Tamilnadu Unani Medical Association

Tamilnadu Unani Medical Association Dr.J.Ershad - President
Dr.J.Syed Mohammed Zafar - General Secretary
Dr .M.Imtiyaz Ahmed - Finance Secretary

12/02/2026

09.02.26 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்தாவது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச யுனானி மருத்துவ முகாம் துவக்க விழாவில் யுனானி மருத்துவர் Dr.Mohammed,B.U.M.S., அவர்கள் நன்றியுரை நிகழ்த்திய தருணம்...

12/02/2026

09.02.26 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்தாவது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச யுனானி மருத்துவ முகாம் துவக்க விழாவில் மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (DSMO) Dr.S அன்னகாமு ,MD( சித்தா) அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய கசாயம் ஜோஷாந்தா சுஆல் மற்றும் எலும்பு மூட்டுக்கு வலு சேர்க்கக்கூடிய ஹரீரா என்ற பாயாசமும் வழங்கி மருத்துவ முகாமை துவங்கிய தருணம்...

12/02/2026

09.02.26 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்தாவது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச யுனானி மருத்துவ முகாம் துவக்க விழாவில் மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (DSMO) Dr.S அன்னகாமு ,MD( சித்தா) அவர்களுக்கு தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்கத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கிய தருணம்...

12/02/2026

09.02.26 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்தாவது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச யுனானி மருத்துவ முகாம் துவக்க விழாவில் தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் Dr.J.Ershad,B.U.M.S., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய தருணம்...

12/02/2026

09.02.26 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்தாவது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச யுனானி மருத்துவ முகாம் துவக்க விழாவில் தமிழ்நாடு யுனானி மருத்துவச் சங்க மாநில தலைவர் Dr.J.Ershad,B.U.M.S அவர்களின் யுனானி மருத்துவ அறிமுக உரை...

11/02/2026

09.02.26 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்தாவது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச யுனானி மருத்துவ முகாம் துவக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன்...

11/02/2026

இன்று பிப்ரவரி 11 தேசிய யுனானி தினமாக மத்திய மாநில அரசுகளாலும் அனைத்து யுனானி மருத்துவர்களாலும் கொண்டாடப்படுகிறது..

தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்கத்தின் சார்பாக 10வது தேசிய யுனானி தினம் மற்றும் இலவச மருத்துவ முகாம் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி பெற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.02.26 திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்க தலைவர் Dr. J. இர்ஷாத்,B.U.M.S., அவர்கள் வரவேற்புரை மற்றும் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.. மதுரை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் Dr.S அன்னகாமு,MD (சித்தா) அவர்கள் வாழ்த்துரை வழங்கி இலவச மருத்துவ முகாமை துவங்கி வைத்தார்கள். மதுரை காலங்காலகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி சித்த மருத்துவ அலுவலர் Dr. விமலா ராணி,B.S.M.S., அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது..

தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்க மாநில செயலாளர் Dr.Syed Mohammed Zafar, பொருளாளர் Dr.Imtiyaz Ahmed, தலைமை செயற்குழு உறுப்பினர் Dr.Mohammed Nayeemullah,தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த யுனானி மருத்துவர்கள் Dr.Muhammed,Dr.Dasthahir,Dr.Syed Turabudeen,Dr.Farha Nafees,Dr.Rasool Shareef,Dr.Thaha Yusuf ஆகியோர் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்தனர். யுனானி மருத்துவர் Dr. முஹமது அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.

மருத்துவ முகாமில் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் யுனானி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொதுமக்களும் அரசு அலுவலர்களும் இந்த மருத்துவ முகாமில் இலவச ஆலோசனை மற்றும் மருந்துகள் பெற்று பயன் அடைந்தனர் . சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது...

மாலையில் மருத்துவ முகாமில் பயனடைந்த பொதுமக்களின் வருகை பதிவேடு, சிகிச்சையின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் சமர்ப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த பணியை பாராட்டினார்கள். மேலும் தமிழ்நாடு யுனானி மருத்துவ சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் Shri.K.J.Praveen Kumar,I.A.S.,அவர்களுக்கு பொன்னாடை கொடுத்து கௌரவம் செய்யப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ஐயா அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

இலவச மருத்துவ முகாமிற்கு மருந்துகளை இலவசமாக வழங்கிய IMPCOPS நிறுவனத்தின் தலைவர் Dr கண்ணன் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. IMPCOPS நிறுவனத்தின் Director Dr.P.C Suresh Babu அவர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து நன்றி தெரிவிக்கப்பட்டது

The Tahreek-e-Unani Medical Organization, Tamil Nadu Unani Medical Association, and Tamil Nadu Unani Doctors Forum (TNUD...
29/10/2025

The Tahreek-e-Unani Medical Organization, Tamil Nadu Unani Medical Association, and Tamil Nadu Unani Doctors Forum (TNUDF) jointly organized a one-day seminar on the topic "Challenges and Opportunities for Unani Medicine Development" at the Islamiah College in Vaniyambadi on 26.10.25. Hundreds of Unani doctors from Vellore, Tirupathur, and surrounding districts participated in this event.

The event was inaugurated by Dr. Imthiyaz Ahmed with reciting some versions of Quran.Dr.Ifthikhar Ahmed & Dr.Farhan Ahmed Hosted the whole event.Dr.Afzal Khan moderated the stage..Dr. Ifthikhar Ahmed, President of the Tamil Nadu Unani Doctors Forum, delivered the welcome address. Then, the college principal and correspondent Janab Khaiser Ahmed Sahib was honored with shawl and Memento for token of respect .

Following this, Dr. J. Ershad, President of the Tamil Nadu Unani Medical Association, welcomed everyone and invited Dr. Prof. Nadeem Afroze, PhD, who is a professor of the college who provided full cooperation for the event, to the stage. He was also honored with a souvenir shawl.

Next, Dr. Athar Parvez Ansari, MD, Chief Research Officer at the Regional Research Institute of Unani Medicine in Royapuram, Chennai, gave a Powerpoint presentation explaining the disease "Gout" and Unani medical internal and external treatment methods.

Then, Dr. Farooqui Shazia Parveen, MD, PhD, Research Officer at the same center, gave a presentation explaining Unani medical external treatment methods (Ilaj Bil Tadbir)

Thereafter, Dr. Hakeem Imamuddin Ahmed, former Principal of the Government Unani Medical College, gave a presentation on the topic "Psoriasis Disease - Unani Medicine." The explanation with before and after treatment photos was beneficial to Unani doctors.

Next, Dr. Mussadiq Ahmed, a third-year postgraduate student of Government Unani Medical College in Chennai, explained the Career Guidance for postgraduate studies through a ppt. This talk was helpful and encouraging for young Unani doctors.

After that, Dr. Khaiser Rabee, MD, Professor at the Government Unani Medical College, delivered an inspiring speech on the significance of Unani medicine, its current status, and today's need for Unani medical practice.

Then, Dr. Shajahan, President of the Hippocrates Academy, explained the legal issues faced by Unani doctors and their solutions, supported by central and state government laws.

Following this, Dr. Ershad, President of the Tamil Nadu Unani Medical Association, detailed through PowerPoint presentations the contributions made so far by the Tahreek-e-Unani Medical Organization and the Tamil Nadu Unani Medical Association, and explained future plans.

Later, Dr. Syed Imaduddin, Founder and Chief Medical Officer of Herbicure Unani Speciality Hospital, excellently explained through a ppt how to start, operate effectively, and manage a Unani medical clinic and hospital.

Finally, Dr. Ifthikhar Ahmed, President of the Tamil Nadu Unani Doctors Forum, explained the difficulties encountered in general medical practice and their appropriate solutions through a presentation.

Souvenir mementos were presented to all speakers as a mark of honor. Thanks were extended to all the participating doctors.

***

By the grace of Allah, Tahreek-e-Unani Medical Organization and Tamil Nadu Unani Medical Association organized our 38th ...
28/08/2025

By the grace of Allah, Tahreek-e-Unani Medical Organization and Tamil Nadu Unani Medical Association organized our 38th CME (Continuing Medical Education) program at Daarushifa Medical and Research Foundation, MMDA Colony, Chennai on 24.08.2025.

Prof. Hakeem Dr. Syed Imamuddin Ahmed,
Chairman - Ethical Committee,RRIUM, Chennai,
Member - Scientific Committee, CCRUM, New Delhi,
Former Principal, Govt. Unani Medical College, Chennai,delivered an excellent lecture on

*Psoriasis and Other Skin Diseases – Solutions in Unani Medicine* .

He presented successful case histories along with before and after treatment images using a PowerPoint presentation.His lecture boosted the confidence of Unani doctors to treat skin diseases with Unani medicines.

We had a Question & Answer session. It was wonderful that Prof. Hakeem Syed Imamuddin Ahmed Sir clarified the doubts of the Unani doctors through his own clinical experiences and formulations.May Allah accept all his efforts and grant him a long and healthy life. Aameen.

Dr. Imtiyaz Ahmed, Financial Secretary of Tahreek-e-Unani Medical Organization and TN-UMA, organized the program excellently.We thank all the participating doctors for making this program a grand success.Jazakallahu Khair.

Together we achieve more.

Regards,
Tahreek-e-Unani Medical Organization &
Tamil Nadu Unani Medical Association

Six-Day CME Programme on Musculo-Skeletal Disorders for Unani DoctorsVenue: Regional Research Institute of Unani Medicin...
26/08/2025

Six-Day CME Programme on Musculo-Skeletal Disorders for Unani Doctors

Venue: Regional Research Institute of Unani Medicine (RRIUM), Royapuram, Chennai

Dates: 18th to 23rd August 2025

Participants: 30 Unani doctors from various states in India

Event Highlights:

The programme began on 18th August 2025 with a welcome address by Dr. Athar Parvez Ansari, Research Officer (U)S-2, RRIUM, Chennai.

Special Guest: Dr. K. Narayanasami, Vice Chancellor, Tamil Nadu Dr. MGR Medical University.

Key speeches were delivered by Dr. Syed Imamuddin Ahmed (former Principal, Unani Medical College) and Prof. Dr. N.J. Muthukumar (Director General, Central Council for Research in Siddha Medicine).

The training course was inaugurated virtually by Dr. Zaheer Ahmed, Director General, Central Council for Research in Unani Medicine (CCRUM), who also delivered the Presidential address.

Vote of thanks was given by Dr. Farooqui Shazia Parveen, Research Officer, RRIUM.

The coordinators of the programme were Dr. Athar Parvez Ansari and Dr. Farooqui Shazia Parveen.

The entire team at RRIUM—including research officers, departmental researchers, and office staff—collaborated to ensure the smooth conduct of the programme.

Significance:

This CME was highly beneficial for both government and private Unani doctors, aiming to upgrade their knowledge and familiarize them with modern Unani medical research and treatment methodologies related to musculo-skeletal disorders.

Acknowledgment:

On behalf of the Tamil Nadu Unani Medical Association and Tahreek e Unani Medical Organization, appreciation and gratitude were extended to the entire team at RRIUM, Chennai, for their dedicated efforts.

*9வது தேசிய யுனானி தினம்- பிப்ரவரி 11,2025*        *மசீஹுல் முல்க்* என்று அழைக்கப்படும் *ஹக்கீம் அஜ்மல் கான்* அவர்களின் ...
11/02/2025

*9வது தேசிய யுனானி தினம்- பிப்ரவரி 11,2025*

*மசீஹுல் முல்க்* என்று அழைக்கப்படும் *ஹக்கீம் அஜ்மல் கான்* அவர்களின் பிறந்த நாளாகிய *பிப்ரவரி 11ஆம்* தேதி ஒவ்வொரு ஆண்டும் *தேசிய யுனானி தினமாக மத்திய அரசாலும் ,ஆயுஷ் அமைச்சகத்தாலும்* அனுசரிக்கப்படுகிறது.

ஹக்கீம் அஜ்மல் கான் அவர்கள் *1868 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம்* நாள் ஒரு பாரம்பரியமிக்க யுனானி மருத்துவ குடும்பத்தில் பிறந்தார்.

ஹக்கீம் அஜ்மல் கான் அவர்கள் *புகழ் பெற்ற மருத்துவராகவும்,*
*பல்துறை மேதையாகவும்* ,
*சிறந்த அறிஞராகவும்* , *சமூக சீர்திருத்தவாதியாகவும்* , *சுதந்திரப் போராட்ட வீரராகவும்,* *யுனானி மருத்துவ கல்வியாளராகவும்,*
*யுனானி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியில்* முன்னோடியாகவும் திகழ்ந்தார்கள் ..

மருத்துவ கல்வியை முடித்த பின் 1892 ஆம் ஆண்டு ராம்பூர் நவாபின் அரசவை மருத்துவராக பணியாற்றினார். டெல்லி கரோல் பாகில் *ஆயுர்வேதிக் மற்றும் யுனானி மருத்துவ கல்லூரி* நிறுவினார். இக்கல்லூரியை நமது *தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள்* அவர்கள் 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் ஆரம்பித்து வைத்தார்கள் .

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான *ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தின்* நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.1905ஆம் ஆண்டு *ஹிந்துஸ்தான் தவா கானா* என்ற மருந்து செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்கள். *டெல்லி மத்திய கல்லூரியையும்*
( *Central College in Delhi)* நிறுவினார்..

இவரது மருத்துவ சேவையை பாராட்டி *பிரிட்டிஷ் அரசாங்கம்* இவருக்கு *ஹாஜிகுள் முல்க்(Haziqul Mulk)* என்ற பட்டத்தையும் தங்கப்பதக்கத்தையும்,
*Qaiser e Hind* என்ற பட்டத்தையும் அளித்தது.தன் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக அந்த *பட்டங்களை திருப்பி அளித்தார்* .

இவருடைய பாட்டன் அவர்களால் நடத்தப்பட்ட *ஷெரிப் மன்ஜில் மருத்துவமனை* ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தது.

1921 ஆம் ஆண்டு *இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக* பதவி வகித்தார். *முஸ்லிம் லீக் மற்றும் கிலாபத் கமிட்டியின்* தலைவராகவும் பதவி வகித்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் *மகாத்மா காந்தி,* *நேரு, மௌலானா ஆசாத், லாலா லஜ பதிராய், அலி சகோதரர்கள்* போன்ற தேசத் தலைவருடன் இணைந்து போராடினார்கள் .

நாட்டிற்கு சேவை செய்வதற்காக தனது உடல் நலம், சந்தோசம்,பொருளாதாரம் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். *1927 ஆம் ஆண்டு டிசம்பர் 29 இல்* இம்மண்ணை விட்டு மறைந்தார்கள்.

*இந்திய அரசு 1987* ல் ஹக்கீம் அஜ்மல் கான் அவர்களை கௌரவிப்பதற்காக *அஞ்சல் தலையை*(Stamp) வெளியிட்டுள்ளது...

இன்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் *அரசு யுனானி மருத்துவ கல்லூரிகளும்,* ( *Government Unani Medical Colleges)யுனானி மருத்துவமனைகளும் (Govt.Unani Hospitals),* *மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களும்* ( *Central Research Institutes of Unani Medicine)* *மண்டல யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களும்* *(RRIUM-Regional Research Institute of Unani Medicine)* சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும், மக்களுக்கு பாரம்பரிய மருத்துவ சேவை செய்வதற்கும் *ஹக்கிம் அஜ்மல் கான் அவர்கள் தான் அடித்தளமாக அமைந்தார்கள்* என்று சொன்னால் அது மிகையாகாது....

மரு.இர்ஷாத்,B.U.M.S.,
தலைவர்,தமிழ்நாடு யுனானி மருத்துவச்சங்கம்..

Address

#82/4, Thiruvenkedaswamy Street, Pulianthope, (Near G3 Police Station), Chennai/
Chennai
600012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Unani Medical Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share