செங்குந்தர் செய்திகள்

  • Home
  • India
  • Chennai
  • செங்குந்தர் செய்திகள்

செங்குந்தர் செய்திகள் நெசவாளர் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தெரிய படுத்துகிறது நமது செங்குந்தர் செய்தி நெசவாளர்கள் ஒற்றுமை வெல்க

உதயமானது *திருப்பூர் குமரன் பேரவை* *அரசு பதிவு எண் - 64/2026**தலைவர்*திரு. சு. ப. ஸ்ரீதர்குமார்*துணை தலைவர்*திரு. ர. அரு...
21/07/2026

உதயமானது

*திருப்பூர் குமரன் பேரவை*
*அரசு பதிவு எண் - 64/2026*

*தலைவர்*
திரு. சு. ப. ஸ்ரீதர்குமார்

*துணை தலைவர்*
திரு. ர. அருண்குமார்

*பொதுச் செயலாளர்*
திரு. பெ. கராத்தே மணி

*துணை பொதுச் செயலாளர்*
திருமதி. விஜயசாந்தி

*பொருளாளர்*
திரு. ப. கார்த்தி

பேரவையின் நோக்கங்களாக

1) அரசியல் கலப்பின்றி அனைத்து பகுதியில் வசிக்கும் நெசவாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்குள் ஒற்றுமை
சகோதரத்துவம் பேண உதவி செய்தல்

2) பொதுமக்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ உதவி வழங்குதல்

3) பொதுமக்களின் வாழ்க்கைதரம் உயர அவர்களுக்கு குடிசை தொழில் பயிற்சி தர உதவி செய்தல்

5) சுற்றுச்சூழல் பாதுகாக்க அரசின் அனுமதி பெற்று மரங்கள் நட்டு பராமரித்தல்,

6) அரசின் அனுமதி பெற்று அரசு பள்ளிகளில் மற்றும் கோவில்களில் மராமத்து பணிகள் செய்ய உதவிடுதல்

7) சுனாமி, கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்க உதவி செய்தல்

8)இரத்த தானம், கண்தானம் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

18/06/2026
14/06/2026

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அண்ணன் திரு *ஆதவ் அர்ஜுனா* அவர்களை கல்வராயன் மலையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சந்தித்து *மாபெரும் மனிதர்நேரு எனும் புத்தகத்தை* வழங்கினேன். மேலும் மாண்புமிகு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.*இரா.ராகேஷ்,MLA,* அவர்களின் முன்னிலையில் சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் *சின்னசேலத்தார் ஜெய்கணேஷ்* ஆகிய நான் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன். கோரிக்கை விபரம்..

1) சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியை *நகராட்சியாக* தரம் உயர்த்த கோரியும்..

2) சின்னசேலம் மெயின் ரோட்டில் உள்ள நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணியில் பாதி அளவு போடப்பட்டிருக்கும் வடிகால் வாய்க்காலை மீதமுள்ள பகுதிக்கும் *வடிகால் வாய்க்கால்* அமைத்து தரக்கோரியும்..

3) மேலும் சின்னசேலம் பஸ் நிலையம் முதல் *மூங்கில்பாடி_ரோடு சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல்* மற்றும் சாலையின் *இருபுறமும் வடிகால்* அமைத்து தரக் கோரியும்..

4) சின்னசேலம் பெரிய *ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தக்* கோரியும்..

சின்னசேலம் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் மேலும் சில கோரிக்கைகளை மனுவாக அளித்தேன். இதில் கள்ளக்குறிச்சி கிழக்கு தவெக மாவட்ட செயலாளர் திரு.*பரணிபாலாஜி* அவர்கள் கள்ளக்குறிச்சி மேற்கு தவெக மாவட்ட கழகச் செயலாளர் திரு.*பிரகாஷ்* அவர்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. *அருள் விக்னேஷ்* ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு அரசியலில் திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டு செங்குந்தர் கைக்கோளர்  சமுதாயத்தை சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்ம...
10/05/2026

தமிழ்நாடு அரசியலில் திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டு செங்குந்தர் கைக்கோளர் சமுதாயத்தை சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக உள்ள 1.திருத்தணி
2.சோளிங்கர்
3.காஞ்சிபுரம்
4.ஆரணி
5. செய்யாறு
6.உத்திரமேரூர்
7. திருச்செங்கோடு
8.ஈரோடு கிழக்கு
9.குமாரபாளையம்
10.திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதியில் புறக்கணித்தது அதன் விளைவாக இன்று எதிர் கட்சி வரிசையில் உள்ளது இனிமேலாவது சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் தமிழ்நாடு முழுவதும் உள்ள செங்குந்தர் கைக்கோளர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே.

30/04/2026

செங்குந்த முதலியார்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when செங்குந்தர் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share