தெட்சணமாறா நாடார் சங்கம்

  • Home
  • India
  • Chennai
  • தெட்சணமாறா நாடார் சங்கம்

தெட்சணமாறா நாடார் சங்கம் இது நாடார் மக்கள் முன்னேற்றத்திற்கா?

விதைப்பும் அருமை 🥰 இயற்கையின் வளர்ப்பும் அருமை 🙏
16/07/2026

விதைப்பும் அருமை 🥰 இயற்கையின் வளர்ப்பும் அருமை 🙏

01/07/2026

தேரிக்காட்டு ரயில்
#தேரிக்காட்டு

08.04.2026இன்று மதியம் 12:00 மணி அளவில், சென்னை காவல்துறை தலைவர் அலுவலகத்தில், ஆலங்குளம் அசம்பாவிதம் - துப்பாக்கி சூடு ச...
08/04/2026

08.04.2026

இன்று மதியம் 12:00 மணி அளவில், சென்னை காவல்துறை தலைவர் அலுவலகத்தில், ஆலங்குளம் அசம்பாவிதம் - துப்பாக்கி சூடு சம்பந்தமாக, *காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது பணி நீக்கம் மற்றும் கைது செய்ய கோரி*,

💙*பெருந்தலைவர் மக்கள் கட்சி* தலைவர் திரு.NR தனபாலன்,

💚*நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம்* தலைவர் திரு.ஆனந்த ராஜ்,

💙*நாடார் மகாஜன சங்கம்* மேன்சன் செயலாளர் திரு. AVS மாரிமுத்து,

💚சென்னை மண்டல செயலாளர் திரு. சந்திரமோகன்,

💙இளைஞர் அணி மாநில தலைவர் திரு.SJ மகா கிஃப்ட்சன்,

💚*TSS நாடார் சங்க* தலைவர் ஆகியோர் தமிழக DIG அவர்களை சந்தித்து மனு அளித்தனர், கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்...

🔥🔥🔥🔥🔥🔥🔥

நாடாரினத்தின் உரிமைக்குரலாக,முழுநேரமும் ஓயாது உழைத்த தலைவர் கராத்தே செல்வின் நாடார் வீர வணக்க நிகழ்வு வருகிற மார்ச் 26 அ...
21/03/2026

நாடாரினத்தின் உரிமைக்குரலாக,
முழுநேரமும் ஓயாது உழைத்த தலைவர் கராத்தே செல்வின் நாடார் வீர வணக்க நிகழ்வு வருகிற மார்ச் 26 அன்று நெல்லை பெருமாள்புரத்தில் நடக்க இருக்கிறது.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னன்சிவந்தி ஆதித்தனர் அவர்களின் துணைவியார் S.மாலதி ஆதித்தன் இயற்கை எய்தினார் நாடார் சங்கம்...
13/03/2026

பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னன்
சிவந்தி ஆதித்தனர் அவர்களின் துணைவியார் S.மாலதி ஆதித்தன் இயற்கை எய்தினார் நாடார் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

15/11/2025

தேவர் கட்டுக்கதைகள் கட்டுடைக்கப்படுகிறது🤭

1937ல் முத்துராமலிங்க தேவரின் அரசியல் நிலை.!

அப்போது அவருக்கு வயது 29.

காமராஜருக்கு 34.

அப்போது சென்னை மாகாண சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது.

ஜஸ்டில் கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் ராஜாவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அவரை எதிர்த்து யாரை நிறுத்துவது என்று தெரியவில்லை.

த.நா காங்கிரஸ் கமிட்டி என்னையும் காமராஜரையும் ராமநாதபுரத்திற்கு போய் யாரையாவது ஆளை கண்டுபிடித்து தேர்தலில் நிறுத்த அனுப்பி வைத்தது.

முதலில் எங்களுக்கு யாரும் கிடைக்கவில்லை .

பிறகு உ.முத்துராமலிங்க தேவர் என்ற இளைஞர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் தன் தந்தை கொடுமைகளை எதிர்த்ததால் அவருக்கு அங்கே செல்வாக்கு உள்ளது என்று வெளிப்பட்டோம்.

அவரை சந்தித்தோம் முதலில் அவர் ராமநாதபுரம் ராஜாவை எதிர்க்க மறுத்தார்.

நீண்ட நேரம் அவரோடு விவாதித்து அவரை சம்மதிக்க வைத்தோம்.

இதற்கு முன் அரசியலில் ஈடுபடாதவர்

ஆயினும் உ.முத்துராமலிங்க தேவர் ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்து வெற்றி பெற்றார்.

இதை பதிவு செய்தவர் முன்னால் எம்.பியான பி.ராமமூர்த்தி அவர்கள்

இந்த நூலில் ராமமூர்த்தி அவர்கள் முத்துராமலிங்க தேவரை நானும் காமராசரும் தான் பேசி விவாதம் செய்து தேர்தல் அரசியலுக்கே அலைத்து வந்தோம் என்கிறார் .

ராமமூர்த்தி அவர்கள் நாடார் சமூகத்தவர் அல்ல.

அப்போது தேவர் அரசியலுக்கே வராத இளைஞர் என்கிறார்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விடயங்கள்.

ஒன்று காமராஜரின் நிலை

மற்றொன்று முத்துராமலிங்க தேவரின் நிலை.

🔥 காமராஜர் காங்கிரஸ் கமிட்டியால் தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரத்தில் இருக்கிறார்.

🔥 முத்துராமலிங்க தேவர் காமராஜரால் தேர்வு செய்யப்பட்ட வேண்டிய நிலையில் , அரசியலில் முன் அனுபவம் இல்லாத இளைஞராக இருந்திருக்கிறார் .

முத்துராமலிங்க தேவரை தேடி அடையாளம் கண்டுபிடிக்க வேண்டிய அளவு தான் தென் தமிழகத்தில் அவரது செல்வாக்கே இருந்திருக்கிறது.

ஆக தேவரால் காமராஜர் இல்லை காமராஜரால் தான் தேவர் என்பது நீருபனமாகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த காமராசருக்கு ஆட்டுக்குட்டிகளை வாங்கி தந்து அரசியல் வாழ்க்கை கொடுத்தார் என்று பரிசளித்தார் கொஞ்சம் கூட நாகூசாமல் பேசுபவர்கள் இனியாவது திருந்தட்டும்.

நூல்: விடுதலை போரும் திராவிட இயக்கமும்.

முதற்பதிப்பு:1983

இரண்டாம் பதிப்பு:1987

எழுதியவர்:மு.நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராமமூர்த்தி

நன்றி 🙏

மு.பிரசன்னகுமார்

நிறுவனத் தலைவர்

காமராஜர் லட்சிய பேரவை

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை...
11/11/2025

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை.

முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.

மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.

காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை..!"

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர்.

காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் அரசியல் தலைகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை )

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர்.

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..
எங்களால் எப்படி....?"

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர்.

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த வருடம் 50 கோடி.

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல.

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.

அதோ..

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.

ஓடினார் முதல்வர்....

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!

இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை !
ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.

Benitto kumar

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நமது நாடார் சமுதாய ரத்த உறவான K.T. பிரேம்குமார் ஒரு குறிப்பிட்ட ( தேவேந்திர குல வேளாளர்...
03/11/2025

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நமது நாடார் சமுதாய ரத்த உறவான K.T. பிரேம்குமார் ஒரு குறிப்பிட்ட ( தேவேந்திர குல வேளாளர் ) சமுதாயத்தால் தாக்கப்பட்ட செய்தியை வலைதளங்கள் மூலமாக அறிய முடிகிறது அதேபோல் கோவை சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் நமது சமுதாய நபருக்கு அடக்கு முறையும் நெருக்கடிகளும் அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது!
இன்று நடக்கும் இந்த பிரச்சனைகளுக்கு அறிவானந்த பாண்டியன் அவர்கள் வெங்கடேஷ் பண்ணையார் அவர்கள் கராத்தே செல்வின் நாடார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைத்திருக்கும் இன்று ஆளுமை மிக்க நமது சமுதாய தலைவர்கள் இல்லாததாலேயே நம் நாடார் சமுதாயம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தெட்சணமாறா நாடார் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share