DYFI Virugambakkam

DYFI Virugambakkam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Virugambakkam, Youth Organization, Chennai.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருநர் திருத்த சட்டம் 2026 ஐ திரும்ப பெற வலியுறுத்தி DYFI -SFI - AIDWA விருகம்பாக்கம் பகுதி...
29/03/2026

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருநர் திருத்த சட்டம் 2026 ஐ திரும்ப பெற வலியுறுத்தி DYFI -SFI - AIDWA விருகம்பாக்கம் பகுதி சார்பாக கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை DYFI விருகம்பாக்கம் பகுதி செயலாளர் தோழர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் தோழர் சுந்தர்ராஜ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் என்.குமரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பகுதி செயலாளர் தோழர் விஜயகுமாரி மற்றும் திருநர் மக்களின் செயற்பாட்டாளர் தோழர் விஸ்வராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக இந்திய மாணவர் சங்க தோழர் ஆகாஷ் நன்றி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் DYFI -SFI - AIDWA தோழர்கள் மற்றும் கோயம்பேடு பகுதி திருநர் மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் ஈரான் அதிபர் கமேனி மற்றும் அவர் குடும்பத்தின...
01/03/2026

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் ஈரான் அதிபர் கமேனி மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் அஞ்சலி செலுத்தி, போர் வேண்டாம் அமைதி வேண்டும் என்று வலியுறுத்தி
அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் - இஸ்ரேல் அரசையும் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருகம்பாக்கம் பகுதி சார்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பகுதி தலைவர் தோழர் சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுதி செயலாளர் தோழர் ராஜ்குமார், தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் தோழர் பாரதி, மாவட்ட பொருளாளர் தோழர் சிந்தன் உள்ளிட்டோர் பேசினர். இறுதியாக விருகைப் பகுதி பொருளாளர் தோழர் சதீஷ் நன்றி உரையாற்றினார்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருகம்பாக்கம் பகுதி சார்பாக காதலர் தினத்தை முன்னிட்டு *" சமத்துவத்திற்கான பாதை- காதல்"* என...
16/02/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருகம்பாக்கம் பகுதி சார்பாக காதலர் தினத்தை முன்னிட்டு *" சமத்துவத்திற்கான பாதை- காதல்"* என்ற தலைப்பில் 15.02.2026 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. தோழர் ரேவதி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இன்று பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு  சாதி மத இன மொழி கடந்து  காதலை போற்றும் வகையில்  இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க...
16/02/2026

இன்று பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு சாதி மத இன மொழி கடந்து காதலை போற்றும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருகம்பாக்கம் பகுதி குழு சார்பாக பொது மக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கப்பட்டது

**தோழர்களே!* பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு  வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  எம்ஜிஆர் நகர் மார்க்கெட் முனையில்  ...
13/02/2026

**தோழர்களே!*

பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகர் மார்க்கெட் முனையில் பொதுமக்களுக்கு காதலர் தின விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்வு என்பது நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - விருகம்பாக்கம் பகுதி

DYFI விருகம்பாக்கம் பகுதிகுழு சார்பாக டாக்டர். காணு நகரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகள்
25/01/2026

DYFI விருகம்பாக்கம் பகுதிகுழு சார்பாக டாக்டர். காணு நகரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகள்

23/01/2026

DYFI pongal Festival

DYFI MGR Nagar Mettu Kilai and MGR Nagar Kilai

DYFI எம்ஜிஆர் நகர் மேட்டு கிளை மற்றும் எம்ஜிஆர் நகர்  கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
23/01/2026

DYFI எம்ஜிஆர் நகர் மேட்டு கிளை மற்றும் எம்ஜிஆர் நகர் கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

DYFI காந்தி நகர் கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
23/01/2026

DYFI காந்தி நகர் கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

DYFI சத்யா நகர் கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.                                                   ...
19/01/2026

DYFI சத்யா நகர் கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 🌾♥️💫 🌾🔥❤️

DYFI கோயம்பேடு கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றthu. பைசன் திரைப்பட புகழ் தோழர் மதன்குமர் அவர்கள் கலந்த...
17/01/2026

DYFI கோயம்பேடு கிளை சார்பாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றthu. பைசன் திரைப்பட புகழ் தோழர் மதன்குமர் அவர்கள் கலந்து கொண்டார். 🌾☘️🍂

Address

Chennai
600078

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Virugambakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share