Aadhisaiva Sivachariyarkal - Trust Seva Sangam 2017 Charitable Trust

  • Home
  • India
  • Chennai
  • Aadhisaiva Sivachariyarkal - Trust Seva Sangam 2017 Charitable Trust

Aadhisaiva Sivachariyarkal - Trust Seva Sangam 2017 Charitable Trust Seva Sangam 2017 Charitable Trust

திரு அர்ஜுன் சம்பத் அவர்களின்‌ தலைமையில் சென்னையில் 03/11/2024 அன்று நடைபெறும் பிராமணர்கள் எதிர்ப்பை எதிர்த்து பிராமணர்க...
03/11/2024

திரு அர்ஜுன் சம்பத் அவர்களின்‌ தலைமையில் சென்னையில் 03/11/2024 அன்று நடைபெறும் பிராமணர்கள் எதிர்ப்பை எதிர்த்து பிராமணர்களுக்கென தனி சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் கூட்டம் மற்றும் பேரணி...

24/07/2024
🏆🏅🥇🥈🥇🏅🥈🥇🏅🏆குழந்தைகள் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெற்றியாளர் அறிவிப்பு இன்று  ஞாயிற்றுக்கிழமை இரவு (07/07/2024) 08  மணிக்கு நம...
07/07/2024

🏆🏅🥇🥈🥇🏅🥈🥇🏅🏆

குழந்தைகள் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெற்றியாளர் அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (07/07/2024) 08 மணிக்கு நம்முடைய *ஸ்ரீ கண்டர் தரிசனம் யூடீப் சேனலில்* அறிவிக்கப்படுகிறது.

https://www.youtube.com/

விவரங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க நம்முடைய *ஸ்ரீ கண்டர் தரிசனம் You tube channel யை subscribe* செய்யவும்.

பங்கு கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் அவரவர் இல்லத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

பரிசுகள் அனைத்தும் *Amazon ஆன்லைனில்* ஆர்டர் செய்து குழந்தைகள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பரிசுகள் கிடைக்க பெற்ற பின் குழந்தைகள் அந்த பரிகளுடன் சேர்ந்த புகைபடத்தை நீங்கள் முன்னதாக வீடியோ அனுப்பிய வாட்ஸ் அப் எண்ணிற்கு ( +918122202017)
அனுப்புமாறு வேண்டுகிறோம்.

🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

குழந்தைகள் கொண்டாட்டம் ஒருங்கிணைப்பு குழு.

🥈🥇🏅🥈🥇🏅🥈🥇🏅

Share your videos with friends, family, and the world

16/04/2024

தெரிந்தவர் வீட்டு பிள்ளை. ஓரளவுக்கு வசதியான குடும்பம். பூணூல் போட்டு ஒரு மாதம் ஆகிறது. வேத பாட சாலையில் சேர்த்து விட்டுள்ளார்கள். முன்னமே தயாரிப்பு செய்து அம்மா அப்பா கூட இருக்க மாட்டோம் என்றெல்லாம் சொல்லி உள்ளார்கள்.

பின் போனில் பேசும்போது உங்க ஞாபகம் வருதுப்பா என்று கூறி உள்ளான்.

அப்படி வரும்போது பெரிய பெரிவாள மனசுல நினைச்சுக்கோப்பா. உடனே அந்த நினைப்பு போய்டும் என்று கூறியுள்ளார்கள். குழந்தை அடுத்த முறை பேசும்போது, அப்பா மறுபடியும் உங்க ஞாபகம் வந்துதுப்பா. நீ சொன்னா மாதிரி பெரிவாள நினைச்சுண்டேன். உடனே அந்த நினைப்பு போய்டுத்து என்று கூறி மகிழ்ந்து உள்ளான்.

சொல்லிவிட்டு அங்கு அவன் சிரிக்க, இங்கு பெற்றோர் அழுகையை அடக்க முடியாமல் , தவிக்க.... வேத சம்ரக்ஷணம் என்பது பிழைப்பு அல்ல.

தியாகம்.

அந்த குழந்தைகள் ஜ்வரம் அல்லது வேறு ஏதாவது உடல் ரீதியான பிரச்சினை வந்தால் கூட அம்மா, அப்பா என்று ஒடி வந்து அரவணைப்பு தேட முடியாது...

அம்மா, அப்பா, அண்ணா, தம்பி அக்கா, தங்கை என்று ஏக்கத்தை முழுக்க.. மோட்டுவளையைப் பார்த்து, பார்த்து👀👀.. வேதம் படிக்கும்..

எல்லோரும்,, எல்லா பண்டிகைகளை குடும்பத்தோடு கொண்டாடும் போது.. இந்த குழந்தைகள்... வேத வாத்யார், வாத்ஸல்யத்தோடு.. அம்மா, அப்பாவை எண்ணி ஏக்கத்துடன்
பாடசாலை குழந்தைகளோடு கொண்டாடும்..

இது போல 12/14 வருடங்கள்...
அப்பப்பா...
நமது சமுதாயத்திற்காக எப்படி பட்ட தியாகம்...

பாடசாலை குழந்தைகள் தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் அவரவர்கள் குடும்பத்தோடு, விரும்பிய வண்ணம், சாப்பிட்டு, உடையணிந்து, படித்து, விளையாடி...
கடைசியாக.. அவர்கள் வசதிக்காக உத்யோகத்தில் சேர்ந்து அல்லது தொழில் செய்து..
சம்பாதித்து.. நல்ல வசதியாக வாழ்க்கை நடத்த வாய்ப்பு உள்ளது.

அவர்கள், தேவை எனில் , அவர்கள் வங்கி களில் லோன் வாங்கி, வீடு, கார் போன்ற வசதிகளை மேம்படுத்தி.. ஸௌகர்யமாக வாழும் வாய்ப்பு மற்றவர்களுக்கு உண்டு.

ஆனால், இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, குருகுலத்தில் வேத அத்யயணம் செய்தவர்கள்... யாருக்காக செய்கிறார்கள்??

நம் சமூகத்திற்காக,

ஒவ்வொரு பிராமணரும் , மிகவும் கட்டாயமாக, வேதம் படித்தே ஆக வேண்டும்.. இல்லை என்றால் அது மிகப்பெரிய தோஷம்.. பாபம்..

வேதம் கற்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் கற்காமல் போவது மட்டுமின்றி... அப்படி பல்வேறு தியாகங்களை செய்து கற்பவர்களை, அதுவும் நம்
சமூகத்திற்காகா கற்பவர்களை.. ..
மரியாதை குறைவாக பார்ப்பது,
அவர்களைப் பற்றிய விமர்சனம் செய்வது..
பெண் கொடுக்க தயங்குவது... இது எல்லாம்.. நமது சமூக சீரழிவுகள்..

இது போன்ற எண்ணற்ற தியாகங்களை புரிந்து கொண்டு, காஞ்சி ஆசார்யாள் சொல்படி, இதைக் காப்பாற்ற பலரும் முன் வந்து, பல தியாகங்களை செய்து தற்போது கூட
தியாகங்களை
செய்யும் வேத பாடசாலை நிர்வாக ட்ரஸ்டிகள்,
வாத்யார்கள், ... பல தர்மவான்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களை வந்தனம் செய்கிறோம்.

அவர்கள் தான் சமூக காவலர்கள்.. தர்மவான்கள்..

வேத
வித்யார்த்தி கள்,.. அவர்கள் பெற்றோர்கள்.. அவர்கள் அனைவருக்கும் நமது வந்தனங்கள்.

அடுத்த தலைமுறைக்கு வேத தர்ம பரிபாலனத்தை எடுத்து செல்லும்.. .. மஹா பிரபுக்கள்... அவர்களால் மட்டுமே.. நமது தலைமுறை கரையேறும்...
வேறு எந்த படிப்பும் நமது இறுதி யாத்திரை க்கு கூட வராது.. இவர்களால் மட்டுமே நம்மை கரையேற்ற முடியும்.

இதைக் கூட
புரிந்து கொள்ளாத மூர்க்க கூட்டம், அவர்களுக்கு கொடுக்க கூடிய சம்பாவனையை, கூலி போல கருதி , ஒவ்வொரு கார்யத்திற்கும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர்.

தயவு செய்து... வேத வித்வான் களை... டாக்டர், ஆடிட்டர், இன்ஜினியர் போன்ற வர்களைவிட அதிகம் மரியாதை செலுத்த வேண்டிய அவசியம் மற்றும் நமது கடமையுங் கூட..

நம்மை சுற்றி உள்ள பாடசாலை க்கு, மாதம் ஒரு முறை யாவது சென்று.. அவர்களுக்கு அன்னமிட்டு.. என்ன கைங்கர்யம் செய்ய முடியுமோ அதை செய்து... வேத பண்டிதர்களை
மதித்து,..

நமது குல குரு அருளைப் பெறுவோம். ..

Whatsapp share
TKS to Cuddalore Jayaraman

22/02/2024 அன்று சேவா சங்கம் 2017 அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடைபெற்ற சமஷ்டி உபநயன விழா மிக சிறப்பாக நடைபெற்றது.சேவா...
28/02/2024

22/02/2024 அன்று சேவா சங்கம் 2017 அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடைபெற்ற சமஷ்டி உபநயன விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

சேவா சங்கம் 2017 அறக்கட்டளை சார்பில் இரண்டு சிவாச்சாரிய குழந்தைகளுக்கு உபநயனம் மற்றும் ப்ரம்மோபதேசம் செய்து வைக்கப்பட்டது.

அறக்கட்டளை சார்பில் கல்யாண மண்டபம், இரண்டு நாட்களுக்கு சுமார் 450/- பேருக்கான அறுசுவை உணவு,தம்பதிகள் மற்றும் குழந்தைக்குக்கான மாலைகள், வாத்தியார், இரண்டு நாள்களுக்கு வாத்தியம்,சபை சீர்பட்சணங்கள், போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சிவாச்சார்யார்கள் குழந்தைக்கு சிவாச்சாரியார் அமைப்பை கொண்டு சமஷ்டி உபநயன நடந்தது அண்மையில் இது தான் முதல் தடவை மற்றும் மிகவும் சிறப்பாக இருந்தது என்று அந்த குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சி ததும்ப நன்றி தெரிவித்தார்கள்.

இதற்கு ஆதரவு அளித்த அனைத்து சிவாச்சாரிய சொந்தகளுக்கும் சேவா சங்கம் 2017 அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது போன்ற சத்காரியங்கள் அறக்கட்டளை சார்பாக வருங்காலங்களில் நிறைய நடத்த போவதாக அறக்கட்டளை மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

23/02/2024
06/02/2024

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aadhisaiva Sivachariyarkal - Trust Seva Sangam 2017 Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aadhisaiva Sivachariyarkal - Trust Seva Sangam 2017 Charitable Trust:

Share