்.

சிலையை உடனடியாக உரிய மரியாதையுடன் பாதுகாக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மயிலாடுதுறை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ஜனநாயக ரீதியிலும் சட்டப்பூர்வமான வழிகளிலும் எங்களது அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் வரலாற்றையும் தியாகத்தையும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்மையாகக் கண்டிக்கிறோம்!
வரலாற்றை மதிப்போம் — தியாகிகளைப் போற்றுவோம்!

Mayiladuthurai
District Police

படங்கள் மற்றும் பதிவு : kshatriyas

2கோடி வாக்காளர்களும் ஆதரித்தால் கூட சாத்தியமா என்பது தெரியாது. அப்படி ஆதரிக்க வேண்டுமானால் திருடிய வன்னிய அறக்கட்டளைகளை ...
24/08/2026

2கோடி வாக்காளர்களும் ஆதரித்தால் கூட சாத்தியமா என்பது தெரியாது.

அப்படி ஆதரிக்க வேண்டுமானால் திருடிய வன்னிய அறக்கட்டளைகளை திருப்பிகொடுக்க வேண்டும்.

சாதிய வன்மத்தை விதைப்பதை விட வேண்டும்.

சகோதர சமுதாயத்தை மதிக்க வேண்டும்.

நீங்கள் பொதுவாக பேசினாலும் உங்கள் தொண்டர்கள் அதை பாலோ செய்ய வேண்டும்.

அது நடக்குமானால் ஆட்சியை பிடிக்கலாம்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணா!மானமும் ரோசமும் மனிதனுக்கு முக்கியம் என்றால் வன்னியர் சமுதாய மக்கள் வாழ்க்கைதரம் உயர வேண்டும்...
22/08/2026

பாரதி கண்ட புதுமைப் பெண்ணா!
மானமும் ரோசமும் மனிதனுக்கு முக்கியம் என்றால்

வன்னியர் சமுதாய மக்கள் வாழ்க்கைதரம் உயர வேண்டும் என்று முனைவர் சௌமியா நினைக்கிறார் என்றால்

200 லட்சம்கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்துவாரியம் செயல்படுத்தி பல திட்டங்களை இந்த மக்களுக்கு செயல்படுத்த சட்டமன்றத்தில் குரல்கொடுப்பாரா?

அநீததிக்கெதிராக குரல் கொடுப்பவரானால் 2.5 லட்சம்கோடி மதிப்புடைய தின்டிவனத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையில் இந்த சமுதாய மக்களுக்கு இலவச கல்வி கொடுக்க அறிவிப்பு செய்வாரா?

வேடதாரிகளில் இவரும் ஒருவரா? அல்லது பாரதி கண்ட புதுமைப்பெண்ணா என்பதை பார்ப்போம்!

தோமல் வெங்கடப்ப நாயக்கர் வர்த்தகம் செய்ய வந்த  ஆங்கிலேயர்களுக்கு புது நகரம் அமைக்க தனது கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பகுத...
22/08/2026

தோமல் வெங்கடப்ப நாயக்கர் வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களுக்கு புது நகரம் அமைக்க தனது கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பகுதியை கொடுத்து உதவினார், அதற்கு கைமாறாக அந்த புதிய நகரத்திற்கு தனது தந்தையின் பெயரான "சென்னப்ப நாயக்கர் பட்டினம்" என பெயரை ஆங்கிலேயர்கள் வைத்தனர். அந்த சென்னப்ப நாயக்கர் பெயராலேயே சென்னப்ப நாயக்கர் பட்டினம் உருவானது.

நகரத்தை உருவாக்க இடம் கொடுத்து நகரம் உருவாக பெரும் கஷ்டப்பட்ட அந்த மண்ணின் பூர்வகுடி மக்களான வன்னியர்களே என்பது வரலாறு. வரலாற்றை பாதுகாப்போம்.

சென்னப்ப நாயகரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்!

#சென்னப்பநாயகர்

வாழ்வாங்கு வாழ்ந்த இனம் எதிர்கால தலைமுறை வாழமுன்னோர்கள் விட்டுச்சென்ற 200 லட்சமம்கோடி மதிப்புடைய அறக்கட்டளை களைஅபகரித்து...
21/08/2026

வாழ்வாங்கு வாழ்ந்த இனம்
எதிர்கால தலைமுறை வாழ
முன்னோர்கள் விட்டுச்சென்ற 200 லட்சமம்கோடி மதிப்புடைய அறக்கட்டளை களை
அபகரித்து வைத்தவர்களை கேட்க நாதியற்ற இனமாய் கிடப்பது வேதனையே!

வந்தவர்களை வாழ வைத்த இனம் இன்று அவர்களிடமே கையேந்தும் நிலை.

ஒற்றுமை இன்றி இனம் இல்லாதவர்களை தலைவனாய் ஏற்றதன் கொடுமை
எம் இனத்தின் எதிர்கால சந்ததிகள் வாழ்க்கை வீணாய் போகிறது.

என்று மாறுமோ இந்த இனத்தின் சாபம்.

என்று தணியுமோ இந்த வேதனை!

#வன்னியர்

200 லட்சம் கோடி மதிப்புடைய சுமார் 240 அறக்கட்டளைகளை உள்ளடக்கிய வன்னியர் பொதுச்சொத்துவாரியம் ஏன் தமிழக அரசு செயல்படுத்தாம...
20/08/2026

200 லட்சம் கோடி மதிப்புடைய சுமார் 240 அறக்கட்டளைகளை உள்ளடக்கிய வன்னியர் பொதுச்சொத்துவாரியம் ஏன் தமிழக அரசு செயல்படுத்தாமல் பெயரளவுக்கு வைத்துள்ளார்கள் என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு தெரியுமா?

இதை யார் தடுக்கிறார்கள் என்று தெரியுமா? ஏன் தடுக்கிறார்கள் என்று தெரியுமா?

இதுவரை 118 வன்னிய அறக்கட்டளைகளை உறுதி படுத்தி அந்த அறக்கட்டளைகள் எல்லாம் வன்னியர் பொதுசொத்துவாரியத்தின் கீழ் செயல்பட வேண்டும். அந்த அறக்கட்டளைகள் மூலம் வன்னிய சமுதாய மக்களுக்கு தேவையான உதவிகளையும் திட்டங்களையும் இந்த 118 அறக்கட்டளைகள் செய்ய வேண்டும் என்று தான் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இதை சட்டப்படி போராடி 44-வது சட்டத்தை ஏற்படுத்தி பாதுகாப்பாக யாரும் அபகரிக்காதவண்ணம் தமிழக அரசும் எடுக்காதவண்ணம் வாரியத்தை பாகாப்பானதாக ஏற்படுத்தி கொடுத்தவர் ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்களே.

இந்த 118 அறக்கட்டளையில் முக்கியமானவை

1) பி.டீ.லி செங்கல்வராய அறக்கட்டளை (1லட்சம் கோடிக்கு மேல் மதிப்பு)

2) கந்தசாமி கண்டர் அறக்கட்டளை (1லட்சம் கோடிக்கு மேல் மதிப்பு)

3) தின்டிவனம் வன்னியர் கல்வி அறக்கட்டளை (லட்சம் கோடிக்கு மேல் மதிப்பு). வன்னியர் என்ற பெயரை நீக்கினால் அறக்கட்டளையில் சேர்க்காமல் குடும்ப பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என்ற காரணத்தால் தான் வன்னியர் கல்வி அறக்கட்டளை இராமதாசு கல்வி அறக்கட்டளையாக பெயர் மாற்றப்பட்டது.

4) சிவகிரி ஜமீன் அறக்கட்டளை சொத்துக்கள் மற்றும் சுவீஸ் வங்கியில் இருக்கும் பணத்தின் மதிப்பு (4.5 லட்சம் கோடிக்கு மேல் 2011 இன்படி)

5) ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை 2228. ஏக்கர் நிலம் ECR இல் உள்ளது. நிலத்தின் மதிப்பு மட்டுமே (2.5 லட்சம்கோடிக்கு மேல்) இந்த அறக்கட்டளை அறநிலைத்துறை 1950 களிலேயே தன் கட்டுபாட்டில் எடுத்துக்கொண்டது. இன்னும் வாரியத்தில் ஒப்படைக்கவில்லை.

6) தென்காசியில் 700 ஏக்கருக்கு மேல் இருக்கும் அறக்கட்டளை.

இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

தன் இனத்தின் மதிப்பும் பெருமையும் வலிமையையும் உடமையையும் தெரிந்துகொள்ளாத இந்த இனம் இன்னும் கையேந்திக்கொண்டிருக்கிறது.

போர்குணம் கொண்ட இனம் அரசாட்சி முறை ஒழிந்த பிறகு விவசாயிகளாக மாறி பொறுமையை தன் நிலையாய் ஏற்ற பிறகு கேட்க நாதியற்ற இனமாய் மாறியது.

இனமே இல்லாத திருட்டுக்குணத்தை கொண்ட தலைமையை அரசியலில் ஏற்றதால் இனி இனமே இல்லாமல் செய்ய வழிவகுத்துவிட்டனர்.

இனம் காக்க இன மக்களின் மானத்தை காக்க உரிமைகளையும் நம் உடமைகளையும் பெற்றிட போராடி மீட்டெடுப்போம்!

உணர்வுள்ள ஒவ்வொரு மக்களும் அதிகம் ஷேர் செய்து வன்னிய சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வருங்கால சந்ததிகளுக்கு உதவியை உரிமையை பெற்றுக்கொடுப்போம்!

சகோதரத்துவத்துடன் வாழ்ந்துடுவோம்!

#வன்னியவள்ளல்கள்

 #சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள்சுதந்திர காற்றை சுவாசிக்க பல உயிர்களின் மூச்சுக்காற்று நின்றது. அதில் வன்னிய சமுதாயத்தின்...
15/08/2026

#சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள்

சுதந்திர காற்றை சுவாசிக்க பல உயிர்களின் மூச்சுக்காற்று நின்றது. அதில் வன்னிய சமுதாயத்தின் பங்கு மிகப்பெரியது. சுதந்திர தினத்தன்று சுதந்திரத்திற்காக மிகப்பெரிய பங்காற்றிய மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு மறைக்கப்பட்ட தலைவர்களின் வீரத்தையும் புகழையும் வரலாற்றிலும் நினைவு கூர்தலிலும் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் போராடி போராடியே பெறவேண்டிய சூழ்நிலைகளைத்தான் தமிழக அரசு இதுவரை வைத்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

நேசம் கொண்டு தேசம் போற்றும் பொன்னாளில் சமுதாய ஒற்றுமை காப்போம்! சரித்திரம் படைப்போம்! வந்தே மாதரம் வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்.அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய 80-வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

.

2 லட்சம்கோடி மதிப்புடைய ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை யின் 2228 ஏக்கர் நிலம் ECR இல் உள்ளது. சுமார் 80 ஏக்கர் நிலம் தம...
11/08/2026

2 லட்சம்கோடி மதிப்புடைய ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை யின் 2228 ஏக்கர் நிலம் ECR இல் உள்ளது.

சுமார் 80 ஏக்கர் நிலம் தமிழக அரசு எடுத்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 10கோடி லிட்டர் குடிநீரை சுத்தப்படுத்த பயன்படுத்துகிறது.

ஆனால் வாடகை எதுவும் இல்லை. சென்ற திமுக ஆட்சியிலும் இதே நிலைதான்.

இந்த அறக்கட்டளையை அறநிலைத்துறை தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது. இந்த அறக்கட்டளையை வன்னியர் பொதுச்சொத்து வாரியத்திடம் இன்னும் அறநிலைத்துறை ஒப்படைக்கவில்லை.

இதை போராடி மீட்க அனைத்து வன்னிய சமுதாய மக்களும் வருவார்களா?

நாம் இந்த இடத்தில் தீம் பார்க் (Theme park), வணிக வளாகம், தியேட்டர், கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் இப்படி அறக்கட்டளை மூலம் பயன்படுத்தினால் இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு குடும்பமும் பல லட்சம் வருமானம் பெற முடியும்.

இதை செய்துகாட்டக்கூடிய ஒரு ஒளுமை நம் ஐயா சிஎன்ஆர்.

இதை செய்ய வைக்கக்கூடிய ஆளுமை நாம் தான்.

சிந்திப்பீர்களா?

#ஆளவந்தார்நாயகர்அறக்கட்டளை #

விவசாய உற்பத்தியில் பெயர்பெற்ற சமுதாயம் வன்னியர் சமுதாயம்! வீரத்தை மட்டுமே அடையாளமாக கொண்டு அரசர்களாக தளபதியாக போர்வீரனா...
06/08/2026

விவசாய உற்பத்தியில் பெயர்பெற்ற சமுதாயம் வன்னியர் சமுதாயம்!

வீரத்தை மட்டுமே அடையாளமாக கொண்டு அரசர்களாக தளபதியாக போர்வீரனாக வாழ்ந்த இந்த சமுதாயம் அரசாட்சி முறை ஒழிக்கப்பட்டபிறகு

பல ஆயிரம் /நூறு ஏக்கர் நிலங்களை வைத்திருந்த ஒவ்வொரு வன்னிய குடிமக்கள் பிறகு விவசாயத்தை செய்ய ஆரர்பித்தனர்.
விவசாயத்தை செய்து அனைவருக்கும் வாழ்வாதாரத்தை கொடுத்த இனம்

பிறகு நிலஉச்சவரம்பு சட்டத்தால் தன்னுடைய பல நூறு ஏக்ககர் நிலங்களை இழந்து குறைந்த அளவே வவைத்தனர்.

இதில் ஏற்கனவே பலஆயிரம் ஏக்கர் நிலங்களை அறக்கட்டளைகளாக வைத்திருந்த. வன்னிய சமுதாய வள்ளல்கள் அந்த நிலங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன.

இதில் ஒரு எடுத்துக்காட்டு தான் ஆயிரம்காணி ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை OMR சென்னையில் இருப்பது. மொத்தம் சுமார் 2128 ஏக்கர் நிலம் இந்த அறக்கட்டளையில் இருக்கிறது. இப்படியே சொல்லலாம்.

சுதந்திரப் போராட்ட வீரமங்கை கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்கள் பெயரில் விவசாய உற்பத்திக்காக விருது அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வன்னிய சமுதாய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இனத்தின் உரிமையை மீட்பதே லட்சியம்!

200 லட்சம் கோடியை மீட்பது நிச்சயம்!

TVK Vijay

 #200லட்சம்கோடிமீட்கப்படுமா?200 லட்சம்கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்துவாரியம் சட்டப்படி 44-வதுசட்டத்தை ஐயா சிஎன்ஆர்...
26/07/2026

#200லட்சம்கோடிமீட்கப்படுமா?

200 லட்சம்கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்துவாரியம் சட்டப்படி 44-வதுசட்டத்தை ஐயா சிஎன்ஆர் உருவாக்கி பாதுகாத்து வைத்தும் வாரியம் ஏற்படுத்தியது எதற்காக? சும்மா தூங்கவா?

அன்புமணியும் இராமதாசும் ஏன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுடன் நெருக்கம் காட்டுகிறார் என்பது புரிகிறதா?

200 லட்சம்கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்து வாரியம் செயல்பட்டால் இராமதாசின் 2.5 லட்சம்கோடி மதிப்புடைய வன்னியர் கல்வி அறக்கட்டளை வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

அது நடக்க கூடாது என்று மொத்த வன்னியர் பொதுச்சொத்து வாரியத்தையே முடக்கி வைத்துள்ளனர்.

வன்னிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் எந்த கல்வி உதவியும் பெறக்கூடாது என்ற எண்ணம். என்ன நரித்தனம் இது.

உண்மையாக வன்னிய சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற உணர்விருந்தால் ஒன்றிணைந்து போராடுவோம்.

வன்னியர் பொதுச்சொத்து வாரியம் ஐயா சிஎன்ஆரின் வழிகாட்டுதலில் செயல்பட்டால் மட்டுமே நாம் கீழ்கண்டவற்றை செயல்படுத்த முடியும்.

1) வன்னிய சமுதாய மாணவர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் இலவச IAS academயை உருவாக்கி அரசு உயர் பதவிகளில் உட்கார வைக்க முடியும்.

2) மாணவர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி கல்வி கடன் வழங்க முடியும்.

3) தொழில் தொடங்குபவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்.

4) விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் ஒவ்வொருதொகுதியிலும் நவீன விவசாய ஆராய்சி அறிவுரை மையத்தை ஏற்படுத்துதல்.

5) வன்னிய சமுதாய முன்னோர்கள் மற்றும் வள்ளல்கள் பற்றிய ஒவ்வொருதொகுதியிலும் வரலாற்று நூலகம் அமைத்தல்.

6) நிகர்நிலை பலல்கலைகழகம் ஏற்படுத்துதல்

7) ஒவ்வொரு ஊராட்சியிலும் வணிக வளாகம் ஏற்படுத்தி வணிகம் செய்ய உதவுதல்

இப்படி பல செய்ய வேண்டுமானால்

சும்மா தூங்கி கொண்டிருக்கும் 200 லட்சம்கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்துவாரியமும் வன்னிய சமுதாய மக்களும் தூக்கத்திலிருந்து எழுந்து உரிமைக்காக அறவழிப்படி சட்டப்படி போராடுவோமா?

வன்னிய சமுதாய மக்களிடம் சத்ரிய குணமும் அடங்கிபோய்விட்டது!

சாணக்கிய தனமும் இல்லாமல் போய்விட்டது!

அதனால் இடஒதுக்கீட்டுக்காக பிச்சையெடுக்கிறோமே தவிர உரிமையை மீட்டெடுக்க திராணியற்றவர்களாக இருக்கிறோம்.

சூடு சொரணையில்லாத இனமாக மாறிவிட்டோமா? அல்லது 200 லட்சம் கோடி வன்னிய சொத்தை மீட்டெடுத்து ஒவ்வொரு வன்னியசமுதாய குடும்பத்துக்கும் வருடம்தோறும் 1கோடி வருமானத்தை பெற போராடுவோமா?

#வன்னியர்பொதுச்சொத்துவாரியம்

Address

Chennai
600003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kshatriyas - The Ruler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share